Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதா சந்திரிக்கா சந்திப்பு
#1
<b>[u][size=18]ஜெயலலிதா சந்திரிக்கா சந்திப்பு</b>
ஒரு கற்பனைப் பார்வை:

<img src='http://img108.imageshack.us/img108/5867/noname9qh.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img210.imageshack.us/img210/4596/santhirikkamugi2ko.gif' border='0' alt='user posted image'>

ஜெயலலிதா (ஜெயா) சந்திரிக்கா (சந்திரி) இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள். மாறி மாறி இருவரும் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். திடீரென்று ஜெயா தன் குரலை உயர்த்தி எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கையசைத்து

"சிங்களத்து சிலோன் தலையே
நீயும் வந்த காரணத்தை
சொல்லு மயிலே
ஜிம்பட ஜிம்பா ஜிபூம்பா ஜிம்பட
ஜிம்பா"

எனவும் பதிலுக்கு சந்திரிக்கா

'ஜ வோன்ட் பி எ ரிச் லேடி
ஜ வோன்ட் பி எ ரிச் லேடி
மட்ட சல்லி உங்காக் ஓணே
(எனக்கு நிறைய பணம் வேணும்)'

எனவும் 'ஓ பாட்டாவே பாடிட்டியா' என்று குணா ஸ்டைலில் ஜெயா கேட்கவும். பிறகு ஜெயா இப்படி பாடுகிறார்.

காசு மேல காசு வந்து
கொட்டுகிற நேரம் இது!
வாசக் கதவ கதிர்காமரு
தட்டுகிற நேரம் இது!
'சந்திரி பாதி
கதிர் பாதி
இருவரும் சேர்ந்தால்
ஊழல்தான்
உன்
உள்ளே
இனவாதம் வெளியே
தேசியவாதம் ஈழத்தமிழன் வாயில்
மண்ணுதான்!'

என ஜெயா முடிக்கவும். சிறு வெட்கத்துடன் நிக்காங் இன்ட அக்கே (சும்மா இருங்க அக்கா)' என்கிறார் சந்திரி.
அக்கே ப்ளீஸ்க்கா மொதல்ல ஊழல் ஜடியாவத் தாங்களேன் எனவும் ஜெயா பாடுகிறார்.

'ஒன்றா ரெண்டா ஊழல்கள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள்
போதுமா
தங்கையே சசியைக் கேட்டுப்பார்
எனது ஊழல்கள் எல்லாம் சொல்லுவாள்.'

என்னக்கா உங்ககிட்ட ஜடியா கேட்டா சசி கிட்ட கேக்க சொல்றீங்க என சந்திரி கேட்கவும்
'நான் என்றால் அது சசியும் நானும் சசி என்றால் அது நானும் சசியும் நான் சொன்னால் அது சசியின்
வேதம் அவள் சொன்னால் அதுவே என் எண்ணம்.'

என்று ஜெயா பாடவும், சசி நாணத்துடன் புன்னகைத்து விட்டு 'இந்தாம்மா சந்திரி பேசாம எனக்கு ஒரு பத்து
பர்சன்ட் கமிசன் குடுத்தீன்னா காதும் காதும் வெச்சா மாதிரி அப்பப்ப ஜடியாக்கள அள்ளி விட்டுக்கிட்டு இருப்பேன்.
அடுத்த தடவை அமெரிக்காக்கு ஆயுதம் வாங்க போறப்போ எனக்கு ஒரு ரிக்கட் போட்டேன்னா புஸ்சுகிட்ட பேசி ஒரு கமிசன் காரெக்ட் பண்ணிப்போம்' என்று சசி கூறவும், சந்திரி எழுந்து சசியை ஆரத் தழுவி "கொந்தாய் (நல்லது) கொந்தாய் (நல்லது), போமஸ்துதி (ரொம்பநன்றி) என்கிறார்.' உடனே ஜெயா

'கண்ணும் கண்ணும்
கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம்
கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
சசியை நீயும் பார்லோ(follow)
பண்ணினால் சக்சஸ் என்றே அர்த்தம் அர்த்தம்' என்று விட்டு, 'சந்திரி உனக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க சசி ஒரு ஜடியாக் குடுத்தா நூறு கோடி வந்தா மாதிரி என ரஜனி ஸ்டைலில் ஜெயா கூறவும் ஒரு பள்ளிச் சிறுமியின் துள்ளலுடன் ஓடிச்சென்று ஜெயாவினதும் சசியினதும் கன்னத்தில் ஒரு 'இச்' கொடுக்கிறார் சந்திரி.

சசி பாடுகிறார்......
'சந்திரி நீயும் சசிகலா ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
சுவிஸ் பாங்கில் பலன்ஸ் ஏறும்'

சற்று நேரத்திற்கெல்லாம் சந்திரி புறப்படத் தயாரானதும் ஜெயா பாடுகிறார்.

'சிங்க நடை போட்டு
சிலோனுக்கு ஓடு
ஆயுதத்த வேண்டி கட் ஒண்ணு
வாங்கு'

கண்களில் கனவுகள் மிதக்க பதிலுக்கு
சந்திரி பாடுகிறார்.

'உன்னை நான் சந்தித்தேன்
நீ என்னைப்போல் ஒருத்தி
உன்னை நான் தொடர்வேன்
உன் ஊழல்களின் வழியில்'

என்றபடியே காரில் ஏறி கையசைத்து விடைபெறுகிறார் சந்திரிக்கா அம்மையார் அவர்கள்......

[b]கற்பனை
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
ஜெயலலிதா சந்திரிக்கா சந்திப்பு - by தாரணி - 03-18-2006, 06:29 PM
[No subject] - by Snegethy - 03-18-2006, 06:38 PM
[No subject] - by Sujeenthan - 03-18-2006, 07:00 PM
[No subject] - by அனிதா - 03-21-2006, 10:18 PM
[No subject] - by தூயவன் - 03-22-2006, 04:25 AM
[No subject] - by Niththila - 03-22-2006, 11:47 AM
[No subject] - by கந்தப்பு - 03-22-2006, 12:55 PM
[No subject] - by தாரணி - 03-22-2006, 05:49 PM
[No subject] - by வினித் - 03-24-2006, 10:13 AM
[No subject] - by Rasikai - 03-24-2006, 06:00 PM
[No subject] - by தாரணி - 03-24-2006, 06:15 PM
[No subject] - by tamilini - 03-24-2006, 07:28 PM
[No subject] - by Danklas - 03-24-2006, 08:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)