Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சட் சட்`டென கோபம் வருமா?
#1
கோபம் வராத மனிதரில்லை. உங்களுக்கு ` சட் சட்`டென கோபம் வருமா? அதுதான் பிரச்சினை. பலருக்கும் வேண்டாதவராகி விடுவீர்கள்.

கோபம் எப்போதாவது வரலாம். தப்பில்லை. எப்போதும் வந்தால் தான் தப்பு.`அந்த ஆள் சரியான சிடுமூஞ்சி. எவன் மூஞ்சி கொடுத்து பேசுவான்?` என்பது போன்ற பட்டம் உங்களுக்கு நிரந்தரமாகி விட்டால் அப்புறம் நீங்கள் அம்பேல்தான். நீங்கள் நெருங்கினாலே ஒட்டம் பிடிக்கத்தொடங்கி விடுவார்கள்.

சிலர் கோபம் என்பது ஒரு பலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய பலவீனம் என்பதை போகப் போகத்தான் உணர்ந்து கொள்வார்கள். வீட்டில் கணவர் கோபக்காரர் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் முக்கிய நிகழ்வுகளைக்கூட அவரிடம் பகிர்ந்து கொள்ளப் பயப்படுவார்கள். சின்ன விஷயத்திற்கும் இப்படி கோபம் என்பது அவர்கள் சொத்தாகிப் போவதால் `எதற்கு அவரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளணும்` என்று அவரிடம் வீட்டு விஷயம் பற்றி சொல்வதையே தவிர்த்து விடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் நிலைமை சீரியஸாகி விடும்போது, அப்போதும் அந்த குடும்பத் தலைவர் விஷயம் தெரிந்ததும் தாம் தூம் என்று குதிக்கத்தான் போகிறார். அப்போது கூட நாம் சின்ன விஷயத்திற்கும் `சள்`ளென விழுவதால் தான் குடும்பம் நம்மிடம் இது விஷயமாக பேசப்பயந்திருக்கிறது என்பதை அந்த குடும்பத்தலைவர் உணர்ந்து கொள்ளமாட்டார்.

பெரும்பாலும் பொறுப்பை தட்டிக் கழிப்பவர் கள் தான் கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இவர் கள் சும்மா இருக்கும்போது கூட யாரும் வேலை சொல்லி விடக்கூடாது. உடனே முகம் மாறும். கோபத்தில் உடம்பு நடுங்கத் தொடங்கத் தொடங்கி விடும். வார்த்தை களை வாரியிறைக்கத் தொடங்கி விடுவார் கள்.

இவர்களாக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்த மாட்டார்கள். அதே நேரம் வீட்டில் எல்லாம் சரியாக நடந்திருக்க வேண்டும். கோபப்பட்டே பழகிப்போன இவர்கள் முகத் துக்கு புன்னகையே மறந்து போகும். இவர் களாக எதற்காவது சிரிக்க முயன்றால் கூட அது செயற்கையாக இவர்களுக்கே தோன் றும்.

இந்த கடுகடு பார்ட்டி இருக்கிற வீடுகளில் எப்போதும் ஒரு அசாதாரண நிலை காணப்படும். வீட்டில் உள்ளவர்களும் இவர்களால் சிரிப்பைத் தொலைத்து விட்டு பரிதாபமாக காட்சி தருவார்கள். எடுத்ததற்கெல்லாம் கோபம் என்பது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடுவதுண்டு.

கோபத்தையே தனது முதலீடாக வைத்திருந்த அப்பா அவர். தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே மகனிடம் கூட ரிங் மாஸ்டர் போலவே நடந்து கொண்டார். சின்னத்தவறு என்றாலும் கூட பெல்ட்டால் விளாசி விடுவார். இதனால் பையன் அவரிடம் பேசவே பயந்தான்.

ஒரு நாள் பக்கத்து தெரு நண்பனை பார்த்து விட்டு வரும்போது தெருநாய் ஒன்று மகனை கடித்து .லேசாக பல் பதிந்து விட்டது. மகனுக்கு அப்பாவிடம் சொல்ல பயம். அம்மாவிடம் சொல்லவும் பயம். இவனுக்கு அடி விழுந்த கையோடு அம்மாவையும் நாலு சாத்து சாத்தி விடுவார் அப்பா. அதனால் சொல்லாமல் மறைத்து விட்டான்.

நாலு வாரத்துக்குள் நாய்க்கடி விஷம் வேலையைக்காட்ட ஆரம்பித்தது. நாய் போல பையன் குரைக்கத் தொடங்கிய பிறகு விபரீதம் புரிந்த அப்பா அப்புறமாய் டாக்டரிடம் ஒடினார். ஆனால் என்ன பயன்? மகன் மரணத்தை தழுவி விட்டான். `அய்யோ கோபத்தால் என் ஒரே குலக்கொழுந்தையும் இழந்தேனே ` என்று அழுது புரண்டார் அப்பா. அதற்குப்பிறகு எஞ்சியிருந்த காலங்களில் பாதிபைத்தியமாகத்தான் அவரை பார்க்க முடிந்தது.

கோபத்துக்கு இந்த மாதிரி விலையையும் கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கோபம் நமக்குத் தேவைதானா?

Thanks:Thanthi...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
சட் சட்`டென கோபம் வருமா? - by SUNDHAL - 03-14-2006, 06:32 PM
[No subject] - by SUNDHAL - 03-14-2006, 06:39 PM
[No subject] - by ப்ரியசகி - 03-15-2006, 06:19 PM
[No subject] - by அனிதா - 03-16-2006, 07:12 PM
[No subject] - by ப்ரியசகி - 03-16-2006, 09:35 PM
[No subject] - by SUNDHAL - 03-16-2006, 11:19 PM
[No subject] - by sOliyAn - 03-17-2006, 12:31 AM
[No subject] - by அனிதா - 03-17-2006, 04:21 PM
[No subject] - by Selvamuthu - 04-04-2006, 05:26 PM
[No subject] - by AJeevan - 04-04-2006, 06:48 PM
[No subject] - by தூயவன் - 04-06-2006, 04:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)