Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெஞ்சு எரிச்சல் ஏன்?
#2
சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சலா? பிரச்னையே நம்மிடம் தான்


'உணவு உண்டதும் நம்மில் பலருக்கு நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது வழக்கம். மக்கள் தொகையில் 30 முதல் 50 சதவீதம் பேருக்கு நெஞ்சு எரிச்சல் உள்ளது. இவர்களில் 100ல் 20 பேருக்கு இது அன்றாடப் பிரச்னையாகவும்இ மீதிப் பேருக்கு மழைக் காலக் காளான் போல் வரும்.

காரணம் என்ன?: நெஞ்சு எரிச்சலுக்கு அடிப்படைக் காரணம் இரைப்பையில் இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து உணவுக் குழாய்க்குள் தேவை இல்லாமல் நுழைவது தான். உணவுக் குழாயின் தசைகள் காரமானஇ சூடானஇ குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்பலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

மிகவும் இனிப்பானஇ காரமானஇ கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ் முனைக் கதவு பழசாகிப் போன சல்லடை வலை போல "தொள தொள' வென்று தொங்கி விடும். விளைவுஇ இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவுக் குழாயின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். "அல்சர்' எனப்படும் இரைப் பைப் புண் உள்ளவர் களுக்கு இப்படித் தான் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.

இறுக்கமான உடையால்...: வயிற்றில் அதிக அழுத்தம் இருந்தாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள்இ கர்ப்பிணிகள்இ இறுக்கமாக உடை அணிபவர்கள்இ வயிற்றில் கட்டியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் ஆகியோருக்கு நெஞ்சு எரிச்சல் உண்டாக இதுவே காரணம். வழக்கமாகஇ பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று குனிந்துஇ நிமிர்ந்து வேலை செய்வர். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துஇ அமிலம் மேலேறிஇ நெஞ்சு எரிச்சலை உண்டாக்கிவிடும்.

சிலருக்கு இரைப்பையின் சிறு பகுதி மார்புக்குள் புகுந்து உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிடஇ இதற்காகவே காத்திருந்தது போல் இரைப்பை அமிலம் உணவுக் குழாய்க்குள் படையெடுக்கஇ அங்கு புண் உண்டாகி நெஞ்சு எரிச்சல் தொல்லை கொடுக்கும். பலருக்கு உணவு சாப்பிட்ட உடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில் தான் அதிகமாக இருக்கும்.

என்ன பரிசோதனை செய்வது?: அடிக்கடி நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்கள் நோயின் துவக்கத்திலேயே அகநோக்கி (எண்டோஸ்கோப்) மற்றும் இதய மின்னலை வரைபடம் (இ.சி.ஜி.இ) பரிசோதனை செய்து கொண்டால் காரணம் தெரிந்து விடும்.

ஆரம்ப நிலையில் உள்ள நெஞ்சு எரிச்சலை மிக எளிதில் குணப்படுத்தி விடலாம். மசாலா கலந்தஇ எண்ணெய் மிகுந்தஇ கொழுப்பு நிறைந்தஇ புளிப்பேறிய உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதை விட மூன்று அல்லது நான்கு மணி நேர இடைவெளிகளில் சிறிது சிறிதாக சாப்பிடலாம். டாக்டர் கு. கணேசன்இ ராஜபாளையம்.

நன்றி: தினமலர்
kaRuppi
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பி - 03-13-2006, 03:34 PM
[No subject] - by iniyaval - 03-14-2006, 01:54 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-14-2006, 06:45 PM
[No subject] - by கறுப்பி - 03-14-2006, 09:23 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)