Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒவ்வொரு ஆண்டும் மனைவியை மாற்றும் கிராம மக்கள்
#1
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் தர்த்ஸ் என்னும் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். தக்னு, தர்சிக், கர்குன் ஆகிய 3 கிராமங்களில் வசிக்கும் இவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகின்றனர். உலகின் பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இவர் களைத்தான் மிக, மிக பழமையான இனத்தவர்கள் என்று ஒத்துக்கொண்டுள்ளனர்.

சுமார் 2500 பேர் கொண்ட இந்த இனத்தவர்கள்மற்ற வர்களிடம் இருந்து முழுமையாக வேறுபட்டு காணப்படு கின்றனர். நல்ல உயரமாக, அழகாக இருக்கும் இவர்கள் சூரியன் சுழற்சியை கணித்து டிசம்பர் 22-ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். மற்ற இனத்த வர்களை இவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. 2500 பேரும் ஒருவரை மாற்றி ஒருவரை சார்ந்து வாழ் கின்றனர்.

பல தாரம் வைத்துக்கொள்ளும் இந்த பழங்குடிகள், ஒவ் வொரு ஆண்டும் மனைவியை மாற்றிக் கொள்வதுண்டு. இதற்காக விழாகூட நடத்துகிறார்கள். அப்போது நீண்ட வரிசையில் நின்று ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள் வார்கள். யாரைப்பிடிக்கிறதோ, அவரை திருமணம் செய்து கொள்வார்கள்.

அந்த வகையில் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருப்பதுண்டு. ஆனால் இதுவரை எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. மனைவியை மாற்றிக்கொள்ள இவர்கள் நடத்தும் விழாவை 1970ம் ஆண்டு வரை மற்ற இனத்தவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். ஆனால் தற்போது மற்ற இனத்தவர்களுக்கு தடை விதித்து விட்டு மனைவி மாற்று விழாவை நடத்துகிறார்களாம். தர்த் பழங்குடி இன மக்களிடம் சமீப காலமாக கல்வி அறிவு அதிகரித்து வருவதால் பாரம்பரிய பழக்கம் மறைந்து வருகிறது.
Thanks:malaimalar...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
ஒவ்வொரு ஆண்டும் மனைவியை மாற்றும் கிராம மக்கள் - by SUNDHAL - 03-13-2006, 05:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)