Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அஞ்சலி-புஸ்பராஜாவுக்கு!
#1
<b>விடிந்தும் விடியாததொரு காலை
அம்மணமாய் கிடக்கும் என் சோதரி
உடலை என் மேலங்கி கொண்டு
போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்...
உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்!

கல்லாகி போகாத மனிதனென்று
நாம்...............ஆனதால்...........
கல்லீரல் புற்று கணக்கு முடித்ததால்
உம்...அற்ப ஆயுள் சோகம் எண்ணி
மனசு - கனக்கிறோம்- ஆயினும்


எலும்பெங்கும் வலிக்கிறது!
அடி காயங்கள் ஆறுவதாய் இல்லை!
இன்றும் உம் தோழர் - எம்
அடிமடியில் தீ மூட்டுவதை
எப்பிடி மன்னிக்க? மறக்க?
வலிக்குது!

தேரோடும் வீதியில்
சேறள்ளி கொட்டிவிட்டு
கோயில் வாசல் அது வருகையில்
விடைபெறுகிறேன் ...
புலிதான் எல்லாமென்றொரு புராணமா?
கேவலம்... நீரல்ல...போய்விட்டீர்
இன்னும் உம் காலடி தொழுபவர்!

விடைபெற்ற மனிதா
நானறியா காலம் நீ
எமதெதிரிக்காய் போர் தொடுத்தாய்
மகிழ்ச்சி- நானறிந்த காலம்
எதிரி கால் கழுவியே வாழ்ந்தாயா?
ஊர் சொல்கிறதே!

உயிர் துடிக்கும் நேரத்தில்
எமக்கு தண்ணீர் கொடுக்காதே
என்று வாழ்ந்தாய் -!
ஓடி போனாய்- உனக்காய் கண்ணீர்
ஒரு மனிதனாய்-!
மானமுள்ள தமிழனாய் அல்ல!!! 8) </b>
-!
!
Reply


Messages In This Thread
அஞ்சலி-புஸ்பராஜாவுக்கு! - by வர்ணன் - 03-16-2006, 06:05 AM
[No subject] - by Snegethy - 03-16-2006, 06:20 AM
[No subject] - by வர்ணன் - 03-16-2006, 06:24 AM
[No subject] - by Snegethy - 03-16-2006, 06:53 AM
[No subject] - by கந்தப்பு - 03-16-2006, 06:56 AM
[No subject] - by RaMa - 03-16-2006, 07:04 AM
[No subject] - by Niththila - 03-16-2006, 09:16 AM
[No subject] - by அருவி - 03-16-2006, 10:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)