03-19-2006, 08:43 AM
Quote:பொறியியல் பீடத்தை ஆரம்பிப்பதற்கான அடித்தளம் ஏற்கனவே இடப்பட்டு உள்ளது. இதற்காக யாழ் பல்கலையில் இருந்து கொண்டே உழைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். எல்லாம் கனிந்து வரும் வேளையில் உவர் கூல் வந்து தான் அது நடக்க வேண்டும் என்பதில்லை.
ஹி ஹி.... பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான காணி வாங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன. அந்தக்காணிக்கும் முன்னால் "யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம்" என்று பெயர்ப்பலகை போட்டதைத் தவிர வேறு எதுவுமே ஆக்கபூர்வமாக சம்பந்தப்பட்டவர்களால் செய்யமுடியவில்லை. "எல்லாம் கனிந்து வரும் வேளை" என்று சொல்வதைப்பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது?
Quote:உண்மையாகவே அவர் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவில் உபதலைவராக இருக்கும் போது தனது செல்வாக்கை பயன்படுத்தி உபவேந்தர் மோகனதாசுக்கு பொறியியற் பீடத்தை ஆரம்பிக்க உதவியிருக்கலாமே?
பொறியியல் பற்றி பெரிதும் பரிட்சயமில்லாத மோகனதாசால் திட்டமிட்டு எப்படி ஒரு சிறந்த பொறியியல் வளாகத்தைக்கட்ட முடியும். அப்படிக்கட்டினாலும் அதற்குரிய பாடநெறிகளை உருவாக்கவும் அங்கு சென்று சேவையாற்றவும் எத்தனைபேர் தயாராக இருக்கிறார்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால் எங்களுக்கும் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும்.
அதுமட்டுமல்ல அவர் அந்த நேரத்தில் எந்த பல்கலையில் இருந்தாரோ அங்கே தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். அதாவது பேராதனையில் கணனிப் பிரிவு (computer department) உருவாக்கியவர் அவர்தான். இதை யாராவது மறுக்கமுடியுமா என பேராதனை பல்கலையை சேர்ந்தவர்களையே கேட்டுப்பாருங்கள்.
நாரதர் சொல்வதுபோல போராளிகள் பலர் படிக்கிறார்கள் என்பது உண்மை. நாரதர் அவர்களில் ஒருவராக கூட இருக்கலாம். ஆனால் அவர்களெல்லாரும் தமிழ் மக்களின் பணத்தில்தான் படிக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். அவர்கள் எல்லாரும் அவர்கள் படித்ததை வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவையாற்ற வேண்டியது அவர்களது கட்டாயம். ஆனால் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு, கோப்பைகழுவி, pizza delivery செய்து, அந்நியனுக்கு இதர ஏவல் புரிந்து, உழைத்து தமது சொந்தப்பணத்தில் படித்து முன்னுக்கு வருபவர்கள் தமது நாட்டுக்கு சேவைசெய்யவேண்டிய கட்டாயமில்லை. என்றாலும் அவ்வாறு சேவை செய்பவர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதற்கு ஹூல் ஒரு உதாரணம் (இதைச்சொல்வதால் ஹூல் கோப்பைகழுவினார் அல்லது pizza delivery செய்தார் என்று நாரதர் assume பண்ணி கருத்துச்சொல்லுவார். வேண்டுமென்றால் இருந்துபாருங்கள்)
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

