03-19-2006, 11:38 AM
ThamilMahan Wrote:நாரதர் சொல்வதுபோல போராளிகள் பலர் படிக்கிறார்கள் என்பது உண்மை. நாரதர் அவர்களில் ஒருவராக கூட இருக்கலாம். <b>ஆனால் அவர்களெல்லாரும் தமிழ் மக்களின் பணத்தில்தான் படிக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். அவர்கள் எல்லாரும் அவர்கள் படித்ததை வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவையாற்ற வேண்டியது அவர்களது கட்டாயம். ஆனால் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு, கோப்பைகழுவி, pizza delivery செய்து, அந்நியனுக்கு இதர ஏவல் புரிந்து, உழைத்து தமது சொந்தப்பணத்தில் படித்து முன்னுக்கு வருபவர்கள் தமது நாட்டுக்கு சேவைசெய்யவேண்டிய கட்டாயமில்லை. என்றாலும் அவ்வாறு சேவை செய்பவர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதற்கு ஹூல் ஒரு உதாரணம்</b> (இதைச்சொல்வதால் ஹூல் கோப்பைகழுவினார் அல்லது pizza delivery செய்தார் என்று நாரதர் assume பண்ணி கருத்துச்சொல்லுவார். வேண்டுமென்றால் இருந்துபாருங்கள்)
தமிழ்மகன் உம்மடை புலம்பலுக்கு அளவே இல்லையா?
சொந்தப்பணத்தில் அந்நியனுக்கு ஏவல் வேலை செய்து படித்தவர்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்வேண்டிய அவசியம் இல்லையா?
அப்படி என்றால் 17000 மேற்பட்ட மாவீரர்களிடமும் கேக்கலாமே உங்கள் உயிரை கொடுத்து தாய்நாட்டுக்கு ஏன் சேவை செய்ய வேண்டும் என்று? ஊன முற்று இருக்கிற பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கேக்கலாமே ஏன் அவர்கள் அங்கங்களை இழக்குமளவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?
என்னோடு பாடசாலையில் படித்த நண்பர்கள் போராளிகளாக இருக்கிறார், அவர்கள் என்னைவிட கல்வியில் பலமடங்கு சிறப்பாக இருந்தவர்கள், அவர்களுடைய குடும்பத்திற்கு பொருளாதார பிரச்சனை இருக்கவில்லை வெளிநாடுகளிற்கு அனுப்பி படிப்பிப்பதற்கு. இவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் வந்து படித்து தமது சுயநலன்களை கவனம் எடுத்திருந்தால் அவர்கள் சிறந்த கல்விமான்களாக முதலீட்டார்களாக பொருளியல் வல்லுனர்களாக இருந்திருப்பார்கள். இந்த சந்தர்பங்களை எல்லாம் நளுவவிட்டு ஏன் தமது வாழ்கையை போராட்டத்திற்கு அர்பணிக்க வேண்டும்?
உணர்வில்லாத ஒருவருக்கு தாய்நாட்டிற்கு சேவை செய்வது கட்டாயமா இல்லையா என்ற கேள்வி வரத்தான் செய்யும். அதுவும் பிறநாடுகளில் வாழ்கை அமைத்துக் கொண்டவர்களிற்கு உணர்வுகுறைந்த கேள்விகள் வருவது சுலபம். ஆனால் உண்மையான தமிழ் மகனிற்கு இப்படியான உணர்வு கெட்ட கேள்வி வராது.
இங்கு மற்றவர்களை சுயதம்பட்டம் அடிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டாதையும். சொந்தக்காசிலை படிச்சவை தாய்நாட்டிற்கு சேவை செய்வது கட்டாயம் இல்லை இருந்தாலும் செய்யிறம் என்றதுக்கு ஈடாக ஒருவர் சுயம் தம்பட்டம் அடிக்கிறது வலு கடினம். நீர் போராட்டத்திற்கு கொஞ்சக் காசு குடுத்துட்டீர் அதுக்காக நீர் ஏதோ போராட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்மாதிரி மக்களின் காசிலை கஷ்டப்படாமல் சொகுசாக வெளிநாட்டிலை போராளிகள் படிக்கிறார்கள் என்று புலம்புறீர். கூல் கோப்பை கழுவினாரோ இல்லை நீர் கூலிற்கு குண்டி கழுவினீரோ எண்டது எங்களுக்கு தேவையில்லை. உம்முடை தமிழ்மகன் என்ற முகமூடிக்கு அப்பால் உமது உண்மை முகத்தை தெரிந்து கெண்டோம் அதுவே போதும்.

