03-15-2006, 03:29 AM
அருவி Wrote:தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
ஆகா!! அருவியின் நியாயமான கேள்வி எனது நினைவுகளை 20 வருடங்கள் பின்னோக்கி இழுக்கின்றது.
மாணவ பருவம்....
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
வழக்கம் போல பல்கலைக்கழகம் போகின்றேன். காலையில் விரிவுரைகள் இருக்கின்றன. நேரம் 8:30 இருக்கும்... துவிச்சக்கர வண்டியில் கலைப்பீடத்தை கடந்து விஞ்ஞான பீடம் நோக்கி போகும் போதே மாணவர்கள் அங்கும் இங்கும் கூடி நிற்பதில் இருந்து ஏதோ வித்தியாசம் தெரிகிறது.
மாணவர்கள் பகிஸ்கரிப்பில், பல்கலைக்கழகம் முழுவதும் மூடப்பட்டு கிடக்கிறது. போராட்டம், பாதயாத்திரை என்று ஏதேதோ ஏற்பாடுகள் பற்றி பேச்சு அடிபடுகிறது.
என்ன நடந்தது?
நேற்றிரவு பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து யாரோ மாணவர்கள் சிலரை தாக்கி மண்டையை உடைத்து விட்டார்கள். அந்த மாணவர்களுள் இறுதியாண்டு விஞ்ஞான விசேட பிரிவு மாணவர்களும், சில விரிவுரையாளர்களும் மண்டை உடைய அடிவாங்கியிருக்கிறார்கள்.
அடித்தவர்கள் "நாட்டுக்கு என்ன செய்தாய்?" என்று கேட்டுக் கேட்டு அடித்திருக்கிறார்கள். அடிவாங்கியவர்களோ, விடுதலைப்புலிகளின் மாணவர் அமைப்புடனும், ஆய்வு பிரிவுடனும் வெளியாருக்கு தெரியாமலும் தெரிந்தும் செயற்பட்டு வந்தவர்கள். இவர்களில் ஒருவர் பப்பாப்பழச்சாறில் உள்ள கருக்கலைப்பு ஆற்றல் பற்றி ஆய்வு செய்து இன்று உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியாக இருக்கிறார்.
ரெலோ அழிக்கப்பட பின் மற்றைய இயக்கங்கள் இருந்தும் இல்லாத நிலை. ஆகவே, இந்த தாக்குதல்களை நடத்தியது விடுதலைப்புலிகள் என்றும், விடுதலைப்புலிகள் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும் என்றும் கோரி இந்த போராட்டம். விஜிதரன் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். அவர் "காணாமல் போன" பிறகு சில நாட்களின் பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இப்படியாக மாணவர்களின் போராட்டம் முமூ மூச்சாக, உக்கிரமாக, வாரக்கணக்கில் நடக்க, மேஜர் முரளி வந்து ஆதரவான மாணவர்களை விரிவுரைகளுக்கு போகுமாறு கெஞ்சினார். அங்கத்தவர்களுக்கு உத்தரவு போட்டார். யாருமே போகவில்லை. விஞ்ஞான பீடத்தில், முரளி கேட்டதற்காக விரிவுரைகளுக்கு தொடர்ச்சியாக போன இரண்டே இரண்டு மாணவர்களில் நானும் ஒருவன்.
முரளி அடிவாங்கியவர்களை மருத்துவமனையில் போய் பார்த்து அந்த மாணவர்களது பெற்றோர்களையும் சந்தித்து "தவறு நடந்துவிட்டது" என்று வருத்தப்பட்டது அவர்களுக்கும் வேறு சிலருக்கும் தெரிந்திருந்தது.
மீண்டும் அருவியின் அருமையான கேள்விக்கு வருவோமா?
அருவி Wrote:தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
பல்கலைக்கழக மாணவர்கள் இன்னமும் மாணவர்கள் அருவி. அவர்கள் கற்பதற்கு வாழ்க்கையில் நிறையவே உண்டு. தவறான முடிவுகளை எடுத்து போராட்டம் நடத்தி அதன் விளைவுகளில் இருந்து அவர்கள் கற்கும் பாடங்களும் உண்டு.
மேலே பாதயாத்திரை பற்றி சொல்லி இருந்தேன் இல்லையா? பாதயாத்திரை போனவர்கள் மண்டை உடைய "மக்களிடம்" அடி வாங்கிக் கொண்டு தலையில் கட்டுடன் திரும்பி வந்தபோது கற்ற பாடங்களும் அவர்கள் கற்றவற்றுள் அடங்கும்.
நான் இதை எழுதியததனால் ஹூல் யாழ். பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வருவதை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தப்படுத்தி கொள்ளக்கூடாது. எனது அபிப்பிராயப்படி ஹூல் வன்னி ரெக்குக்கு மிகவும் பொருத்தமானவர். ஹூல் ஒரு காலத்தில் தீவிர விடுதலைப்புலிகள் ஆதரவாளர். அந்த காலத்தில் இராஜினி திரணகமவும் அவரின் சகோதரி நிர்மலா நித்தியானந்தனும் தீவிர விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள். ஹூலின் நண்பர்கள் இன்றும் விடுதலைப்புலிகளுக்கு தொழில்நுட்ப விஞ்ஞான ஆலோசகர்களாக இருக்க கூடும். .
ஹூல் இவ்வாறான நண்பர்கள் மூலம் வன்னி ரெக்கையும் தமிழீழ அரசையும் தொடர்புகொண்டு தனது விருப்பத்தை தெரிவிக்கலாம் வன்னி ரெக் மாணவர்கள் வழமை போல ஆர்ப்பாட்டம் போராட்டம் கொடும்பாவி எல்லாம் இல்லாமல் கல்வி கற்க வருவார்கள். வன்னி ரெக்கில் போராட்டங்களோ பொங்கு தமிழோ நடப்பதில்லை. அவற்றை நடத்த அது அதுக்கென்று அந்த நாட்டிலே (தமிழீழத்திலேதான்) அமைப்புகள் இருக்கின்றன
யாழ் பல்கலைக்கழக சமுதாயம் அடிவாங்கி பாடம் படிக்கும் சமுதாயம், மேற்படி பாதயாத்திரை போல.. வன்னி ரெக் மாணவர்களொ ஒன்றை காட்டிக்கொடுத்தால் அதிலிருந்து ஒன்பதை கண்டுபிடிக்கிறார்கள். தமிழீழ ஆட்சியில் கிடைக்கும் உற்சாகம் போலும்.
''
'' [.423]
'' [.423]

