03-20-2006, 12:36 AM
<b>இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்?</b>
என் கல்லூரி நாட்களில் நானும் நண்பர்களும் ஆலமர கிளப் ஒன்றை அமைத்திருந்தோம். சகல விஷயங்களும் பேசுவோம். சந்தோஷமாகப் பவனி வருவோம். எங்கள் ஹெல்மெட்களில் Ôமகிழ்ச்சியே மந்திரம் என்பது போல் எழுதிவைத்திருந்தோம். கல்லூரியைவிட அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது அந்த ஆல மர நிழலில்தான்.
இளமையில் அப்படி இருப்பதுதான் இயல்பு. அதை விட்டுவிட்டு, இன்றைக்குப் பத்து வயதாகும்போதே, கம்ப்யூட்டர் பயிலகத்தில் முட்டி மோதுபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
பள்ளி விடுமுறைக் காலத்தில்கூட தங்கள் குழந்தைகள் புதிதாக மண்டையில் எதையாவது புகுத்திக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். நான் இப்படிச் சொன்னதும், கம்ப்யூட்டர்தானே நாளைய உலகம்! என்ற கூக்குரல் கிளம்பும். தவறு.
அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும்
<b>மனிதன்தான் உலகை அமைக்கிறான். கம்ப்யூட்டர்கள் அல்ல. இயந்திரங்கள் அல்ல. </b>
இயந்திரங்கள் நாளுக்கு நாள் மாறும். செல்வாக்கை இழக்கும். ஒரு கட்டத்தில் உங்களால் நிராகரிக்கப்படும். அவை உபரிக் கருவிகள். ஆனால், மனிதகுலம்தான் அன்றும், இன்றும், என்றும் உலகின் மூல சக்தியாக இருக்கிறது.
விளையாட வேண்டிய வயதில், வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற அச்சம் ஒருநாளும் உங்களை செலுத்த அனுமதிக்காதீர்கள். வாழ்க்கை பற்றிய பொறுப்பு இருக்கலாம். கவலை கூடாது. ஏனென்றால், சந்தோஷத்தினால் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். கவலையினால் அல்ல!
நன்றி:
<img src='http://www.vikatan.com/av/2006/mar/26032006/p162.jpg' border='0' alt='user posted image'>