03-19-2006, 08:07 PM
டக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.
ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற புஸ்பராஜாவின் புத்தகத்தை நானும் வாசித்தேன். அவர் சிறையில் வேதனைகளை அனுபவித்தார் என்று அறியமுடிந்தது. அவரைவிட மிகவும் கொடுமையான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவித்த பலர் மண்ணோடு மண்ணாக மாண்டுபோனார்கள்;சிலர் தற்போதும் வாழுகின்றார்கள். அவர்களையும் நாம் நினைவுகோர வேண்டும்.
ஒருவர் தனது கொள்கையிலிருந்து எப்போது வழுவி, கொண்ட கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றாரோ, அப்போதே அவர் தனது முந்தைய சிறப்புத் தகுதிகளை இழந்து சாதாரணமானவராகின்றார், அல்லது துரோகியாகின்றார். எமது போராட்டத்தில் பல உதாரணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியத்தைப் படிக்கும்போது வந்த கேள்விகள்.
1. மக்களின் செயற்பாடுகள் புஸ்பராஜா எதிர்பார்த்ததைவிட
மிகவும் தீவிரமாக இருந்தன. மாணவர் அமைப்பினர், மக்களின் விருப்பம் என்னவென்பதை அறிந்து மக்களை அரசியல் மயப்படுத்த முடியாமல் இருந்தனர். போராட்டத்தை முன்நகர்த்த மக்கள் தயாராக இருந்தும், இவர்களால் சரியான தலைமையை, வழிநடத்தலைக் கொடுக்கமுடியவில்லை. மாறாக தங்களுக்குள் மோதிச் (கொள்கை மோதலும், பதவி ஆசையும்தான் அப்போதைய பிரச்சினைகள்) சிதந்து கொண்டிருந்தனர். இதை புஸ்பராஜா ஒப்புக்கொண்டமாதிரித் தெரியவில்லை.
2. சிறையிலிருந்து வெளிவந்த 80களின் ஆரம்பப் பகுதிகளில் போராட்டம் முனைப்புடன் வேகமாக வளர்ந்தது. ஆனால் இவரால் அந்தக் காலத்தில் காத்திரமான எந்தப் பங்களிப்பும் செய்யமுடியவில்லை. போராட்டத்தை விட்டுவிட்டு பிரான்ஸுக்கு ஏன் புலம்பெயர் என்ற காரணத்தை சொல்லவேயில்லை. ஏதோ நாட்டைவிட்டுப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக மட்டும்தான் கூறுகின்றார்.
3. ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர்கள் நாபா, பெருமாள் போன்றோர் இந்திய இராணும்வக் காலத்தில் மக்கள்விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டபோது, இவரால் அவர்களின் கொள்கைகளை செயற்பாடுகளை மாற்றமுடியவில்லை. மாறாக அசோக் ஹொட்டலில் தங்கி, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் குண்டர்கள் புடைசூழ நகர்வலம் வந்தார் என்றே எழுதுகின்றார். குறைந்தபட்சம் ஈ.பி.ஆர்.எல்.வுடனான தொடர்புகளை அந்த நேரத்தில் கைவிட்டிருக்கலாம்.
வாசித்து முடித்தபோது, இவர் போன்றவர்கள் நமது தலைவர்களாக வராமல்விட்டது நாம் செய்த புண்ணியம் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

<b> . .</b>