03-19-2006, 11:33 AM
தமிழர் தேசியம் என்பது தனிப்பட்ட பிரச்சினையல்ல!
* விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் மட்டுமல்ல, ஒடுக்கமுறையின் வலியிலிருந்தும் குரூரத்திலிருந்தும் விடுபட வேண்டுமென்ற ஆவேசத்துடன் ஒரு தேசம் தன்னைத் தானே வருத்தி பிரசவித்த விடுதலை அமைப்பு
யதீந்திரா
பலரும் தாங்கள் இருக்கும் இடங்களுக்கும் தாங்கள் சார்ந்திருக்கும் கருத்துநிலைகளுக்கும் ஏற்ப விடுதலைப்புலிகளைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கின்றனர். புரிந்து கொண்டதாகவும் எழுதியும் பேசியும் வந்திருக்கின்றனர். கடந்தகாலங்களில் நமது சூழலில் மாற்றுக் கருத்தாளர்களாகவும் நடுநிலைவாதிகளாகவும் (அரசியலில் நடுநிலை என்ற ஒன்றே கிடையாது என்பது வேறு விடயம். அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்). தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் பகிரதப் பிரயத்தனம் செய்துவந்தவர்களே விடுதலைப்புலிகளின் அரசியலை அதிகம் விளக்க முற்பட்டவர்களாவர். ஆனால், இவ்வாறானவர்களில் எவரும் விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகப் பார்க்க முயன்றதாகச் சான்றில்லை. கடந்த பத்துவருடகால எனது தேடல் அனுபவத்தில் நான் எங்கும் அப்படியொரு பார்வையை தரிசித்ததாக நினைவில்லை. விடுதலைப்புலிகள் குறித்த விமர்சனங்களில் பண்டிதத்தனங்களும் தங்களை பெரும் புத்திஜீவிகளாகவும், வித்தியாசமானவர்களாகவும் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரமும் மேலோங்கியிருந்ததே தவிர, யதார்த்தம் குறித்த புரிதலோ அவதானமோ இருந்ததாகத் தெரியவில்லை.
மாற்றுக் கருத்து என்றாலே விடுதலைப்புலிகளை எதிர்த்தல் அல்லது நிராகரித்தல் என்ற அர்த்தத்திலேயே பார்க்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் விடுதலைப்புலிகளும் மாற்றுக்கருத்தாளர்களை சந்தேகத்துடன் நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. ஆரோக்கியமானதொரு சமுதாய உருவாக்கத்திற்கு மாற்றுக் கருத்துக்கள், உரையாடல்கள் அவசியமானது என்பதில் நாம் அபிப்பிராய பேதம் கொள்ளவேண்டியதில்லை. ஆனால், அந்த மாற்றுக் கருத்து விடுதலையையே மறுதலிப்பதாகவும் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இருந்து விடக் கூடாது. விடுதலைப்புலிகள் என்பவர்கள் யார் எனக் கேட்டால், அது ஒரு பலம்பொருந்திய விடுதலை இயக்கம், பலம்பொருந்திய இராணுவக் கட்டமைப்பு, அங்கிகரிக்கப்படாத அரசு. இப்படியெல்லாம் பதில் வரக் கூடும். என்னளவில் இவையெல்லாம் இரண்டாவது ,மூன்றாவது விடயங்கள். முதலில் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதுதான் நாம் உரத்துச் சொல்ல வேண்டிய விடயம். அது குறித்துத்தான் இக்கட்டுரையில் பேசலாம் என நினைக்கிறேன். நமது ஊடகச் சூழலுக்கு இது புதிதாகவும் இருக்கக் கூடும்.
நான் நீண்ட நாட்களுக்கு முன்னரே சிந்தித்து வைத்திருந்த தலைப்பிது. இப்பொழுதுதான் எழுதுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. சமீபத்தில் ஈழத்தின் பிரபல கவிஞரும் புத்திஜீவியுமான ஒருவரின் இணையத்தள நேர்காணல் ஒன்றைப் பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அதில் அவர் பல நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். கடந்த காலத்தில் மாற்றுக்கருத்து என்ற பேரில் விடுதலைப்புலிகளை கர்ணகடூரமாக எதிர்த்துவந்த அவர், தமிழர் தேசத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத அரசு இருந்து வருவதாகவும் ஆரம்பத்தில் அதனை எதிர்த்த பலரும் தற்போது அதனை ஏற்றுக் கொள்வதாகவும், ஜேர்மனிய அரசு, உருவாகப்போகும் தமிழீழ அரசுடன் அகதிகள் தொடர்பான ஒப்பந்தமொன்றைச் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மொத்தத்தில் அவரது கருத்துக்களில் பல மாற்றங்கள் தெரிந்தன. ஆனால், அதே நபர் நீலன் திருச்செல்வம் தொடர்பான கட்டுரையொன்றில் (1999)`விடுதலைப்புலிகள் எத்தகைய வரலாற்றுக் குருடர்கள் என்பதை வரலாறு எழுதத்தான் போகிறது என்று எழுதியதையும், தவிர்க்க முடியாமல் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. (அவரது கண்டுபிடிப்பில்) வரலாற்றுக் குருடர்களான விடுதலைப்புலிகளால் எவ்வாறு இத்தகையதொரு பெரும் விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது? விடுதலைப்புலிகளால் எவ்வாறு பிராந்திய, ஐரோப்பிய ராஜதந்திர அரசியல் காய்நகர்த்தல்களுக்கு ஈடுகொடுத்தவாறு விடுதலை அரசியலை நகர்த்த முடிகிறது. வரலாற்றின் போக்கை சரியாக புரிந்து கொள்ள முடியாத அவரைப் போன்றவர்கள் மாற்றங்களை நோக்கி வருவது நமக்கு மகிழ்ச்சிதான்.
தமிழர் தேசியம் என்பது தனிப்பட்ட நமது பிரச்சனையல்ல. தனிப்பட்ட நமது வாழ்வியல் அனுபவங்களூடாக அதனைப் பரிசீலிக்க முற்படுவது தவறானதும் மிகமோசமான பிழையுமாகும் என்று கருதக் கூடியவர்களில் நானும் ஒருவன். விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு ஒடுக்கபட்ட மக்களின் குரல்.
இன்று விடுதலைப் போராட்டம் என்பது ஒரு உலகளாவிய குரலாக இருக்கிறது. மார்க்ஸ் உலக வரலாற்றை வர்க்கங்களுக்கு இடையிலான இடையறாத போராட்டத்தின் வரலாறு என்றார். இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் மார்க்ஸின் மேற்படி கூற்றானது ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான இடையறாத போராட்டத்தின் வரலாறு என்ற அர்த்தம் பெறுகிறது. இன்றும் மார்க்சியம் பேசப்படுவதற்கும் விவாதிக்கப்படுவதற்கும் இந்த போராட்டத்திற்கான உள்ளடக்கம்தான் காரணம். எனவே ,ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் இருக்கும்வரை இவ்வுலகில் யுத்தச் சத்தம் ஓயப்போவதில்லை. உலகு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்காக போராடி வருகின்றனர். தியாகங்களுடனும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்களுடனும் கழிகிறது அவர்களது வாழ்வு. ஒடுக்கும் அரசுகளும் ஏகாதிபத்திய சக்திகளும் மக்களின் இந்த நியாயமான போராட்டங்களை பயங்கரவாதமென்றும் தீவிரவாதமென்றும் கொச்சைப்படுத்தி, அழித்தொழிக்க முயன்ற போதும் மக்களின் அந்த தார்மீக விடுதலைக் குரல் ஓய்ந்துவிடவில்லை. அது ஒரு அழிவற்ற குரலாக முன்னரைக் காட்டிலும் பலமடைந்து வருவதையே நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொரு சமூகமும் தங்களது வாழ்நிலைமைகளுக்கும் புறச்சூழலுக்கும் ஏற்ப தமக்கான போராட்ட வழிமுறைகளைத் தீர்மானித்துக் கொள்கின்றது. இதற்கு சமீபத்தில் லத்தீன் அமெரிக்காவில் பலமடைந்துவரும் இடதுசாரி அரசியல் அலையே வலுவான சான்றாக இருக்கின்றது. பொலிவியாவில் வாக்கெடுப்பால் ஒரு புரட்சி நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவின் எல்லா நாசகார வேலைகளையும் முறியடித்தே மக்கள் இடதுசாரி அரசியலின் பக்கம் திரண்டு நிற்கின்றனர். 1973ஆம் ஆண்டு சிலியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மார்க்சியத் தலைவர் அலண்டே CIA யால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டார். இதன் மூலம் அமெரிக்கா தனது இடதுசாரி அரசின் மீதான வெறியைத் தீர்த்துக் கொண்டதுடன் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகள் வலுவடைவதை முறியடித்துவிட்டதாகப் பெரும் பிரசாரங்களிலும் ஈடுபட்டது. அன்று அலண்டே படுகொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியிருந்தார். "குற்றங்களும் ஒடுக்குமுறைகளும் வரலாற்றை நிறுத்தி வைக்க முடியாது. அவர்கள் நம்மை நசுக்கிவிடக் கூடும் .ஆனால் ,நாளை என்பது மக்களுக்குச் சொந்தம்." இன்று அந்த வலிய குரல் உயிர்த்தெழுகிறது. உண்மையில் அது ஒரு உலகு தழுவிய குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் அதன் பெயர் `விடுதலைப்புலிகள்', பாலஸ்தீனத்தில் அதன் பெயர் `ஹமாஸ்'. கொலம்பியாவில் அதன் பெயர் `பாக்' (FARC), நேபாளத்தில் அதன் பெயர் `மாவோசிஸ்ட்' ஆந்திராவில் அதன் பெயர் `மக்கள் யுத்தக் குழு'. இன்னும் எத்தனையோ குரல்கள். இங்கு பெயரில்தான் வித்தியாசமிருக்கிறதே தவிர, குரல் ஒன்றுதான். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். துரதிஸ்டவசமா இந்த உண்மையை சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு இனவாத ஊடகங்களின் செல்வாக்குக் குட்பட்டிருக்கின்றனர். சிங்கள மக்களை விடுவோம். குறைந்தது நாமாவது விளங்கிக் கொள்வோம்.
இன்று தமிழர் விடுதலைப்போராட்டம் அதன் உச்ச இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேவேளை ,எதிரியும் அதிக விழிப்போடும் சதிகளோடும் தொழிற்படும் காலகட்டமும் இதுவாகத்தான் இருக்க முடியும். சிங்கள தேசம் தமிழர் தேசத்தின் போராட்ட வலுவைச் சிதைக்க எந்த வழிமுறைகளையும் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை என்பதையே சமீபகால நிகழ்வுகள் கோடிகாட்டுகின்றன. எனவே, நமது நிலையில் இந்தக் காலத்தில் மாற்றுக் கருத்துக்கள் என்பதும் விமர்சனங்கள் என்பதும் வெறும் அர்த்தமற்ற சொற்களாகத்தான் இருக்க முடியும். கடந்த அறுபது வருடங்களிற்கும் மேலாக, தமிழர் தேசம் தனது விடுதலைக்காகப் போராடி வருகிறது. தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையையும் அழிவையும் தவிர, எதையும் வழங்கிவிடும் நிலையில் சிங்கள தேசம் இல்லையென்பது மீண்டும் மீண்டும் யதார்த்தமாக இருக்கிறது.
http://www.thinakural.com/New%20web%20site...9/Article-5.htm