03-15-2006, 12:45 AM
இந்திய விளையாட்டு அணியின் உதவிக்குழுவின் உறுப்பினர் மீது குற்றச்சாட்டு
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு சென்றுள்ள இந்திய அணிக்கு உதவி செய்யும் குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர், பெண்ணொருவருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெயரிடபப்படாத அந்த நபர் இந்திய அணிக்கு மஸாஜ் அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
விளையாட்டு வீரர்கள் தங்கியிருக்கும் கிராமத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 16 வயது பெண் ஒருவரிடம் அவர் தகாதமுறையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக மெல்போர்னில் போலீசார் தெரிவித்தனர்.
இந்திய அணிக்காக பேசவல்ல அதிகாரி ஒருவர், அந்த நபர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக கூறியுள்ளார்.
- பி.பி.ஸி. தமிழ் சேவை

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.