02-07-2004, 04:00 PM
சமாதானங்கள் போதாது, சுயபரிசோதனை தேவை
ஆர்.வெங்கடேஷ்
கடந்த வாரத்தில் ஒரு நாள் தாம்பரம் வரை செல்ல வேண்டியிருந்தது. ஜி.எஸ்.டி. சாலையில் என்னைக் கடந்து போன ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்கள் இருந்தனர். அசாதாரண வேகம். அதே வேகத்தில், இன்னும் வேகம் கூட்டியபடி இரண்டு இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள். ஒருவித திரைப்படத் துரத்தல் போல் தலைதெறிக்கும் வேகம்.
அந்தப் பெண்களின் ஸ்கூட்டிக்கு அருகே போவதும் ஏதோ சொல்லிச் சிரிப்பதும், வண்டியோட்டும் பெண் இன்னும் வேகத்தைக் கூட்டுவதுமாய் ஒரே பரபரப்பு. பின்னால் அசாதாரணமான வேகத்தில் வரும் லாரிகள், கார்கள், இன்னபிற வாகனங்கள். எங்கே அந்தப் பெண்கள் பேலன்ஸ் தவறி விழுந்துவிடுவார்களோ என்று அச்சம் என்னை வாட்டியது.
கடுமையான சட்டங்கள் வந்தபின்னும், தமிழகத்தில் இன்னும் பெண்களைக் கேலி செய்தல், வம்புகிழுத்தல் போன்றவை சாதாரணமாகவே நடந்து வருகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் பேருந்துகளில் அனுபவிக்கும் பாலியல் ர¦தியான ச¦ண்டல்கள், அசிங்கங்கள் பற்றி நண்பரொருவர் விவரித்தார். உண்மையில் அவமானமாக இருந்தது.
தினமும் நாளிதழ்களைப் பார்ப்பவர்கள் முகத்தில் அறையும் முக்கிய செய்திகளில் ஒன்று, பெண்களைக் கிண்டல் செய்தல். அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் பெண்களும் அதிகரித்திருக்கிறார்கள். கடந்த நாலைந்து நாள்களாக தினமும் ஒரு செய்தி படித்திருக்கிறேன். வேறு வேறு ஊர்கள், பெயர்கள் மாறியிருக்கின்றனவே தவிர, கொடுமை ஒன்றுதான்.
பள்ளிக்குப் போகும் பெண்கள், கல்லூரிகளுக்குப் போகும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் என்று மட்டுமல்ல, வ¦ட்டில் உள்ள பெண்களையும் இந்தக் கொடுமை விடவில்லை என்பது இப்போதைய கலவரத்துக்குக் காரணம். பெரிய நகரங்கள் என்று மட்டுல்ல, சிற்றூர்களிலும் கூட, ஆண்கள், இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்.
ஈவ் டீசிங்குக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுவதாக அறிகிறேன். அத்துடன், அதைக் கண்காணிக்கவும் குறைக்கவும் தனி காவலர் படைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் அறிகிறேன். இதையெல்லாவற்றையும் ம¦றி, பெண்கள் ம¦து இத்தகைய கொடுமை தொடர்கிறது என்றால், நம் சமூகத்தின் மனநிலை பற்றிய சந்தேகமே அதிகரிக்கிறது.
பொதுவாக நான் என்றுமே இளைஞர்கள் குறை சொல்லப்படுவதை விரும்பாதவன். ஆனால், இந்த ஈவ்டீசிங் வழக்குகள் பலவற்றில் சிக்கியிருப்பவர்கள் இளைஞர்கள்தான். கல்வி கற்றவர்களும் கல்லாதவர்களும் இதில் சம்மந்தப்பட்டிருக்கின்றனர். அத்துடன், நடுவயதினர் சிலரும் கைதாகியிருக்கின்றனர்.
இத்தகைய செயல்களில் தென்படும் ஒரு பொதுவான குணம், பெண் போகப்பொருள் என்பது. அத்துடன், சமூக ர¦தியாக இதற்கு ஒரு வித மூடிமறைக்கப்படும் சௌகரியமும், பெண்களால் அவமானத்தை வெளியிட முடியாது என்ற தைரியமும் உள்ளார்ந்து செயல்படுகிறது. எந்தப் பெண்ணும் அனுபவிக்கத் தக்கவள் என்ற ஆணாதிக்க மனோபாவம்தான் அனைத்துக்கும் அடிப்படை.
பெண்ணை முழுமையான மரியாதைக்குரிய உயிராக கருதும் பழக்கம் நமது சமூகத்தின் பொது மனநிலையில் காணக்கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது. ஒருபக்கம் பெண்களை இலக்கியங்களிலும், கலைகளிலும் தூக்கி வைத்துக்கொண்டாடும் இந்தச் சமூகம்தான், இழிவையும் செய்கிறது.
அதைத் தட்டிக்கேட்க போவோர் நிலையும் பரிதாபம்தான். நாட்டின் பிரதமர் வ¦ட்டுப் பேரனை ரயிலில் இருந்து தூக்கி எறிந்து கொல்லக்கூட முடியும் என்பது உண்மையாகிவிட்டது. அப்புறம் சாதாரணமானவர்கள் நிலையென்ன?
இனி சமாதானங்களோ, மூடி மறைப்புகளோ உதவப்போவதில்லை. நமது சமூகத்தைப் பற்றி ஆழ்ந்த சுயபரிசோதனை தேவை. மனத்தின் நிழலான பக்களைக் களைந்து, வக்கிரங்களை ஒப்புக்கொண்டு, துடைத்தெரிய வேண்டிய வழியைக் கண்டாக வேண்டும்.
இன்னும், இந்திய சமூகத்தை பழமை, பாரம்பரியம், கலாச்சாரப் பெருமை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிவதில் பொருளில்லை.
மனநிலையில் மாற்றமில்லையெனில் வாழ்க்கையில் மாற்றம் வரப்போவதில்லை.

[b]Nalayiny Thamaraichselvan