03-19-2006, 10:41 AM
முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் ஹபவ்ரல்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை
அஜாதசத்ரு
கிழக்கில் அண்மைய காலங்களில் மிக மோசமாக அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களும் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரதான நோக்காகக் கொண்டுள்ள முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் மிகவும் மோசமானதோர் நிலைமைக்கு வழிவகுத்து வருவதையே காணக்கூடியதாகவுள்ளது.
கடந்தமுறை ஜெனீவாவில் இடம்பெற்ற அரசு - விடுதலைப்புலிகள் சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.)இ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- வரதர் அணி மற்றும் கருணா குழு என்பவற்றின் மாவட்டப் பொறுப்பாளர்கள்இ அவர்களுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் இஅவர்கள் செயற்படும் மறைவிடங்கள் என்பனவும் எழுத்துமூலம் வழங்கப்பட்டது.
இதெல்லாவற்றிற்குமப்பால் அரசுக்கு வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட விபரத்தில் மிகவும் கவனிக்க வேண்டியதொரு விடயம் கிழக்கில் ஹஜிகாத்' என்ற பெயரில் இயங்கும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பானதாகும்.
குறிப்பாகஇ திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம்இ நூர்தீன் ஷரோம்இ பஷீன் ஷரோம்இ குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழு- ஆயுதக்குழுவின் முழு விபரமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகஇ கிழக்கில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறான சிறுசிறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் பல்வேறு மோதல்களுக்கும் விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.
இவற்றின் பிரதான தளங்களாக கிழக்கில் மூதூர்இ கிண்ணியாஇ தோப்பூர்இ ஓட்டமாவடிஇ ஏறாவூர்இ காத்தான்குடிஇ அக்கரைப்பற்று போன்ற இடங்களில் இயங்குவதும் கவனிக்கத்தக்கது.
கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற மார்க்கப் பிரச்சினை சம்பந்தமான இரு தரப்பினருக்குமிடையிலான மோதல்களின் போதும் கூட கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் என்பனவும் இடம்பெற்றது கவனிக்கத்தக்கது.
இவை நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகும் என்று பொலிஸ் விசாரணைகள் மூலம் பின்னர் அறியவந்தது.
இதனைவிட ஓட்டமாவடிஇ ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஜிகாத் என்ற பெயரில் செயற்பட்ட ஒரு முஸ்லிம் ஆயுதக் குழுஇ அப்பகுதியில் உள்ள வீடியோக் கடைகளை மூடுமாறும் சூதாட்டம் மதுபாவனையில் ஈடுபட வேண்டாமென்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தது.
கடந்த வருடம் ஆரம்பத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் ஏறாவூர்இ ஓட்டமாவடிஇ வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வீடியோக்கடைகளை மூடுமாறும் அச்சுறுத்தியது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.
இதெல்லாவற்றிற்குமப்பால்இ கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான மோதல்களுக்கும் முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றே பின்னணியிலிருந்து செயற்பட்டதாகவும் அறியவருகிறது.
இதெல்லாவற்றிற்குமப்பால்இ அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் பின்னணியிலேயே இந்த ஆயுதக் குழு செயற்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மேலும்இ கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் முக்கிய அரசியல்வாதிகளுக்கிடையேயான மோதல் சம்பவங்களின் போது கூட இவ்வாறான ஆயுதக் குழுக்களின் பின்னணியும் தொடர்புபட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பினராலேயே குற்றஞ்சாட்டப்பட்டதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தமிழ் இளைஞர்களைப் போன்று முஸ்லிம் இளைஞர்களும் தமிழீழ விடுதலைப்புலிகள்இ தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்)இ ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்)இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகிய தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்று தியாகம் செய்த வரலாறும் ஒன்று உள்ளது.
இதனைவிடஇ தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்க அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவினரின் வருகை உள்வாங்கப்பட்ட போதுஇ அதற்கெதிராக கிழக்கில் வீதிகளில் இறங்கி முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் மறக்க முடியாது.
இந்த நிலைமையை மாற்றியமைக்கவேஇ சிங்களப் பேரினவாதம் அப்போதிருந்த கிழக்கின் முஸ்லிம் தலைமைகளுடன் பேரம்பேசி முஸ்லிம் ஊர்காவல்படை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை தமிழர்களுக்கு எதிரான மோதலுக்குள் தள்ளி வீழ்த்தியது.
இந்த நடவடிக்கைகளுக்கு அப்போதிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமே பிரதான பங்காளியாக இருந்ததை எவரும் மறுத்துவிடமுடியாது.
கிழக்கில் இரண்டாவது ஈழ யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற தமிழர் அழிப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் ஊர்காவல் படையினரையேஇ அரச படையினர் பயன்படுத்தினர் என்பதை எவரும் மறுக்கமுடியாது.
சிங்களப் பேரினவாதத்தால் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் அதன் எதிரொலியாக முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற சம்பவங்களும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே மறக்கமுடியாத கசப்பான வரலாற்றை தோற்றுவித்தது.
இவ்வாறானதோர் நிலைமைகளுக்கு மத்தியில் தான் மீண்டும் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களை உருவாக்கும் முயற்சிகளில் அரச படையினர் மட்டுமன்றிஇ வேறு பல அந்நிய சக்திகளும் ஈடுபட்டு வருகின்றதாகவே அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையேஇ கிழக்கில் ஜிகாத் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தவொரு பெயரிலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லையென்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ள நிலையில்இ கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்கள் தம்மிடமுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கான பேரினவாத சக்திகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமையும் அதிக கரிசனை எடுப்பது இன்றைய தருணத்தில் அவசியமானதொன்றாகும்.
http://www.thinakural.com/New%20web%20site...9/Article-3.htm