03-16-2006, 10:41 AM
Jude Wrote:narathar Wrote:ஜேவிபி சொல்கிறது யாழ் மாணவர் அமைப்பு புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது என்று.அவ்வாறெனில், புலிகள் கூலின் பின்னணி தெரியாமலா இதனைச் செய்கின்றனர்,புலிகளின் புலனாய்வு அமைப்பிடம் இல்லாத திறனான தகவல்கள் உம்மிடமும் ஜூடிடமும் உண்டா.புலிகள் இங்கே தவறிளைக் கின்றனரா? .
ஜேவிபி சொல்வது உண்மையல்ல. யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பு புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தால் பாதுகாப்பை காரணம் காட்டி சிறிலங்கா அரசால் யாழ் பல்கலைக்கழகத்தை வருடக்கணக்காக மூடிவிட முடியும். இவ்வாறே சிறிலங்காவில் தென்பகுதி பல்கலைக்கழகங்கள் ஜே.வி.பி காலத்தில் மூடப்பட்டிருந்தன.
ஜே.வி.பி. சொல்வது உண்மையல்ல என்ற காரணத்தால் அதை அடிப்படையாக வைத்து தாங்கள் கேட்ட கேள்விகள் அர்த்தமற்று போய்விடுகின்றன. அந்த கேள்விகளுக்கு இடமே இல்லை.
ஆகவே ஜூட் உமது கருத்துப்படி பார்த்தால் யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு,தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுபினர்கள்,யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் கூலின் நியமனத்தை எதிர்ப்பது அவற்றின் சுயாதீனமான செயற்பாடின் அடிப்படையில்.மேலும் புலிகள் நீரும்,தமிழ் மகனும் கூறுவதைப் போல் கூலின் நியமனதுக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர் என்றால்,மேற் குறிப்பிட்ட அமைப்புக்கள் புலிகளிற்கு எதிராகவா இயங்குகின்றன?இதற்கான ஆதாரம் என்ன?
மேலும் நீர் தான் முன்னர் எழுதுனீர் கூலின் நியமனம் ஜேவிபியின் நடவடிக்கை என்று, அத்தோடு ஜேவிபியின் மாணவர் அமைப்பு அதனை வரவேற்றும் இருக்கிறது. அப்படியானல் சிங்கள இனவாத அமமைப்பு ஒன்றினால் வரவேற்க்கப் படும் ஒருவரையா,புலிகள் பச்சைக் கொடி காட்டி அங்கீகரித்து உள்ளனர்?
ஜூட் அண்ண எங்கயோ உதைக்குதே, நல்ல நகைச்சுவை, வேறென்ன சொல்வது.

