02-07-2004, 01:41 AM
ஆங்கிலத்தில் அணையாக் காதல்கொண்டு அலைந்து திரிபவர் எங்கள் ஆசிய நாட்டவர்போல் அதிலும் குறிப்பாக தென்ஆசிய நாட்டவர்போல் உலகில் எவரும் இருக்க மாட்டார். ஆங்கிலத்தை ஒரு மொழியாக கருதி அதில் ஈடுபாடு காட்டுவது என்பதற்கு மேலாக அதன்மீது போலியாக ஏற்படுத்தப்பட்ட சமூகக் கௌரவம், செயற்கை அந்தஃச்து கருதி அதனைக் கற்க முயல்வரே எம்மவரில் அதிகம். இது பெரும்பாலும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்ததாக கருதப்படும் ஆங்கிலக் காலனித்துவத்தின் எச்சசொச்சங்களின் பாதிப்பாக இருக்கலாம். இந்த ஆங்கில அடிபணிதலுக்கு நாம் சொல்லும் பல கற்பிதங்களில் பிராதானமானவை அது அனைத்துலக மொழி, அதிலேயே எல்லா அறிவியலும் கருக்கொள்கின்றன, அதையறிந்தவன் உலகறிந்தவன் என இப்படிப்பல.
ஆனால் அதற்கான முழுக்காரணம் சோம்பேறித்தனம், சுயசிந்தனையின்மை, தாழ்வுமனப்பாண்மை, ஆளுமைக்குறைவு போன்றவையே. உலகில் சுயகௌரவமும் ஆளுமையுமுள்ள எந்த ஒரு மக்கள் கூட்டமும் அன்னியமொழிகளை தங்கள் தலைகளில் வைத்து கூத்தாடி கும்மியடிப்பதில்லை. சீனா,யப்பான்,ரசியா,பிரான்சு,யேர்மனி இப்படி பலநாடுகள் பலசவால்களுக்கு மத்தியில் தங்கள் தனித்தன்மையை பேணமுயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளன. இசுரேல் நாட்டினர் முற்று முழுதாக அழிந்து போய்க்கொண்டிருந்த தமது எபிரேய (HEBREW) மொழியினை பல்வேறு மொழிப்பாவனையின் பின்னனியில் இசுரேலில் குடிபெயர்ந்த யுூத இனத்திற்கு கற்பித்து தம்மை செழுமைப்படுத்தினர். அதனால் இன்று அவர்களுக்கென்று ஒரு ஓர்மம், பலம் இருக்கின்றது. இவையெல்லாம் அந்த இனங்களின் கடும் முயற்சியின் அறுவடைகள். சுலபம் கருதி அவர்கள் ஏலவே நடைமுறையில் ஆதிக்கத்திலுள்ள மொழிகளை ஏற்று அதன்கீழ் அவர்கள் தங்களை இலகுவாக வளர்த்தெடுத்திருக்கலாம். அப்படி அவர்கள் செய்திருப்பார்களாயின் இன்றைய அவர்களின் தேசிய தனித்துவபலத்தை ஒருபோதும் அடைந்திருக்கமாட்டார்கள்.; தங்கள் மொழியில் தங்களை வளர்த்தெடுப்பதற்காகவே இவர்கள் ஆங்கிலம் கற்றார்கள். ஆங்கிலத்தில் அவர்கள் நாடுகளில் அறிந்தவற்றை தங்களது மக்களின் வளர்ச்சிகேற்ப மாற்றியமைக்கும் வல்லமையும் ஆளுமையும் அவர்களிடம் இருந்தது. அன்றைய யப்பானும் இன்றைய சீனாவும் அதற்கு நல்ல உதாரணங்கள்.
புல்மோட்டையிலுள்ள இல்மனைட்டை குறைந்தவிலைக்கு வெள்ளையன் கொள்ளையடித்துக் கொண்டு போக உதவுவதற்கும் பிரித்தானியாவிலுள்ள நிறுவனங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புக்களை மிகமலிந்த கூலிக்கு பதிலளிப்பதற்கும் மட்டுமே நாங்கள் ஆங்கிலம் கற்கின்றோம். அதாவது எங்கள் ஆங்கிலக் கற்றல் என்பது எப்படி ஆங்கிலேயனுக்கு அடிமைச் சேவகம் செய்து அவனை வளப்படுத்துவது என்பது பற்றியதாகும். நாங்கள் கற்கும் ஆங்கிலம் இப்படியான நோக்குடையதாக இருப்பின் அது எங்கே எங்களை வளப்படுத்த உதவப்போகின்றது. எங்களை நாங்களாக பார்த்து அதன்வழியாக எங்களை வளர்த்தெடுக்கும் வல்லமை எங்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை. ஏன் எங்களிடம் தேசியம் என்ற உணர்வு எப்போது வந்தது. சிங்களவன் எங்களை அழிக்கமுற்பட்டு அதனிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகவே நாங்கள் ஒன்றுதிரண்டோம். அதாவது எங்களது தேசிய உணர்வு என்பது தற்காப்புத் தேசியம். அப்படியான ஒரு சூழல் எழவில்லையெனில் நாம் எப்போதோ எமது தனித்துவத்தை இழந்திருப்போம். இந்த வகையில் நாம் சிங்களவருக்கு நன்றியுடையவர்களாகின்றோம்.
நாங்கள் எங்கள் மொழியில் ஆங்கிலத்தை கலந்து எழுதுவதற்கு எத்தனையோ நியாயப்படுத்தல் வாதங்களை முன்வைக்கின்றோம். இந்த வாதத்தை அப்படியே மாற்றிப்போட்டு ஆங்கிலத்தினுள் தமிழைக் கலந்து எழுதுவதற்கு எவனுக்காவது துணிவு வருமா??? இந்த கலப்படம் செய்பவனுக்கெல்லாம் உள்ள துணிவு,தெளிவு என்னவெனில் அவன் எப்படி மட்டமாக எழுதினாலும் எந்த தமிழ் மொழிக் கொலையைச் செய்து எழுதினாலும் அதனை ஏற்று அவனுக்கு அதே மாதிரி பதில் எழுத ஏராளமான இழிச்ச வாயன்கள் எம்மிடையே உள்ளார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அதனால் அவர்கள் தொடர்ந்து அப்படி எழுத பேசச் செய்கின்றார்கள். நாங்களும் அவர்கள் எங்களை ஒட்டுமொத்தமாக படுகேவலப்படுத்துவதை கண்டு கொள்ளாது அவர்வழி பின்பற்றுவதுபற்றி சிந்திக்கின்றோம்.
பலத்த ஆய்வுகள் முயற்சிகளின் பின் காலந்தோறும் உலகில் உருவாக்கப்படும் புதியனவற்றிற்கு சரியான தமிழ்ச்சொல்லை உருவாக்க கூட எமக்கு வல்லமையில்லை என்று சொல்வது எவ்வளவு வேதனைக்குரிய விடயம். சரி அப்படியாக உருவாக்கப்பட்டவற்றிற்கான தமிழ்ச்சொற் பாவனையை ஏற்றுக் கொள்வதற்குகூட நாம் எந்தளவு தயக்கம் காட்டுகின்றோம். அதனைவிட ஏற்கனவே இருப்பனவற்றிற்கு மேலாக இன்னும் ஏராளமானவற்றை வலிந்து செயற்கையாக புகுத்துவதற்கு நாம் கற்பிக்கும் நியாயங்கள் ஏராளம். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டு செயற்படுபவர்கள் உங்கள் ஆளுமையை விருத்தி செய்யக்கூடிய வகையில் ஏதாவது புதுமைகளைப் புகுத்துங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பயனுடையதாகி எம் எல்லோரையும் பலப்படுத்துவதாயமையட்டும்.