03-20-2006, 06:41 AM
Quote:இங்கே போரட்டம் என்பது தமிழ் மக்களைப்பாதுகாக்க,அவர்களின் அடிப்படை மனித உரிமையான வாழும் உரிமயைப் பாதுகாக்க நடத்தப் படுகிறது.புலிகளே தமிழ் மக்களின் கவசம்.அவர்கள் இல்லாமல் எமக்கு எந்தப் பாதுகாப்போ,விடுதலையோ கிடயாது.இந்த மனித உரிமைவாதிகள் என்ன செய்துள்ளார்கள்?இவர்களால் கொல்லப்பட்ட,சித்திரவதைக் குள்ளாக்கப்பட்ட, தமிழ் மக்களைப் பாதுகாக்க முடிந்ததா?செம்மணி முதல் ,பிந்தரன்வல வரை எத்தனை படுகொலைகல்?
நான் ஒருபோதும் இல்லையென்று சொல்லவில்லையே. மேற்குறித்த கருத்துதை நான் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதற்கும் "ஒற்றன்" மற்றும் "துரோகி" என்று என்று கூலுக்கு முத்திரை குத்துவதற்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கிறது உமக்கு தெரியவில்லையா? கூல் வந்து தமிழ்மக்களுக்கு புலிகள் போன்ற ஒரு கவசமாக இருக்கவேணும் என்கிறீரா? அல்லது கூல்தான் செம்மணிக்குக் காரணம் என்கிறீரா.... சத்தியமா விளங்கேல்லை... மன்னிக்கவேணும் நீர் சொல்லும் கருத்துக்கள் பெரும்பாலானவற்றில் உண்மை இருக்கிறது. ஆனால் இந்தக்கருத்துக்கும் ஹூலை துரோகி, ஒற்றன் என்று அழைப்பதற்கும் இருக்கும் connection தான் எனக்கு இன்னும் பிடிபடவில்லை.
நீர் பிரதிசெய்த யதீந்திரா கட்டுரை உம்போன்றவர்கள் என்போன்றவர்களை ஏன் சந்தேக கண்கொண்டு பார்க்கிறார்கள் என்பதை சரியாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற சந்தேகங்களை தகர்த்து, இதைவிட ஒருபடி மேலே செல்லவேண்டிய கட்டாயம் எமது இனத்துக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் நான் இங்கு கூற முற்படுகிறேன். முத்திரை குத்துவதை நிறுத்துங்கள் என்று சொன்னது இதைத்தான். இவன் ஒற்றன், இவன் துரோகி என்று எழுந்தமானமாக முடிவெடுக்காதீர்கள் என்பதே எனது வாதம். எமது தேசத்துக்கு பல்லாயிரம் மைல்களுக்கப்பால் என்போன்றவர்கள் இருந்தாலும் இங்கேயிருந்துகொண்டே என்போன்றவர்கள் என்ன செய்கிறோம் என்று முன்னரே தெரிந்திருந்தால் நீர் எனக்கு "துரோகி" பட்டம் கொடுத்திருக்க மாட்டீர் என்பது எனக்குத்தெரியும்.
நீர் எனக்குத் துரோகிப்பட்டம் கொடுத்ததால் நான் ஒன்றும் துரோகியாகிவிடப்போவதில்லை. ஆனாலும் ஒரு தேசப்பற்றாளனையே ஒருகுறுகிய காலத்தினுள் எவ்வளவு இலகுவாக துரோகியாக்கிவிட முடியும் என்பதை புரிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

