Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணா குழுவின் ஆயுதங்களை விடுதலைப் புலிகள்தான் களைய வேண்டும்
#1
கருணா குழுவின் ஆயுதங்களை விடுதலைப் புலிகள்தான் களைய வேண்டும்: முன்னாள் இராணுவத் தளபதிகள்
சிறிலங்கா இராணுவத்துடன் துணை இராணுவக் குழுவான கருணா குழு இயங்குகிறது என்றும் அவர்களின் ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் களைய வேண்டும் என்றும் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு இராணுவ தளபதிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள்:

ஜெனரல் லயனல் பலகல்ல:

கருணா குழுவைத் தவிர வேறு ஒரு ஆயுதக்குழு அப்பகுதிகளில் இயங்குவதாக நான் நினைக்கவில்லை. இது உள்விவகாரம் என்றும் கட்டுப்படுத்திக் கொள்வதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆகையால் அக்குழுவின் ஆயுதக் களைவு தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏதும் இல்லை.

ஜெனரல் ஹமில்டன் வனசிங்க:

கிழக்குப் பிரதேசத்தில் கருணா குழு மட்டுமே இயங்குகிறது. கருணா குழுவின் ஆயுதக் களைவை மேற்கொண்டால் யுத்தம் நடக்கும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது கருணா, புலிகளுடன் இருந்தார். அப்போது ஆயுதக் குழுவினராக இருந்த புளொட், ஈ.பி.டி.பி. ஆகியவை ஆயுதங்களைக் கையளித்துவிட்டன. கருணாவின் ஆயுதங்களைக் களைய வேண்டியது விடுதலைப் புலிகளின் பொறுப்பு.

ஏன் அரசாங்கம் கருணா குழுவினரது ஆயுதங்களைக் களைய வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. அது நமது பொறுப்பு அல்ல.

ஜெனரல் ஜெரி சில்வா:

கருணா குழுவின் ஆயுதங்களை நாம் கலைந்தால் கண்டிப்பாக அங்கு மற்றொரு யுத்தம் வரும். கருணா குழுவின் ஆயுதங்களைக் களைவது சரியானது அல்ல.

ஜெனரல் ரோகன் தளுவத்த:

கருணா குழுவின் ஆயுதக் களைவு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டால் அத்தகைய இராணுவ நடவடிக்கையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகும். எதுவித இராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டது.

புலிகளின் பிரதேசத்துக்குள் நுழைந்துதான் கருணா குழுவின் ஆயுதங்களைக் களைய வேண்டும். அந்தப் பகுதிக்குள் இராணுவம் நுழைவது என்பது சாத்தியமானது அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இல்லவே இல்லை என்று சிறிலங்கா அரசாங்கத் தரப்பு உறுதியாகக் கூறிவந்த நிலையில் கருணா குழுவினர் இயங்குவது உண்மைதான் என்று முன்னாள் இராணுவத் தளபதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதேபோல் கருணா குழு விடயம் தமது உள்விடயம் என்று விடுதலைப் புலிகள் முன்னர் கூறியிருந்தமையால் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் அக்குழுவினரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர்.

சிறிலங்கா முன்னாள் இராணுவ தளபதிகள் வெளியிட்டுள்ள கருத்துகளின் படி, கருணா குழுவினர் இயங்கி வருவது உண்மையாகி உள்ளதால் அவர்களை சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமா? அல்லது இராணுவத் தளபதிகள் கூறுவது போல் கருணா குழுவினரது ஆயுதங்களை விடுதலைப் புலிகளே களைய வேண்டும் என்பதைத்தான் அரசாங்கம் விரும்புகிறதா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
lankasri
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கருணா குழுவின் ஆயுதங்களை விடுதலைப் புலிகள்தான் களைய வேண்டும் - by தமிழரசன் - 03-20-2006, 05:29 PM
[No subject] - by Sujeenthan - 03-20-2006, 11:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)