03-17-2006, 07:41 AM
<b>துணைவேந்தர் நியமனம்: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய த்தின் கருத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பதில் </b>
- எல்லாளன் - Friday, 17 March 2006 12:36
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக அந்த ஒன்றியத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த வாரம் எமது பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு தொடர்பான தங்களால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக ஒரு சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கடந்த டிசம்பர் மாதம் இராணுவ அராஜகங்களைக் கண்டித்து அமைதிவழிப் பேரணி நடத்திய துணைவேந்தர் உட்பட ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமுகமே இராணுவத்தால் தாக்கப்பட்டபோது மௌனம் காத்த நீங்கள்-
டிசெம்பர் மாத இறுதிப்பகுதியில் திருமலையில் இராணுவத்தால் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது மௌனம் காத்த நீங்கள்-
தற்போது தமிழ் மாணவர்களுக்கு எதிரான ஒருவரை துணைவேந்தராக தெரிவு செய்ததற்கு ஒட்டுமொத்த தமிழ் பல்கலைக்கழக சமுகமே எதிர்த்து நிற்கையில் தாங்கள் மட்டும் தற்போது அவருக்கு சார்பாக குரல் கொடுத்தமை உங்களது இனவாதப்போக்கினை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
உங்களது இவ்வாறான குறுகிய மனப்போக்கான செயற்பாடுகள் எமக்கு மனவேதனையினை ஏற்படுத்துகின்றது.
எமது பல்கலைக்கழக வளாகம் என்றும் அனைத்து இன மக்களினதும் கல்விக்காக துணைநிற்பதோடு எந்த இன, மத மாணவர்களையும் இனவாதப்போக்கில் ஓரங்கட்டி விடுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எம்மீது இராணுவத்தினாரால் திணிக்கப்பட்டுள்ள அடக்கு முறைகளையும் அச்சுறுத்தல்களையும் நாங்கள் நேரடியாகவோ, அல்லது உண்மைத் தன்மையினைப்பற்றி புரிந்துகொள்ளுமிடத்து நீங்களும் எங்களுடன் இணைந்து போராடுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Cloud - Lighting - Thander - Rain -