03-13-2006, 07:52 PM
அனைதுப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்,(இது ஜேவிபியின் கட்டுப் பாட்டில் உள்ளது) என்ன சொல்லுது ,புலிகள் தான் கூலின் நியமனத்தை எதிர்க்கிறார்கள் எண்டு, அப்ப புலியளுக்கும் இந்தப் பெயர் தடுமாற்றம் இருக்குப் போல,இந்த முட்டாள் பயல்களுக்கு என்னதத் தெரியும், பொ... அம்மான் ஒழுங்கா ஆதாரங்களைத் திரட்டவில்லைப் போல.
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm
துணைவேந்தர் பதவியிலிருந்து ஹூல் நீக்கப்பட்டால் தென்னிலங்கையில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை
விடுதலைப் புலிகளினதும், அதனது ஆதரவாளர்களினதும் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியிலிருந்து ரட்ண ஜீவன்ஹூல் அகற்றப்பட்டால் அது தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் எதிர்மறை விளைவுகளை தோற்றுவிக்குமென அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அவ்வொன்றியத்தின் பிரதான இணைப்பாளர் துமிந்து நாகமுத்து கூறுகையில்;
யாழ்.பல்கலைக்கழத்தின் ஆறாவது துணைவேந்தராக பேராசிரியர் இரத்தின ஜீவன்ஹூல் நியமிக்கப்பட்டுள்ளமையை நாங்கள் வரவேற்கிறோம். எனினும், துரதிர்ஷ்டவசமாக இந் நியமனத்திற்கு இனவாதச்சாயம் பூசப்பட்டுள்ளது. ஹூலின் இந் நியமனத்திற்கெதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள் நீதியும், நியாயமும் கலந்தவொன்றல்ல.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், தமிழ் கல்விச் சமூகமெனக் கூறிக் கொள்வோரும் அச்சுறுத்தலை விடுத்து ரட்ண ஜீவன் ஹூலினை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து அகற்ற நினைக்கின்றனர். இவர்கள் இன்னொரு விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் செயற்பாடுகளில் புலிகளின் உறவினர்கள் ஈடுபட்டுள்ளரென்பதுவே அதுவாகும்.
புலிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு வட,கிழக்கிலிருந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தென்னிலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். புலிகளுக்கும் அவர்களின் சகாக்களுக்கும் அலர்ஜியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதும் புலிகளின் திட்டம் ஒரு போதும் பலிக்காது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புலிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு தன்னால் வழங்கப்பட்ட நியமனத்தை மீளப்பெற்று மீண்டும் ஒருவரை துணைவேந்தராக நியமிப்பாராயின் அது ஜனாதிபதி,புலிகளின் அச்சுறுத்தலுக்கு அடி பணிந்த ஒருவராகவே கருதப்படும். எனவே ஜனாதிபதி எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது செயற்படுவதுடன் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் புலிகளின் கட்டிலிருந்து விடுபடவும் வேண்டுமென்றார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
இவ்விடயங்கள் பற்றி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ். விஜயகுமார் கூறுகையில்;
காலங் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களுக்கு விடுதலையை பெறும் நோக்குடன் போராடும் தமிழ் தேசியத்திற்காக எதைச் செய்ய வேண்டுமோ அதனையே யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் செய்து வருகிறோம்.
எமக்குப் பொருத்தமான துணைவேந்தரை நாமே தெரிவு செய்வோம். இதில் சிங்கள இனவாத அரசோ அல்லது இனவாதிகளின் மாணவர் அணிகளோ தீர்மானிக்க முடியாது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எனக் கூறிக் கொள்வோருடன் எமக்கு கடந்த 15 வருடங்களாக எவ்விதமான தொடர்புமில்லை. இந் நிலையில் அவர்கள் எமக்கு உபதேசம் செய்வதற்கு எந்த அருகதையுமில்லை.
அண்மையில் திருகோணமலையில் அரச படையினரால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியைக் கூட செலுத்த முடியாத நிலையே தென்னிலங்கையிலிருந்து பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் நிலையாகும். இதிலிருந்து தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களை ஆட்டிப் படைக்கும் சிங்கள இனவாதம் பற்றி முழு உலகமும் அறிந்து கொண்டது.
எனவே, இரத்தின ஜீவன் ஹூலின் விடயத்தில் எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்றார்.