Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
றொட்டி கதை
#1
வேதாரண்யத்தில் நடந்த ஜெ., பிறந்த நாள் கூட்டத்தில் நடிகர் செந்தில் கூறிய கதை

ஒரு ஊரில் கணவன், மனைவி இருந்தனர். அவர்கள் வீம்பு பிடித்தவர்கள். கணவன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் பணம் சம்பாதித்து வரும்படி மனைவி திட்டினார். இதனால் வெளியே சென்ற கணவன், தன் நண்பர் ஒருவரை பார்த்து தனது குடும்பம் சாப்பாட்டுக்கு கஷ்படுவதாக கூறினார்.

கஞ்சனான அந்த நண்பர் ரூ.10 கொடுத்து நீ சாப்பிட்டுக்கொள் என்றார். கணவனோ அந்த ரூபாய்க்கு மாவு வாங்கி கொண்டு வந்து தனது மனைவி கண்ணம்மாவிடம் கொடுத்து ரொட்டி சுடச்சொன்னார். 3 ரொட்டி சுட்ட மனைவி தனக்கு ரெண்டும், கணவனுக்கு ஒன்று என்றும் பங்கு பிரித்தார். அதை கணவன் ஏற்கவில்லை.

ஆளுக்கு ஒன்றரை ரொட்டி என பிரிக்க கணவர் கூறினார். மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் யார் பேசாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு 2 ரொட்டியும், பேசியவர்களுக்கு ஒரு ரொட்டியும் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

இரவு துவங்கிய சம்பவம் விடிந்தும் முடியவில்லை. இருவரும் அசந்து தூங்கி விட்டனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இருவரும் இறந்து விட்டனர் என நினைத்து மயானத்துக்கு கொண்டு சென்று எரியூட்டினர். சூடு தாங்காமல் இருவரும் வீட்டுக்கு ஓடிவந்தனர்.

அதற்குள் அந்த ரொட்டி மூன்றையும் கருப்பு நாய் ஒன்று திண்று விட்டது. கணவன், மனைவி ஏமாந்து போயினர். இந்த கதையில் கணவன், மனைவியும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினர். கருப்பு நாய் கருணாநிதி.
.

.
Reply


Messages In This Thread
றொட்டி கதை - by Birundan - 03-21-2006, 11:33 AM
[No subject] - by SUNDHAL - 03-22-2006, 08:11 PM
[No subject] - by putthan - 03-24-2006, 02:12 PM
[No subject] - by SUNDHAL - 03-25-2006, 03:10 PM
[No subject] - by putthan - 04-01-2006, 03:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)