03-13-2006, 01:19 PM
ஆண்- பெண் சமவுரிமை காண்போம்
அரசின்பங்கு
(வெள்ளிக்கிழமை தொடர்ச்சி)
மேலைநாடுகளில் நடைபெறும் திருமணங்கள் கூட நிலைத்து நிற்பதில்லை. ஒவ்வொரு மூன்று திருமணத்திற்கும், ஒரு விவாகரத்து இடம்பெறுகிறது. சுவீடனில் 100 திருமணங்களில் 60 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அமெரிக்காவில் 100 திருமணங்களில் 44 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. எமது நாட்டில் விவாகரத்து அதிகமில்லையெனினும் பெண்கள் துன்புறுத்தப்பட்டு, விரக்தியுடன் வாழ்கின்றனர்.இந்த விரக்தியைப் போக்க கணவன்மாரும் சமுதாயமும் முன் வர வேண்டும். இப்படியான சூழ்நிலைகள் காரணமாக அரசாங்கமானது பெண்களின் கல்வியின் மூலம் வேலைவாய்ப்புகளின் மூலம், சொத்துரிமை மூலம் அவர்களை ஊக்குவித்து ஆணாதிக்கத்திலிருந்து விடுவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். எதற்கும் அவர்களுக்குரிய சமவுரிமை வழங்கப்பட வேண்டும்.பல நூற்றாண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
"மனை மாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்தாயினும் இல்"
( திருக்குறள் -52) எனக் கூறுகிறார். குடும்பவாழ்வில் கணவன், மனைவி இருவருக்கும் சமவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தில் கணவன் பெருமைக்கு மனைவியே காரணம் என்கிறார். இப்படியாக கணவனுக்குப் பெருமை சேர்க்கும் மனைவியைப் புறந்தள்ளலாமா?
சர்வதேச பெண்கள் வருடமான மூன்றாம் உலக மாநாடு மெக்சிக்கோவில் 1975 ஜூன் 19 முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை நடைபெற்று, 1975- 1986 வரையான பத்து வருடங்கள் ஐக்கிய நாடுகள் பெண்கள் வருடமெனப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதில் பெண்களுக்கு சம உரிமை அளிப்பதும், ஆண்களுக்கிடையேயான பாகுபாட்டைத் தவிர்ப்பதும் பிரதான நோக்கமாக இருந்தது. முன்னேற்றத்திட்டங்களில் பெண்களை ஈடுபடுத்தல், ஒருங்கிணைத்தல் என்பனவும் இதில் அடங்கும். பெண்களைத் தாக்கும் கட்டமைப்புக்களைத்தூக்கியெறிதல், பெண்களின் பிரச்சினை சமூகப் பிரச்சினையாதலால் அதை உலக முன்னேற்றத்திற்கு அணுகுதல், தீர்மானங்களை உருவாக்குபவர்களைப் பெண்களுக்காக குரல் கொடுக்கச் செய்தல் என்பனவும் முக்கியமாக இருந்தன. எனினும், இதன் பின்பு இன்றுவரை பெண்கள் சமப்படுத்தப்படவில்லையென்பது பெரும் குறையாகும். பெண்கள் பத்து மாதங்கள் சுமந்து உருவாக்கும் பிள்ளையைச் சுமந்து அவதியுற்றுப் பல்வேறு கஷ்டங்களையும் உள்வாங்கிப் பிள்ளை பெற்றெடுக்கிறாள். இவர்களது மனோ வலிமை ஆண்களிடம் இல்லையென்றே கூறலாம். இப்படியாக ஆண்கள் வேதனைக்கு உள்ளாகவில்லை. எனவே, மனோ வலிமைமிக்க பெண்களுக்குச் சம சந்தர்ப்பம் அளிப்பதனால் அவர்களும் தம்மை முன்னேற்ற வழியேற்படும். பெண்களைக் காட்சிப் பொருளாக சுகபோகப் பொருளாகக் கருதாது அவர்களால் முடியும் என்ற சிந்தனையை வளர்த்து, ஆண்கள் அவர்களுக்கு விட்டுக் கொடுத்து சம சந்தர்ப்பம அளிக்க முன் வர வேண்டும். வள்ளுவர் கூடத் திருக்குறளில் தலைவனும் தலைவியும் உடலும் உயிரும் போல எனக் கூறியுள்ளார்.
"உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொரு எம்மிடை நட்பு"
(திருக்குறள் -1122) எனவே, உடலும் உயிரும் போல உள்ள தலைவனும் தலைவியும் சம சந்தர்ப்பத்துடன் வாழ நாமும் வழியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக அரசாங்கமானது ஏற்றத்தாழ்வுகளை விடுத்து சமமாக சரிநிகராக இருபாலாரையும் பேண வேண்டும். எனவே, பெண்களுக்குரிய அந்தஸ்தை வழங்கி அவர்களது ஆளுமைக்கும் சந்தர்ப்பமளிக்கவேண்டியது அரசின் கடமைப்பாடாகும்.
பெண்களுக்கெதிரான அடக்குமுறைக் கோட்பாட்டை இல்லாதொழிக்க வேண்டும்.இப்படி இல்லாதொழிப்பதில் சகல சிவில் நிறுவனங்களும் இணைய வேண்டும். பெண்ணியம் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு இயக்கமாகும். பெண்ணின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, சமுதாய, அரசியல், பொருளாதார சூழ்நிலையில் அவர்களும், ஆண்களுக்குச் சமமானவர்கள் என்னும் உயர்நெறியை நிலை நாட்டுகின்றது. பெண்ணியம் பெண்களின் ஆளுமைத்தன்மையையும் தனித்தன்மையையும் குடும்ப நிர்வாகத்திறனையும் தட்டிக் கொடுத்து அவர்களுக்கு சம சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.பெண்கள் வீட்டில் பொக்கிஷாதிபதி,சிறந்த பொருளாதாரமேதை, வரவு செலவுத்திட்ட முகாமையாளர்.எனவே, அவளிடம் சிறந்த ஆளுமையுண்டு. ஆணாதிக்கம் ஒழிந்து பால் ரீதியாக ஒடுக்குமுறைகள் நசுக்கப்பட வேண்டும். ஆணானவன் தன் ஆதிக்க வேட்கையினால் சமுதாய உற்பத்திக்கும், உரிய ஆதார சக்தியாக விளங்கும் தாயை அடிமைப்படுத்த முனைவது எந்த நிலையிலும் ஏற்கக்கூடியதல்ல. ஆண்டவன் படைத்த இரு பொம்மைகளுள் ஒன்றான ஆண் மேலோங்கியும், பெண் கீழ் நிலையிலும் வாழும் சமுதாயம் மாற்றமடைந்து சரிசமமான சமுதாயம் வாழ முற்பட வேண்டும்.
ஆண் - பெண் சமத்துவம்
ஆசிய நாடுகளில் பெண் விடுதலையானது தேசவிடுதலை, சமூக விடுதலை ஆகியன மூலம் அணுகப்பட்டது. சீனாவில் இயுசின், இந்தியாவில் மகாத்மா காந்தி ஆகியோர் பெண்களின் நிலையை மேம்படுத்த அரும்பாடுபட்டனர். சுப்பிரமணிய பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் பெரிதும் தூண்டுதலாயமைந்தன. "பெண்களுக்கு விடுதலையின்றேல் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை"என்றார் பாரதியார். மேலும், பாரதியார் எழுதிய தமிழ்நாட்டின் விழிப்பு என்னும் கட்டுரையில் ஆண், பெண் சமத்துவம் பற்றிக் கூறுகையில்;" பெண்களுக்கு சீவன் உண்டு, மனம் உண்டு, புத்தியுண்டு, ஐம்புலன் உண்டு, அவர்கள் இயந்திரங்களல்லர். உயிருள்ள செடி கொடிகளுமல்லர். சாதாரண ஆண், பெண் எப்படியோ அப்படித்தான் பெண் இனம். புறவுறுப்புக்களில்தான் மாற்றம். ஆத்மா ஒரே மாதிரி" என்றார். எனவே, ஆண், பெண் வேறுபாடு பாலியல் ரீதியாக இருந்த போதும் பால்நிலை ரீதியாக ஆண்கள் விட்டுக் கொடுத்துப் பெண்களுக்கும் சம உரிமையளித்து சமத்துவமாக இதுவரை காலமுமிருந்த மரபு ரீதியான மனப்பாங்கை மாற்றி அவர்களுக்கும் உரிமை அளிக்க முனைவார்களாயின் விடுதலை தானாகவே ஏற்படும். பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அண்மைக்காலக் கணிப்பின்படி சமத்துவ உரிமையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. எனினும், சமத்துவம் பேசும் ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள 159 அங்கத்தவர்களில் 10 பேரே பெண்களாவர். இந்துசமய அடிப்படைத் தத்துவத்தின் படி ஒரு உடலில் ஆண் வலது புறமும், பெண் இடதுபுறமும் இருப்பதாகக் கருதும் போது, ஓர் உடல் ஏன் சமத்துவம் பேண அஞ்சுகின்றது? கேட்கவும் கொடுக்கவும் அந்த உடலினால் முடியும். எனவே,ஆண்கள் விட்டுக்கொடுத்துத் தங்கள்உடலின் அங்கமான பெண்ணை சமத்துவத்துடன் வாழ வழி செய்ய வேண்டும். உடலின் இடது பக்கத்திலுள்ள இதயம் எமது உயிர்நாடி. எனவே, இதயமாக பெண்களை ஏற்று உரிய இடத்தை அளிக்க வேண்டியது ஆண்களின் பொறுப்பாகும்.
எனவே, பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்குச் சளைத்தவர்களல்லர். சரி சமமாக வாழக் கூடியவர்கள். அவர்கள் சரிநிகராகச் செயலாற்றக்கூடியவர்கள். சம அந்தஸ்தை அனுபவிக்கக் கூடிய திறமை படைத்தவர்கள். இன்று அவர்களிடம் அறிவு கல்வியினால் ஊட்டப்பட்டுள்ளது. திறமை ஆண்களுடன் சேர்ந்து சரிநிகராக சமனாக செயலாற்றக் கூடியதாகவுள்ளது. எனவே, மனப்பாங்கிலும் அவர்கள் அவ்வப் போது மாற்றத்திற்கேற்ப மாறும் குணமுமுண்டு. எனவே, இப்படியான அறிவு, திறமை, மனப்பாங்குடைய (KNOWLEDGE, SKILL & ATTITUDE) பெண்களுக்கு ஏன் சம அந்தஸ்து வழங்க முடியாது. ஆண் பலசாலி எனவும் பெண் பூப் போல எனவும், மென்மையானவள் என்ற கருத்தும் இன்றும் நிலவுகின்றது. இந்த மென்மையானவளிடம் பிள்ளையை பத்துமாதம் சுமந்து, வலி தாங்கி, கஷ்டம் தாங்கி பெற்றெடுக்கும் மனோவலிமை கூட ஆண்களிடம் இல்லை என்றே கூறலாம். எனவே, இம் மனோவலிமையுடைய பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்குவதே சாலச் சிறந்தது. அச்சம், மடம்,நாணம்,பயிர்ப்புடைய பெண்கள் தமது மனோவலிமையினால் இவற்றுடன் வலிமையையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே, அவர்கள் பிள்ளையைப் பெற்றெடுக்கவும் வேண்டும், சுகதேகியாகப் பெறவும் வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மன வலிமையுடன், மனத்திடத்துடன் போராடும் திறமைசாலிகள் என்பதை நிரூபித்துள்ளனர். எந்த விதத்திலும் பெண்கள் ஆண்களுக்கும் சரி நிகர் சமமானவர்களே. இன்று கூட பல நாடுகளில் போர்க்களங்களிலும் பெண்கள் முன்னணியில் திகழ்கின்றார்கள். வீரவேங்கைகளாக நாட்டுக்காகப் போராடி மரணித்த பெண்மணிகள் பலர். எனவே, மனோ வலிமையுடைய வீரமுடைய, திறமையுடைய, ஆற்றல் படைத்த பெண்ணுக்கு ஏன் நாம் சம உரிமை, சம அந்தஸ்து வழங்கி அவர்களைத் தேசிய சொத்தாக, செல்வமாக வளர இடமளிக்கக் கூடாது? எதற்கும் அரசாங்கம் ஆதரவு கொடுக்க வேண்டும். பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்களல்ல என்பதையெல்லோரும் உணரும் காலம் வந்துவிட்டது. அரசாங்கம் பெண்களைத் தேசிய சொத்தாக மதிக்கும் காலமும் வந்து விட்டது பாரீர்.
முற்றும்
http://www.thinakural.com/New%20web%20site...3/Article-2.htm