03-19-2006, 04:57 AM
<b>துணைவேந்தர் பொறுப்பை ஏற்பாரா றட்ணஜீவன் கூல்?</b>
யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பை கடந்த மார்ச் 15 ஆம் நாள் றட்ணஜீவன் கூல் ஏற்கவில்லை.
ஆகையால் அவர் துணைவேந்தர் பொறுப்பை நிராகரிக்கக் கூடும் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 15 ஆம் நாள் றட்ணஜீவன் கூல் பொறுப்பேற்காததால் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் தாற்காலிக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே யாழ். துணைவேந்தர் நியமனத்தில் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என்று கல்வித்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது விடயத்தில் மகிந்த ராஜபக்சதான் இறுதி முடிவை மேற்கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
றட்ணஜீவன் கூலின் நியமனத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
தகவல்: புதினம்

[size=14] ' '