03-13-2006, 11:28 AM
ThamilMahan Wrote:நீர் சாம்பல் மேட்டிலென்றாலும் தமிழீழம் கிடைத்தால் சரி என்று நினைப்பவர். நான் தமிழீழம் உலகிலேயே ஒரு சிறந்த, வளர்ச்சிபெற்ற நாடாக வரவேண்டும் என்ற அவாவினால் கருத்துக் கூறுபவன். என்னைப்பொறுத்தவரை தலைவர் தமிழீழத்தைப் பெற்றுத்தருவார் என்ற அசையாத நம்பிக்கை உண்டு. ஆனால் அந்த ஈழம் சிறந்த முறையில் உருவாக்க நிறையப்பேரின் ஒத்துழைப்புத் தேவை. அவர்களில் ஒருவர் ஹூலாக இருந்தால் நன்றாக இருக்குமென்பதுதான் எனது எண்ணம்.
இங்கே பொங்கு தமிழ்பற்றி நான் ஒருதரம்கூட பிரஸ்தாபிக்கவில்லை. எங்கிருந்து உமக்கு இந்த பொங்குதமிழ் பற்றிய எண்ணம் வந்தது என்று தெரியவில்லை.
ThamilMahan Wrote:இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்
[quote=narathar] கூல் ஐயாவுக்கும் ,உம் போன்ற அறிவிலிகளுக்கும் நல்ல பாடம் வெகு விரைவில் புகட்டப்படும்.
சரிதான். தேசவிடுதலையில் உண்மையான அவாக்கொண்டவர்கள் நாம். எமது கருத்து உங்களுக்கு ஒத்துவராவிட்டால் விட்டுவிடுங்கள். அதற்காக எம்மை தேசவிரோதிகளாக சித்தரிக்க முற்படாதீர்கள். அது எம்மனதை வேண்டுமென்றே புண்படுத்துவதற்கு ஒப்பானது.
எனது ஒரே கவலை ஒரு last name பிரச்சனைக்காக ஒரு கல்விமானை வீணே புறந்தள்ளக்கூடாதென்பதுதான். உங்களிடம் அவர் தேசத்துக்கு விரோதமானவர் என்பதற்குரிய சரியான ஆதாரங்கள் இருக்கிறதா?(புத்தகம் எழுதினார், வெளியிட்டார், இந்து மதத்தை நையாண்டி செய்தார் என்பதெல்லாம் சரியான ஆதாரமாகாது). அப்படி ஆதாரம் இருக்குமானால் அவரைப்புறந்தள்ளுவதில் உங்களுக்கு துணைநிற்க நாங்களும் தயாராயிருக்கிறோம். அதைவிடுத்து உங்களின் "புடோல்" நியாயத்துகாக ஒரு கல்விமானைப் புறந்தள்ள நாங்கள் தயாராயில்லை.
தமிழ் மகான்,
முதலில் உமது மனதிப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை, முட்டால் பசங்கள் பேச்சு என்னும் சொற்பத்தைத்தை இங்கு பாவித்தது நீர்,இது மற்றவர் மனதைப் புண்படுத்தும் என்று நீர் சிந்தித்தீரா? உமது மனம் புண்படுவது போலவே மற்றவர் மனதும் புண்படும் என்பதை உமக்கு உணர்த்துவதற்காகவே நான் அவ்வாறு எழுத வேண்டியது ஆயிற்று.ஆகவே தனி நபர் வசை பாடுதலை விடுத்து கருத்தாடவும்.
அடுத்து உமக்கு அடிப்படயில் ஒன்று விளங்கவில்லை.சிறிலங்கா அரசாங்கம் கூலை நியமிப்பது ஒரு எதிர் அரசியல் (counter-insurgency) நடவடிக்கை.இதன் மூலம் அவர்கள் யாழ்ப் பல்கலைக் கழகத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட சக்திகளைக் கட்டுப் படுத்த நினைகின்றனர்.இது வழக்கமாக எதிர்க் கலக நடவடிக்கையில், முன்னணி போரட்ட சக்திகளின் மனங்களை வெல்லுதல்(psy-ops,herats and minds campaigne) என்ற யுத்த உபாயத்தின் ஒரு அங்கமாகும்.இதற்கு அடிப்படயாக அவர்கள் பாவிக்கும் அடிப்படைய்கள் எவை?இதில் சிலவற்றை நீரே கூறி விட்டீர்,
1)மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடது,அவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளிலேயே ஈடு பட வேண்டும்.தேசிய விடுதலைப் போராட்டத்தை அவர்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.பொங்கு தமிழ் போன்ற நிகழ்வுகள்,ஊர்வலங்கள்,அரசிய போராட்டடங்கள் நடை பெறக் கூடாது.
இதற்குப் பதிலாக நாங்கள் உங்களுக்கு புதிய கட்டுடங்களைக் கட்டுகிறோம்,உங்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறோம். நீங்கள் அமைதியா இருந்து சிரிலங்காவின் ஆளுமையை யாழ்க் குடா நாட்டில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுவே அதன் செய்தி.
இன்கே கல்வி என்பது ஒரு சமுதாய நலன் சார்ந்து நோக்கப் படமால், தனி நபர்கள் படித்து,பட்டம் பெற்று, சீதனம் வாங்கி கலியாணம் செய்து, வெளி நாடுகளுக்குச் சென்று வாழ்வதயே நோக்காக் கொண்டதாக சொல்லப் படும்.இதயே நீரும் கூறி உள்ளீர்.
இங்கே ஒட்டு மொத்தமாக தனி நபர்களின் சுய நலன் என்பது, தேசிய விடுதலை என்ற பொது நலனுக்கு எதிராகப் பாவிக்கப் படப் போகிறது.இதயே நீரும் ஒத்து ஊதுகிறீர்.
போரட்டம் என்பது இவ்வாறான எதிர் நடவடிக்கைகளை அடயாளம் கண்டு அதற்கேற்ற பதில் நடவடிக்கைகளினாலயே பாதுகாக்கப் பட்டு வந்தது,இனியும் வரும்.
சாம்பல் மேட்டில் தான் எமக்கு விடுதலை என்றால் நாம் அதனையும் எதிர் கொள்ளத் தான் வேண்டும்.அழிவில் இருந்து தான் எமக்கு விடுதலை என்பதாலயே நாம் ஆயுதப் போராட்டத்தை நடத்துகின்றோம், ஏனெனில் இதை விட வேறு வழி யில்லை. நீர் நினைப்பதைப் போல் மேசயில் குந்தி இருந்து எமக்கு விடுதலையைத் தா என்பதால் எமக்கு விடுதலை வராது.ஆயுதப் போரட்டத்தால் கிடைக்கப் பெற்ற அதிகாரத்தில் இருந்தே மேசையில் பேரம் பேசல் நடைபெறுகிறது.ஆயுதப் போர் இன்றி அங்கே எதுவும் கிடயாது.
போராட்டத்தின் அடிப்படைகள் பற்றிய விளக்கம் இன்றி ,உமது நிலயில் இருந்து போராடும் சக்திகளுக்கு ஆலோசனை வழங்குவது , நகைப்புக்கிடமானது.

