03-17-2006, 12:16 PM
<img src='http://photos1.blogger.com/blogger/4236/1731/1600/uu.jpg' border='0' alt='user posted image'>
எங்கு வந்தாய்..?
மறந்துவிட்டேன்
இறந்துவிட்டேன் என்று
பார்க்க வந்தாயா..?
காதலாகி கசிந்து நீ
எனக்கு வரைந்த காதல்மடல்கள்
இதோ இந்த மூலையில்தான்
கிடக்கின்றன..
நான் மறக்கவில்லை..
புகைந்தது என் வாழ்வு
என்று நீ விட்டெறிந்த நம்
திருமணப் "புகை"ப்படம்
இங்குதான் சிதறிக்கிடக்கிறது..
நான் மறக்கவில்லை...
எந்தப் புடவை எதற்காக
எரித்தாய் என்று இன்னும்
திகதியுடன் கூறுவேன்..
நான் மறக்கவில்லை..
எந்தத் தழும்பு எப்போது
போட்டாய் என்று உன் கைரேகைகளை
ஞாபகம் வைத்திருக்கும் அதே
தேகம்தான் இது
நான் மறக்கவில்லை..
மன்னித்துவிடு
நான் மாறிவிட்டேன்
இனியும் ஒருதடவை -உன்
பின்னால் வரமுடியாது..
காதலும் இல்லாமல்
கருணையும் இல்லாமல்
கட்டிலிலே..
மூச்சுத்திணற - என்
அடிவயிற்றை அமத்தியவாறு
பெண்விடுதலை பற்றிப்
பேசியவன்தானே
நீ..????
ஒலிவடிவில் கேட்க இங்கே அழுத்தவும் :-)
http://www.acidplanet.com/components/embed...D=700430&T=5764
எங்கு வந்தாய்..?
மறந்துவிட்டேன்
இறந்துவிட்டேன் என்று
பார்க்க வந்தாயா..?
காதலாகி கசிந்து நீ
எனக்கு வரைந்த காதல்மடல்கள்
இதோ இந்த மூலையில்தான்
கிடக்கின்றன..
நான் மறக்கவில்லை..
புகைந்தது என் வாழ்வு
என்று நீ விட்டெறிந்த நம்
திருமணப் "புகை"ப்படம்
இங்குதான் சிதறிக்கிடக்கிறது..
நான் மறக்கவில்லை...
எந்தப் புடவை எதற்காக
எரித்தாய் என்று இன்னும்
திகதியுடன் கூறுவேன்..
நான் மறக்கவில்லை..
எந்தத் தழும்பு எப்போது
போட்டாய் என்று உன் கைரேகைகளை
ஞாபகம் வைத்திருக்கும் அதே
தேகம்தான் இது
நான் மறக்கவில்லை..
மன்னித்துவிடு
நான் மாறிவிட்டேன்
இனியும் ஒருதடவை -உன்
பின்னால் வரமுடியாது..
காதலும் இல்லாமல்
கருணையும் இல்லாமல்
கட்டிலிலே..
மூச்சுத்திணற - என்
அடிவயிற்றை அமத்தியவாறு
பெண்விடுதலை பற்றிப்
பேசியவன்தானே
நீ..????
ஒலிவடிவில் கேட்க இங்கே அழுத்தவும் :-)
http://www.acidplanet.com/components/embed...D=700430&T=5764

