03-13-2006, 05:54 PM
புதிய துணைவேந்தர் நியமனம்: கடும் கொந்தளிப்பில் யாழ். பல்கலை.!
[திங்கட்கிழமை, 13 மார்ச் 2006, 15:59 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எஸ்.றட்ணஜீவன் கூல் நியமனத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ரட்ணஜீவன் கூலின் நியமனத்தை எதிர்த்தும், கூல் ஒரு தமிழ்த் தேசத் துரோகி என்றும் "'அவரை நீக்குக அல்லது பிரச்சனைகளுக்கு முகம் கொடுங்கள்" என்று எச்சரிக்கும் சுவரொட்டிகளும் பல்கலைக்கழக சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகிந்த ராஜபக்சவினால் கூல் நியமிக்கப்பட்டுள்ளதால் யாழ். பல்கலை சமூகத்தில் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூலின் நியமனத்தை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல் றட்ணஜீவன் கூலின் தெரிவு ஜனநாயக விரோதமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தின் அமைதி நிலைக்கு பாரிய அச்சுறுத்தலை இந்த நியமனம் ஏற்படுத்தியுள்ளது என்றும் கூட்டமைப்பின் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா அரச படைகளில் அட்டூழியங்களால் இரு மாத காலத்துக்கும் மேலாக கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தியிருந்த யாழ். பல்கலைக் கழகம் தற்போதுதான் மீள இயங்கத் தொடங்கியது. இச்சூழலில் றட்ணஜீவன் கூலின் நியமனத்தால் பல்கலை. வளாகம் மீண்டும் கொந்தளித்துள்ளது.
http://www.eelampage.com/?cn=24730