03-20-2006, 03:35 AM
<b>சகல நோய்களும் தீர வர்மப்புள்ளி குறிநிலை ஜீவசக்தி வாய்க்கால் நீட்டல் பயிற்சி</b>
Energy Meridian Stretches for Cure All Diseases
மனித உடம்பில் சக்தி(‘Qi’-Energy) 14 வாய்க்கால்களில் சதா ஓடியவண்ணம் இருக்கும். அப்படி ஓடியவண்ணம் இருந்தால் உடம்பில் எது நோயும் இருக்காது. இந்த வாய்க்கால்களில் எங்காவது தடை ஏற்பட்டால் தடை ஏற்பட்ட இடத்திற்கு மேற்பக்கத்தில் சக்தி கூடியும்(Engery Excess) தடை இருக்கும் இடத்திற்து கீழ்ப்பக்கத்தில் சக்தி குறைந்தும்(Energy Deficiency) இருக்கும். இதனால் பலவித நோய்களும் தோன்றி தடை நீடிக்குமானால் நோயும் படிப்படியாக கூடும். இந்தத்தடையை நீக்கினால் சக்தி சமனப்பட்டு நோய்கள் நீங்கிவிடும் என்பது எமது மூதாதையர்களாகிய சித்தர்களும் அகத்திமாமுனிவர் போன்ற வைத்திய வல்லுனர்களும் கண்டறிந்து கையாண்ட அபுூர்வ வைத்திய முறை. இதை அவர்கள் பாமர மக்கள் மத்தியில் அவர்களுக்கு போதிய அறிவாற்றல் இல்லாத காரணத்தால் கற்றுக்கொடுக்காது ஏட்டுச்சுவடிகளில் எழுதி வைத்தனர். எம் நாட்டில் அவர்களுக்கு பின் வாழ்ந்த சில சுயநல வைத்தியர்கள் தமது பரம்பரையினர்களுக்கு மட்டும் கற்பித்து வந்த காரணத்தால் அது மக்களிடையில் பிரபல்யமாகாது அழிந்து விட்டது. ஆனால் சீன தேசத்தவர் இதை மிகப்பிரபல்யமாக்கி ஜப்பான், கொறியா, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் மிக மதிக்கும் வைத்தியத்துறையாக்கி பல்வேறு நோய்களையும் எவரும் பிரமிக்கும்படி குணமாக்கச்செய்கின்றனர். இப்பெருமை சீனத்தேசத்தவரைச்சாரும். இந்த வைத்தியங்களாகிய குறிநிலை துழை(Acupuncture) , ஏனைய குறி நிலை அழுத்துமுறை(Acupressure) பிரதிபிம்ம நிலைஅழுத்து(Reflexology) வைத்திய முறைகளில் கையாளப்படும் சிகிச்சை முறைகளில் இந்த வர்மப்புள்ளிகளில் மென்மையான ஊசிகளை குத்தி ஊக்குவித்தல்; (Stimulating) அல்லது இப்புள்ளிகளை அழுத்துவதாகும். இந்த வர்மப்புள்ளி வாய்க்கால் நீட்டல் முறைப்படி, இந்த வாய்கால்களை நன்கு நீட்டிக்குறுக்கவதால் அவ்விடங்களில் தடைகள் ஏற்படாது. அப்படி தடைகள் ஏற்பட்டிருப்பின் அத்தடைகள் படிப்படியாக நீங்கி நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என்பது இந்த வர்ம ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை அப்பியாசமாகும். இதை தினந்தினம் பயிற்சித்தால் நோயின்றி வாழலாம்.
Thanks to Dr, S.V Pararajasingam, Ph.D
Scarborough, Canada

_/\_Only God Can Judge Me_/\_