Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரலாறு
#4
போர்த்துக்கேயர் மட்டக்களப்பை 1622ல் கைப்பற்றி ஒல்லாந்தர் அதனை 1639ல் கைப்பற்றும் வரை தம் வசம் வைத்திருந்தனர். பின்பு கண்டி அரசன் பிடிபட்டவுடன் அதாவது 1815ம் ஆண்டு பங்குனி 2ம் திகதி செய்யப்பட்ட பிரகடணத்தின் கீழ் கிழக்குப் பிரதேசத்தின் புற எல்லைப்பகுதிகளும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1833.10.01ந் திகதி பிரகடணத்தின் பிரகாரம் நிர்வாக நோக்கத்திற்காக நாடு ஜந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டு திருகோணமலை அதன் தலைநகராக்கப்பட்டது.

அன்றைய கிழக்கு மாகாணம், தற்போதுள்ள வடமத்திய மாகாணத்தின் பிந்தனைப் பகுதியையும் || மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டம்|| என அப்போதிருந்த பகுதியையும் உள்ளடக்கி இருந்தது. பின்னர் 1837ம், 1873ம் ஆண்டுகளில் முறையே பிந்தனை மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. 1870ம் ஆண்டு மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் தலைநகராக்கப்பட்டு திரு.ஆர்.டபிள்யுூ.ரி. மொறிஸ் முதலாவது அரசாங்க அதிபராக புதிய தலைமை அலுவலகத்தில் அமர்த்தப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தின் மூன்றாவது மாவட்டமாக 1961.04.10ல் அம்பாறை அமைக்கப்பட்ட போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாகம் பிரிக்கப்பட்டது. அத்துடன் 1963ல் அம்பாறை மாவட்டத்தில் கச்சேரி உகனையில் நிறுவப்பட்டது.



<span style='font-size:25pt;line-height:100%'>பிரதேசம் </span>


மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறக்குறைய 2632. 7 ச.கி.மீற்றராகும். இதில் 168.3 ச.கி. மீற்றர் நீர்ப்பரப்பாகும். இதன் வட எல்லை திருகோணமலை மாவட்டத்தையும் வெருகல் ஆற்றையும் கொண்டது. அதன் வடமேற்கும், வடமேற்கின் ஒரு பகுதியும் பொலனறுவை மாவட்டத்தை ஒரு எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கும், தென்மேற்கும், மேற்கின் ஒரு பகுதியும் அம்பாறை மாவட்டத்தை எல்லையாகவும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும் எல்லையாகக்கொண்டுள்ளது. நீர்ப்பரப்பான மட்டக்களப்பு ஏரி மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 73.6.கி.மீ. வெருகல் வரையும் தெற்கே 32.6.கி.மீ துறைநீலாவணை வரையுமுள்ளது. இந்த ஏரி மட்டக்களப்பு மாவட்டத்தை இரு பகுதிகளாகப் பிரித்துள்ளது. கிழக்கு கடலோரப்பகுதி பிரதான குடியிருப்புப் பகுதியாகும். மேற்கின் பெரும் பகுதி வயல் நிலங்களாக அமைந்துள்ளது. இம் மாவட்டமானது மொத்தப் பரப்பளவின் 3.8 வீதத்தினையும் நாட்டின் சனத்தொகையில் 2.2 வீதத்தினையும் வகிக்கின்றது.



பௌதீகத் தோற்றங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலத்தோற்றம் சமதரையாகவும், கடல் மட்டத்திலிருந்து 10 மீற்றர் உயரத்திற்குட்பட்டதாகவும், அலைவரிசையான வண்டல் சமதரையாகவும் அமைவதோடு, ஊவா, மத்திய மாகாணங்களில் இருந்து பாயும் ஆறுகளையும் சிற்றாறுகளையும் கொண்டுள்ளது.

முழு மாவட்டமும் வரட்சி வலையத்திற்குள் அமைவதால் எல்லா சிற்றாறுகளும், ஆறுகளும் பருவகாலத்தவையாகும். திருகோணமலை மாவட்டத்தையும், மட்டக்களப்பையும் வெருகல் ஆறு பிரிக்கின்றது. மகிழவெட்டுவான் ஆறும், முந்தனை ஆறும், மாதுரு ஓயாவும் ஏனைய பிரதான பருவகால ஆறுகளாக உள்ளன.



பொருளாதாரம்


மாவட்டத்தின் பொருனாதாரம் பிரதானமாக விவசாயத்திலும், மீன்பிடித் தொழிலிலும் தங்கியுள்ளது. இம்மாவட்டம் கிழக்கின் தானிய உற்பத்திக் களஞ்சியம் எனச் சிறப்பாகக் குறிப்பிடப்படுவதோடு வரலாற்றுக் காலம் முழுவதும் தேவைக்கு அதிகமான நெல்லை உற்பத்தி செய்துள்ளது. மாவட்டத்தின் முயற்சியுள்ள சனத்தொகையில் ஏறக்குறைய 31 மூ மானோர் விவசாயத்திலும் அதேசமயம் 18மூ மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் பாரிய விவசாய நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. இப்பகுதிகள் நிலப்பரப்பின் 10மூ வீதத்தையும் மக்கள் தொகையில் 80மூ தையும் கொண்டுள்ளன. பொருளாதார hPதியாக இயங்கும் தொழிலாளர் தொகுதியில் விவசாயத்துறையைச் சார்ந்த நாள் வேலை செய்பவர்களே முக்கிய அங்கமாவார்கள்.

1981-1990 காலப்பகுதியில் (கிழக்கு மாகாணத்தின் உறுதி செய்யப்படாத கணக்கீடுகள்) மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 1.9மூ எதிர்மறையாக இருந்ததாக எடுத்துக் காட்டப்படுகின்றது. இது மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சிப் பாங்கை ஓரளவு சுட்டிக் காட்டுவதாக அமைகிறது. கடந்த 6-9 வருடங்களாக மாவட்டத்தில் நிலவும் சாதகமற்ற நிலைமை காரணமாக விவசாய- உற்பத்தி, மீன்பிடித் தொழில் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் திறந்த பொருளாதாரத் கொள்கை, ஒரு காலத்தில் வளமிக்கதாக இருந்த கைத்தறித் தொழிலையும் பாதித்தது. எனினும் தற்பொழுது அதற்குப் புத்துயிர் ஊட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Reply


Messages In This Thread
வரலாறு - by விதுரன் - 06-08-2003, 12:33 PM
[No subject] - by Guest - 06-09-2003, 01:31 PM
[No subject] - by sethu - 06-21-2003, 10:27 AM
[No subject] - by sethu - 06-25-2003, 07:10 PM
[No subject] - by sOliyAn - 06-25-2003, 11:27 PM
[No subject] - by sethu - 07-11-2003, 08:05 PM
[No subject] - by GMathivathanan - 07-11-2003, 09:06 PM
[No subject] - by sethu - 07-12-2003, 09:19 AM
[No subject] - by P.S.Seelan - 07-12-2003, 11:14 AM
[No subject] - by sethu - 07-13-2003, 09:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)