03-14-2006, 10:48 AM
இரு தரப்பு அரசாங்கத்தின் அனுமதி வேற்று நாட்டு உயர்கல்வி நிறுவனங்களோடு உறவுகளை ஏற்படுத்தும் போதும் தேவை. நடைமுறையில் அந்த இருநாடுகளிடையும் அரசியல் இராஜதந்திர விரிசல்கள் எதுவும் இல்லாதவரை இது ஒரு பிரச்சனையில்லை. ஆனாலும் உத்தியோகபூர்வமாக இருக்கக் கூடிய உறவுகளுக்கு அப்பால் பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளுக்கு மேற்படிப்பிற்கு கூட்டு ஆய்வு முயற்சிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் கல்வி சார்ந்த தராதரம் (பாடவிதானங்கள், விரிவுரையாளர்களின் ஆய்வு விருப்பங்கள், ஆவர்களுடைய வரலாறு, எழுதிய புத்தகங்கள், ஆய்வு அறிக்கைகள், ஆய்வுகூட வசதிகள் உபகரணங்கள்) என்பன ஓப்பிடக்கூடிய தரத்தில் இருக்க வேண்டும். கல்விமான்கள் ஆய்வாளர்கள் தமது துறைசார்ந்த பிறநாட்வர்களோடு தனிப்பட்ட உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இவை பட்டதாரிகள் விண்ணப்பங்களில் சிபாரிசு (reference) பெறும்போது உதவுகிறது. அது மாத்திரமல்ல வெளிநாட்டு கல்வி ஆராச்சி சம்பந்தப்பட்ட நிதயுதவிக்கு ஒரு பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் போது கூட அங்கு யார் விரிவுரையாளர்களாக ஆய்வாளர்களாக துணைவேந்தர்களாக இருக்கிறார்கள் என்றது உதவுகிறது. மொத்தத்தில் இவர்களை அந்த பல்கலைக்கழகத்தின் வழர்ச்சி விரிவாக்கம் எதிர்காலத்தை பொறுத்தவரை power peddlers என்றே சொல்லலாம். ஆனால் அவர்களே தேசியத்திற்கு எதிரான சில விசமிகளின் கைப்பொம்மையாக இருந்திருக்கிறார்கள், இன்னமும் இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் போது அதிக அவதானம் தேவை நன்மைகள் எவ்வளவாக இருந்தாலும்.

