03-16-2006, 01:55 PM
Jude Wrote:narathar Wrote:ஜேவிபி சொல்கிறது யாழ் மாணவர் அமைப்பு புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது என்று.அவ்வாறெனில், புலிகள் கூலின் பின்னணி தெரியாமலா இதனைச் செய்கின்றனர்,புலிகளின் புலனாய்வு அமைப்பிடம் இல்லாத திறனான தகவல்கள் உம்மிடமும் ஜூடிடமும் உண்டா.புலிகள் இங்கே தவறிளைக் கின்றனரா? .
ஜேவிபி சொல்வது உண்மையல்ல. யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பு புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தால் பாதுகாப்பை காரணம் காட்டி சிறிலங்கா அரசால் யாழ் பல்கலைக்கழகத்தை வருடக்கணக்காக மூடிவிட முடியும். இவ்வாறே சிறிலங்காவில் தென்பகுதி பல்கலைக்கழகங்கள் ஜே.வி.பி காலத்தில் மூடப்பட்டிருந்தன.
ஜே.வி.பி. சொல்வது உண்மையல்ல என்ற காரணத்தால் அதை அடிப்படையாக வைத்து தாங்கள் கேட்ட கேள்விகள் அர்த்தமற்று போய்விடுகின்றன. அந்த கேள்விகளுக்கு இடமே இல்லை.
இந்த வாதம் தென் சமூகத்துக்கு மட்டுமே பொருந்துமே தவிர யாழ் பல்ககை;கழகத்தில் அப்படியான வீரத்தை சிங்கள அரசால் செய்ய முடியாது.
அவர்களுக்கு தெரியும். இந்த விடுதலைப் போராட்டத்திற்கு வெட்டுப்புள்ளி முறையும் மூலகாரணம் என்பது. அப்படி தெற்கில் நடந்தது போல நடந்த பிற்பாடு மாணவர்கள் எவ்வகையான வழியைத் தேடிக் கொள்ளவார்கள் என்பது சொல்லித் தெரியவில்லை.
எனவே உங்கள் கருத்தும் பிசுபிசுத்துப் போகின்றது
[size=14] ' '

