Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Tamil rebels 'coercing diaspora' -BBC
#9
புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்து மனித உரிமைகள் அமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றம்

விடுதலைப் புலிகள் மேற்குலகில் பலவந்தமாக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கையை வெளியிட்டு பலத்த சர்ச்சையை தோற்றுவித்த வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (ஹியூமன் ரைற்ஸ் வார்ச்) தற்போது விடுதலைப் புலிகளின் பெயரால் சில தனி நபர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.

பெருமளவு தமிழர்கள் தாமாகவே முன்வந்து விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கைக்கு புலம்பெயர்வாழ் தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதையடுத்தேஇ இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் முன்னைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளஇ பலவந்தமாக நிதி திரட்டும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என தம்மை தெரிவித்துக் கொள்ளும் சில தனி நபர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள உலகத் தமிழர் இயக்கம் போன்றவையுமே மேற்கொள்கின்றன.

பெருமளவு தமிழ் மக்கள் நிதி உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படும் அதேவேளைஇ குறிப்பிடத்தக்க அளவு தமிழ் மக்கள் பலவந்தமாக நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளிலும் சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக நாம் தெரிவிக்கவில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு 1978 இல் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன-அரச சார்பற்ற அமைப்பாகும். அரசாங்கங்களினதும் அரசாங்கத்தை சாராதவர்களினதும் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து நாம் அறிக்கை வெளியிட்டு வருகின்றோம்.

தனிநபர்களும் அமைப்புகளும் எமக்கு நிதியுதவி அளிக்கின்றனர். அரசாங்கங்களிடமிருந்து நாம் நிதி பெறாததுடன் தகவல் அளிப்பவர்களுக்கு நிதி வழங்குவதில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பு குழு மேற்கொண்ட விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனிநபர்களுடனான பேட்டிகளை அடிப்படையாக வைத்தே தனது அறிக்கைகளை வெளியிடுகின்றது.

தமிழ் ஊடகவியலாளர்கள்இ செயற்பாட்டாளர்கள்இ வர்த்தகர்கள் போன்றவர்கள் ஊடாக இந்த அறிக்கைக்கான சாட்சியங்களை இனம் கண்டோம்.

எமது முன்னைய அறிக்கையை வெளியிட்டவர் மிகவும் அனுபவம் வாய்ந்த மனித உரிமை ஆராய்ச்சியாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.thinakural.com/New%20web%20site...h/19/News-1.htm
Reply


Messages In This Thread
[No subject] - by Bond007 - 03-16-2006, 11:18 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-16-2006, 11:46 AM
[No subject] - by Bond007 - 03-16-2006, 01:05 PM
[No subject] - by narathar - 03-16-2006, 07:48 PM
[No subject] - by அருவி - 03-17-2006, 02:58 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-17-2006, 07:53 PM
[No subject] - by puthiravan - 03-18-2006, 12:18 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 10:59 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 11:03 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 04:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)