06-16-2003, 05:48 PM
'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது" என்பது பழமொழி. வி.புலிகளைப் பொறுத்தளவிலும் இராசதந்திரம் என்ற போர்வையில் வளைந்து கொடுத்தல், நெகிழ்ந்து போதல், சமரசம் செய்தல் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். எப்போதுமே சொல்ல வேண்டியதை வெட்டொன்று துண்டு இரண்டாக ஒளிவு மறைவின்றிச் சொல்லி விடுபவர்கள்.
வெற்றி தோல்வியைக் கணக்கில் எடுக்காமல் அநீதியை எதிர்த்துப் போராடு மாறு தள்ளப்பட்டால் வி.புலிகள் போராடியே தீருவார்கள்.
யப்பான் கொடையாளிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று யப்பான், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த காலக் கெடுக்கள், கொடுத்த அழுத்தங்கள் போன்றவற்றுக்கு வி.புலிகள் சற்றும் அசையவில்லை.
முதற் கட்டப் பேச்சு வார்த்தையிலேயே தனித் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு அதற்கு ஈடாக உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் தாயக மண்ணில் தமிழ்மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு தன்னாட்சி அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக வி.புலிகள் அறிவித்தார்கள்.
இடைக்கால நிர்வாக சபையை உருவாக்குவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியபோது அதனையும் விட்டுக் கொடுத்தார்கள். வட-கிழக்கு தமிழர்களது தாய கம் என்பதற்குப் பதிலாக தமிழர்களது வரலாற்று வாழ்விடம் என்ற வரை விலக்கண மாற்றத்தையும் ஏற்றுக் கொண்டார்கள்.
இவ்வாறு வி.புலிகள் செய்த விட்டுக் கொடுப்புக்களுக்கு ஈடாக ரணில் விக்கிரமசிங்கா அரசும் சில விட்டுக் கொடுப்புக்களை செய்யும் என்று வி.புலிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.
அ) போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது போல இராணுவம் தமிழர்களது வீடுகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக் கட்டிடங்கள் போன்றவற்றில் இருந்து முற்றாக விலகும்.
ஆ) இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும், நலன்புரி இல்லங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் வாழும் ஒரு இலட்சத்து முப்பதினாயிரத்துக்கும் மேலான மக்கள் தங்கள் சொந்த வீடு வாசல்களில் மீள் குடியேறும் பொருட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆக்கிர மித்துக் கொண்டிருக்கும் இராணுவம் அதிவுயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்து பின்வாங்கும்.
இ) இராணுவத்தினால் தமிழ் மீனவர்கள் மீது போடப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள், தூரக் கட்டுப்பாடுகள், 'பாஸ்" வழங்கும் முறை போன்ற கெடுபிடிகள் நெருக்குவாரங்கள் முற்றாக அகற்றப்படும்.
ஈ) வி.புலிகளுக்கு சாப்பிட இடியப்பம் கொடுத்தார்கள், குடிக்கத் தேநீர் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்காக சிறையில் நீதி விசாரணையின்றி அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள்.
வி.புலிகளின் இந்த எதிர்பார்ப்புக்களில் ஒன்றுமே நடைபெறவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதால் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கவில்லையே ஒழிய தமிழ் மக்கள் வாழ்வில் இயல்பு நிலை திரும்பவில்லை. மூச்சு விட முடிந்ததேயொழிய சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை.
எனவேதான் வி.புலிகள் தங்கள் விட்டுக் கொடுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இனச் சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை விடுதலைப் புலிகளின் பரந்தளவிலான பங்கேற்புடன் வடக்கு, கிழக்கிற்கான ஒரு அரசியல் நிர்வாகக் கட்டமைப்பை, இடைக்கால நிர்வாகம் ஒன்றை உருவாக்குமாறு கோரியுள்ளார்கள்.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா யப்பான் மாநாட்டில் அரசாங்கமோ வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கான ஏற்பாடுகளுடன் கூடிய ஒரு சபையையே வழங்க முன் வந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா எதற்கெடுத்தாலும் குழுக்கள் உப-குழுக்களை அமைப்பதில் மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறார். கடந்த பத்து மாதங்களில் குறைந்தது முப்பது குழுக்காளாவது உருவாக்கி இருப்பார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு குழுக்கள் அமைக்கும் யோசனையை தெரிவித்திருக்கிறார்.
எப்போது ஒரு சிக்கலுக்கு முகம் கொடுக்க விரும்பம் இல்லையோ, இழுத்தடிக்க வேண்டுமோ அல்லது கிடப்பில் போட வேண்டும் என்று நினைத்தாலோ அப்போது ஒரு குழுவை அமைத்துவிடுவது அரசுகள் கையாளும் தந்தி;ரமாகும்.
தனியே முடிவு எடுக்க முடியாதவர்கள் குழுவாகக் கூடி தங்களால் ஒரு முடிவும் எடுக்க முடியாது எனத் தீர்மானிக்கிறார்கள்! வி. புலிகள் கேட்ட இடைக்கால நிர்வாகம் வேறு. ரணில் விக்கிரமசிங்கா கொடுக்க முன்வந்த உச்ச சபை, அபிவிருத்தி சபை வேறு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அறிவித்த வட-கிழக்கின் அபிவிருத்தி சபை முன்னைய மாவட்ட சபை போன்றது.
இந்தக் குழுவை வி.புலிகள் நிராகரித்தது வியப்பளிக்கவில்லை. அதன் வேகந்தான் வியப்பளிக்கிறது. பேச்சு வார்த்தையின் ஆரம்பக்கட்டங்களில் செய்யப்பட்ட விட்டுக் கொடுப்புக்களுக்கு இனி இடம் இல்லை என்பதையே இந்த வேகம் எடுத்துக் காட்டுகிறது.
வட-கிழக்கின் சிதைந்துபோன கட்டுமானத்தை மீள் கட்டியெழுப்ப, மக்களை மீள் குடியமர்த்த, மக்களது வாழ்வில் இயல்பு நிலையைத் தோற்றுவிக்க ஒரு இடைக்கால நிர்வாகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவால் கொடுக்க முடியவில்லை என்றால் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் ஒரு இணைப்பாட்சியை எப்படித் தரப்போகிறார்? எப்போது தரப்போகிறார்?
இந்தச் சூழ்நிலையில் ''விடுதலைப் புலிகள் பேச்சு மேசைக்கு திரும்ப வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், அரசதரப்பினர், புலிகள் அனைவரும் துணிவுடன் முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும். பேச்சு மூலம் அமைதித்தீர்வு காணவேண்டும். இதுவே டோக்கியோ மாநாட்டுச் செய்தி"" என்று அமெரிக்க இராசாங்க துணை அமைச்சர் றிச்சார்ட் ஆர்மிடேஜ் மாநாட்டு முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியிருக்கிறார்.
பேச்சு வார்த்தை மேசையில் பேசப்படும் விடயங்கள், எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைப் படுத்தப்படுவ தில்லை என்பதைக் காரணம் காட்டியே வி.புலிகள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதை இடைநிறுத்தம் செய்துள் ளார்கள். அதன் பின் வடக்கு, கிழக்கிற் கான ஒரு அரசியல் நிர்வாகக் கட்ட மைப்பு, இடைக்கால நிர்வாகம் ஒன்றை உருவாக்குமாறு வி.புலிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை கோரியுள்ளார்கள்.
வெறுமனே தாய்லாந்து, யப்பான், நோர்வே போன்ற நாடுகளுக்குப் பறந்து சென்று மேசையில் இருந்து கொண்டு அமைதிப் பேச்சுக் கச்சேரி வைப்பதால் மட்டும் புண்ணியம் இல்லை. மாநாட்டில் எடுக்குப்படும் முடிவுகள் தளத்தில் நிறை வேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் மீண்டும் அதே மேசைக்குப் போவதில் பொருள் இல்லை.
வி.புலிகள் மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தை மேசைக்குப் போக வேண்டும் எனக் கேட்கும் அமெரிக்க துணை அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவையும் சனாதிபதி சந்திரி காவையும் பார்த்து ''வி.புலிகள் இடைக் கால நிர்வாக சபை கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்கு முதல்படியாக அப்படியான ஒரு சபையை உருவாக்க தீவிர முயற்சி செய்யுங்கள்"" என்று கேட்டிருக்கலாம். அதுதான் நியாயம். ஆனால் அப்படி அவர் கேட்கவில்லை. அவர்களுக்கு ஒரு நியாயம் வி.புலிகளுக்கு இன்னொரு நியாயமா?
பேச்சு வார்த்தைக்குப் போகுமாறு துணை அமைச்சர் கேட்கிறாரே அமெரிக்கா மட்டும் ஐக்கிய நாடுகள் சபையை ஓரங்கட்டிவிட்டு இராக்மீது அனைத்துலக சட்டத்துக்கு முரணாக தாக்குதல் நடத்தி இன்று அந்த நாட்டை தனது இராணுவப் பிடிக்குள் வைத்திருக்கிறதே இராக் நாட்டின் சனாதிபதி சதாம் குசேனோடு ஏன் பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான முறையில் சிக்கலுக்கு தீர்வு காணவில்லை? இந்தக் கேள்வியை எங்களாலும் கேட்க முடியும்!
இராக் ரசாயன, உயிரியல் அணுக்குண்டு போன்ற பேரழிவாயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி இராக் நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்தது. இன்று போர் ஓய்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இ.ன் னும் அந்தப் பேரழிவாயுதங்களை கண்டு பிடிக்க முடியவில்லை!
இராக் நாடு மீது கொத்துக் குண்டுகள், மினி அணுக்குண்டுகள் போட்டதில் 5,000 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு அமெரிக்க தரப்பில் ''ஒரு யுத்தத்தில் இப்படிப் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது'' என்றுதானே திமிராகப் பதில் சொல்லப்பட்டது?
''எல்லாம் ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே உனக்கில்லையடி என் கண்ணே"" என்று சொன்ன பாதிரியார் மாதிரி வி.புலிகளுக்குத்தான் அமெரிக்கா வின் துணை அமைச்சர் உபதேசம் செய்கிறார்.
வி.புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து இருக்கிறது. அமெரிக்காவின் சனாதிபதி புஷ் பிரித்தானியாவின் பிரதமர் பிளேயர் இவர்களைவிட அதிபயங்கரவாதிகள் வேறுயாராவது இந்த உலகில் இருக்கிறார்களா?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா வி.புலிகள் அமைதிப் பேச்சு வார்த்தையில் இருந்து விலக்கிக் கொண்டால் சிறீலங்காவின் உதவிக்கு அமெரிக்கா, இந்தியா, யப்பான், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் வரும் என அடிக்கடி மேடைகளில் சொல்லி வருகிறார்.
இந்தப் புூச்சாண்டிக்குப் பயப்படுபவர்கள் வி.புலிகள் அல்ல. பயம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் வி.புலிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் சொல்லைக் கேட்டு அப்படியான பிழையை அமெரிக்கா செய்யமாட்டாது என நாம் மனதார நம்புகிறோம். இந்தியா அந்தப் பிழையை விட்டு விட்டு பட்ட பாடு எல்லோருக்கும் தெரியும்.
தமிழ் மக்கள் அமைதி வழியில் ஒரு நியாயமான நீதியான தீர்வையே எதிர்பார்க் கிறார்கள். தமிழ் மக்கள் போரை வெறுக்கிறார்கள். அவர்களே போரினால் ஏற்பட்ட உயிர் இழப்பையும் உடமை இழப்பையும் நேரடியாக தாங்கிக் கொண்டவர்கள்.
இன்று வி.புலிகளை போருக்கு நிர்பந்திப்பதும் நிர்பந்திக்காது விடுவதும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவின் கையிலேயே இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
கனடா ~நம்நாடு| (13-06-03)