Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான்
#5
இந்தியாவில் 45,000 வகையான செடிகளில் 20,000 செடிகள் மூளிகைகளாக பயன்பட்டு வருகின்றது. மூலிகை செடிகள் நாட்டுச்சிகிச்சை மற்றும் அலோபதி ஆகிய இரண்டு முக்கிய ஆரோக்கிய பராமரிப்பு முறைகளில் பயன்பெற்றுவருகிறது. சிகிச்சை முறைகளில் அடிப்படையில் மூலிகைகளை ஆயுர்வேதம், சித்தா, நாடோடி சிகிச்சை என முக்கியவைகளாக பிரிக்கலாம்.

மூலிகை செடிகளை பயன்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம் ஒன்று நேரிடையாக பிரிக்கலாம். ஒன்று நேரிடையாக செடிகளை உபயோகபடுத்துதல். நாட்டு சிகிச்சைதைலம், லேகியம், களிம்பு, கஷாயம், அரிஷ்டம், சூரணம், மாத்திரை ஆகியவை தயாரிப்பதற்கு என பயன்படுத்தி இந்தியாவில் 15 லட்சத்திற்கு மேலான வைத்தியர்கள் பயன்பெற்றுவருகிறார்கள்.

<b>இரண்டாவதாக செடிகளிலிருந்து </b>கிடைக்கக்கூடிய சத்துக்களும் மருத்துவ குணம் கொண்ட பாகங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய முக்கிய சத்துக்கள் சிட்டமருது, நெருஞ்சி, நெல்லிக்காய், நீர்ப்பரம்மி, கொடம்புளி, <b>சர்க்கரை கொல்லி,</b> வசம்பு, டலோடகம், சோற்றுக்கற்றாழை, சுடுகாட்டுமல்லி, சர்பகந்தி, செங்காந்தன் மலர் ஆகிய <b>மூலிகை செடிகளிலிருந்து </b>கிடைக்கிறது.

<b>மூன்றாவதாக செடிகளிலிருந்து</b> ரசாயன பொருட்களை பிரித்து அலோபதி சிகிச்சைக்காகவும், ஏற்றுமதிக்காகவும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக டலோடகம்-வாஸஸின், சிறுகுறிஞ்சான், ஆன்ட்ரோ கிராபைட், நீர்பரம்பி-பாகோசைட், மஞ்சள்-குர்குமின், <b>சர்க்கரை கொல்லி</b>, ஜிம்னிக் அமிலம், சிட்டமருது(!) , டினோஸ்போரின் போன்ற ரசாயன பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

பல்வேறு பயன்பாடுகளில் கீழ்காணும் மூலிகை பயன் பெற்று வருகின்றது.

1. அழகு பாதுகாப்பிற்காக:- சோற்றுக்கற்றாழை, மஞ்சள், குங்குமப்பூ.

2.ஆரோக்கிய உணவு பதார்த்தங்களில் வண்ணம் அளிப்பதற்காக:- மஞ்சள், சிவப்பு, சந்தனம், நீலயமரி, குப்பமஞ்சள், வேங்கை, கருங்காலி.

3. நோய் எதிர்ப்பு தன்மையை உருவாக்க:- அடபதியன், வெள்ள முசிரி, ரோக்கிய பச்சை, அமுக்குரா

4. ஆரோக்கியம் மற்றும் புத்தி வளர்ச்சிக்காக:- துளசி.

5. வைரஸ் நோய்களுக்கு எதிர்ப்பாக:- நீர் ப்ரம்பி, வசம்பு, <b>அமுக்குரா(இந்த முலிகையைத்தான் அமெரிக்கா திருடி வயக்ரா என்னும் மாத்திரையாக மாற்றியுள்ளது via+ amukra இதுதான் பொருள்)</b> விஷ்ணுக்ராந்தி.

6. அல்சர்க்கு எதிராக:- சித்தரத்தை, சதாவரி, வாழைக்காய்.

7. வேளாண்மையில் பூச்சி நிர்வாகத்தில்:- புங்கமரம், வேம்பு, மரோட்டி, வசம்பு, <b>சிறு குறிஞ்சான். </b>

8. வாசனை தைலம் தயாரிப்பில்:- ரோஸ்மேரி, பச்சோளி, புதினா.

பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்ட தாவரங்களை அழிவுகளிலிருந்து பாதுகாப்பதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பதோடு உயிரினங்களை பாதுகாக்கலாம்.


நன்றி - பண்டிதர்

<b>அழுத்தம் எனது</b>
!




-
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 03-15-2006, 06:39 PM
[No subject] - by RaMa - 03-20-2006, 01:15 AM
[No subject] - by அருவி - 03-20-2006, 05:15 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-20-2006, 06:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)