Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ?
#3
பழைய கட்டுரை. ஆனால் பிரயோசமானகட்டுரை. இப்பொழுது தமிழ் செம்மொழியாகி விட்டது. என்றாலும் இந்திய அரசு எவ்வாறு இந்தி மொழியும், செத்துப்போன சமஸ்கிருதம் மொழியும் வளர பல உதவிகள் செய்தும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு இடையூராக இருப்பதினைக் உதாரணங்களுடன் அறியக்கூடியதாக உள்ளது.

வெளினாட்டு பல்கலைக்கழகங்களிலும் பகுதினேர வகுப்பில் அன்னியமொழிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. இதற்கு இந்திய அரசு பல மடங்கு பண உதவிகள் செய்கின்றது. சிட்னிப்பல்கலைக்கழகத்திலும் பகுதி நேர வகுப்பாக இந்தி,ஆரபிக்,தாய்,கொரியன்,இன்டொனெசியன்,ஜப்பானிஸ்,லட்ரின் மற்றும் ஐரோப்பியா மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் பழமைவாய்ந்தமொழியான தமிழ் இங்கு கற்பிக்கப்படவில்லை. இங்கே சில ஆங்கிலேயரும் இந்தி படிக்கிறார்கள்.

தமிழன் ஆண்ட இடமெல்லாம் இப்பொழுது வேறு இனத்தவன் ஆழ்கின்றான். எமது தமிழ் மக்களோ இதனைப்பற்றிக்கவலைப்படாமல் ஆங்கிலமோகம் கொண்டு தமிழர்களுடன் ஆங்கிலமொழியிலேயே கதைக்கிறார்கள். ஒஸ்ரேலியாவில் சீனர்கள் சீனர்களுடன் தங்களது மொழியிலேயே கதைக்கிறார்கள்.

தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்காமல் வேற்று மொழிப்பெயர்களினையே வைக்கிறார்கள். தமிழ் கிறிஸ்தவர்கள் ஆங்கிலப்பெயர்களினை பிள்ளைகளுக்கு சூடுகிறார்கள். சிலர் இதற்கு விதி விலக்கு. அழகிய தமிழில் சூசை,அந்தோணி,அருளப்பர் என்று வைக்கிறார்கள். சில சைவ சமயத்தினர் வடமொழிப்பெயர்களினைச் சூட்டுகிறார்கள்.

இவற்றினை கவனிக்காது விடில் பிஜி,மொறிஸியஸ், தென்னாபிரிக்கா நாட்டில் வாழும் அடையாளம் இழந்த தமிழர்களைப்போல் விரைவில் நாங்களும் மாறவேண்டிய நிலைக்குத்தள்ளப்படுவோம்
,
,
Reply


Messages In This Thread
நல்ல கட்டுரை - by tamilan - 12-17-2003, 07:02 AM
[No subject] - by Aravinthan - 03-17-2006, 06:36 AM
[No subject] - by கந்தப்பு - 03-17-2006, 06:56 AM
[No subject] - by கந்தப்பு - 03-18-2006, 09:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)