Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைகோவின் நிலை சரியானதா?
#1
சரி பார்க்கலாம். வைகோஇ இது எம்மைப்பொறுத்தவரை இலட்சியம்இ உறுதிஇ தெளிவுஇ கொள்கைஇ மனம்தளராமை இன்னும் பல. இவரைப்போலதான் நான் என்றும் சொல்லுமளவிற்கு பல இளைஞர்களை தன்வசம் ஆக்கியவர் மட்டுமல்லஇ அவர் வசம் சாய்ந்தவர்கள் ஏராளம். குரலில் உறுதிஇ தெளிவுஇ பிடிவாதத்தன்மை. இது அவருக்கு பிடித்ததோ இல்லையோ மற்றவர்களுக்கு அவரைப்பிடிக்க வைத்தன.
தற்போதைய தமிழகத்தைப்பொறுத்தவரையில் கொள்ளைஇ உறுதிஇ தெளிவு என்பனவற்றில் இருவர் பெயர்கள் சாடைமாடையாக வெளித்தெரிந்தது. அதில் ஒருவர் வெளிப்படையாக சொல்லக்கூடிய வைகோ. மற்றொருவர் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

பொதுவாகவே இலட்சியவாதிகளின் பாதை மிகவும் கடினமானதாக இருக்கும். அதிலும் பிறருக்காக தன்னை அர்ப்பணித்தல் என்பது சிறந்ததாக கருதப்படுகின்றது. என்னடா வைகோ பற்றி எழுத வெளிக்கிட்டு இலட்சியம் பற்றி கிறுக்குகின்றான் என்று யோசிக்க வேண்டாம். வைகோ பற்றி எழுதுவதானால் அதுபற்றியும் எழுதவேண்டும்.

சரிஇ வைகோவின் நிலை சரியானதா? அதைப்பார்ப்போமாகின் முற்றிலும் சரியானதே. வைகோவின் நிலை முற்றிலும் அரசியல் நிலை. ஆம். வைகோவின் நிலை சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட முடிவுமாகும்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தளபதியாகஇ பிரச்சார பீரங்கியாக கலைஞரின் வாரிசாக வலம் வந்த வைகோ குடும்ப நலன்கருதி ஆளாக்கப்பட்டவராலேயே அறுக்கப்பட்ட வேதனையையும் அனுபவித்தவர். கலைஞருக்குப்பின் வைகோ என்கின்ற நிலையில் கலைஞர் எடுத்த முடிவு? அவரைப்பொறுத்தவரையில்இ ஒருவாள் உறையில்இ மறுவாள் கையில் என்கின்ற நிலையில் கையில் உள்ளதைக்காட்டி பயமுறுத்திக்கொண்டு உறையில் உள்ளதை அரசவாள் ஆக்க முயற்சி செய்தார். உறைவாள் அரசவாளான பின்னர் கைவாள் கொல்லன் பட்டறையில் பழைய இரும்பாக இருக்கும் என்கின்ற நினைப்பில் இருந்தபோதுதான் தனது முடிவிற்கு தன்கழக உடன்பிறப்புக்களே ஆப்பு வைப்பதை புரிந்துகொண்டார். அதனால் எங்கே தனது பதவிக்கு ஆபத்தா? அல்லது கட்சிக்கு ஆபத்தா?இ என்கின்ற நிலையில் ஆபத்துஇ தன் தலைக்கு ஆபத்து தற்கொலைப்படைகொண்டு தாக்கவருகின்றான் வை. கோபாலசாமி எனக்கத்தி அன்றுவரை தன்தம்பிஇ கழக வாரிசுஇ போர்வாள்இ மனச்சாட்சி என்;று கலைஞரால் கௌரவிக்கப்பட்டவர் கவுக்கப்பட்டார்.

அதன்பின் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் இருகட்சிகளின் தலைவர்களாக கூட்டுச்சேருகின்றனர். அப்போ வைக்கோ தேவைப்பட்டது. அதே வைகோ தேவைப்பட்டது. ஒரே கொள்கையுடைய வைகோ தேவைப்பட்டது ஏன்?. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 40 எம்பிக்கள் தேவை. ஆதலால் தேவைப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் 40ம் வேணும் என்றால் நல்ல கொள்கையுடைய தலைவன் தேவை. 40ம் வந்துவிட்டது. இனி தமிழகதேர்தல். இனியும் தேவை வைகோ. ஆனால் தமிழக தேர்தல் முதல்நாள்வரை கலைஞர் நினைப்பில் இனி வைகோ இருந்தால் என் அணிஇ அல்லது வைகோ தனியாகவே போட்டிபோட வேண்டும் என்கின்ற நினைப்பில் திளைத்திருந்தார். காரணம் மாற்றணிக்கு வைகோ போக விரும்பமாட்டார் என்பதே கலைஞர் நினைப்பு. மாற்றணிக்குத்தாவ வைகோவின் பலமான கொள்கை வைகோவிற்கு தடையாகவும் தனக்கு கொடையாகவும் இருக்கும் என்று நினைத்தார். நடந்தது. நடக்கக்கூடாதது எதுவும் இல்லை. ஆனால் நடந்தது.

ஆம் ஜெயலலிதாவின் கூட்டணியில் வைகோவின் ம.தி.மு.க. இது தேவையா? எனச்சிலர் கேட்கலாம். ஆனால் தேவை எனப்பலர் சொல்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதற்காக அன்று ஜெயலலிதா வைகோவை சிறையில் அடைத்தார். ஆனால் அதே வைகோஇ அதே ஜெயலலிதா முன்னிலையில் மிக உறுதியாக நான் இப்பவும் சொல்கின்றேன் விடுதலைப்புலிகளை நான் என்றும் ஆதரிப்பேன் என்று. இதுதான் வைகோவின் இமாலய வெற்றி. ஈழவிடுதலை அமைப்பும்இ தமிழக கட்சிகளும் வேறுவேறானவை என்பதை புரிந்துகொண்டால் சரி.

இரா.கு

மலரவன்
www.tamilkural.com

Reply


Messages In This Thread
வைகோவின் நிலை சரியானதா? - by malaravan - 03-13-2006, 05:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)