03-14-2006, 07:54 PM
சதியின் அடுத்தகட்டம் அரங்கேறுகிறது....
புதிய துணைவேந்தராக ஹூல் நியமிக்கப்பட்டபின் யாழ். பல்கலைக்கழகத்தில் அதிரடி மாற்றங்கள்'
யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூலை புதிய துணைவேந்தராக நியமித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,அதன் அடுத்த கட்டமாக யாழ். பல்கலைக்கழக பேரவையால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பல்கலைக்கழக பிரதம பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இவ்வாறான செயல்களை தொடர்ந்தும் தம்மால் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனவும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.கலாராஜ் மேலும் கூறுகையில்;
யாழ். பல்கலைக்கழக பேரவையால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பல்கலைக்கழக பிரதம பாதுகாப்பு அதிகாரியாக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று திங்கட்கிழமை மானியங்கள் ஆணைக்குழு ஊடாக பல்கலைக்ழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
பேரவையால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை நியமனம் செய்யும் அதிகாரம் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை. இந்த விடயத்தில் தனது அதிகாரத்தை மீறி, பல்கலை சுயாதிபத்தியத்தை சீர்குலைக்கும் வகையில் அது செயற்பட்டுள்ளது.
இந்த விடயத்தை துணைவேந்தர் ஊடாக உடனடியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனை அடுத்து அவரது பதவியேற்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூல் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னரே இவ்வாறான விடயங்கள் இடம் பெறுகின்றன. இது போன்ற பல்வேறு சம்பவங்கள் பேராசிரியர் ஹூல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்று வருகின்றன.
<span style='font-size:30pt;line-height:100%'>புதிய துணைவேந்தராக சகோதரர் ராஜன் ஹூல் உள்ளிட்ட நான்கு பேர், கடமைக்கு நீண்டகாலமாக சமுகமளிக்காது இருந்ததை அடுத்து, பதவி வகித்த முறை மூலம் அவர்களது சம்பளம், பதவி உயர்வுகள் ஆகியன நிறுத்தப்பட்டிருந்தன.
ஆனால், ரட்ண ஜீவன் ஹூல் பேரவை உறுப்பினரான பின்னர், அவர்களுக்கு மீள் நியமனம் வழங்கப்பட்டு, 15 வருடகால பதவியுயர்வு, சம்பளம் என்பன வழங்கப்பட வேண்டும் என மானியங்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற பல்கலைக்கழக சுயாதிபத்தியத்தை மீறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.</span>http://www.thinakural.com/New%20web%20site/web/2006/March/14/Local%20News.htm