03-13-2006, 01:00 AM
Jude Wrote:யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளிநாடுகளில் வேலை பெற சிரமப்படுவதன் காரணம் இப்போது எனக்கு புரிகிறது. இவர்களுக்கு பகுத்தறிவு குறைவாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல ஜூட். யாழ் பல்கலையில் படித்தவர்கள் உயர்கல்வியைத்தொடர வெளிநாட்டு பல்கலைகளில் விண்ணப்பம் செய்யும் போது. "யாழ் பல்கலையா? அது எந்தக்கடையில் விற்கிறது" என்று கேட்குமளவுக்கு யாருக்கும் அதைப்பற்றித் தெரிந்திருப்பதில்லை. இப்படி ஒரு பல்கலைக்கழகம் இருப்பது தர நிர்ணயம் (evaluation) செய்வர்களுக்குக் கூட சிலநேரங்களில் தெரியாமல் இருப்பதுதான் கொடுமை. யாழ் பல்கலையின் பட்டத்தை எதோ கரீபியன் பட்டம் போல ஒரு சந்தேகத்துடன் கூட நோக்குகிறார்கள் (கரீபியன் பட்டம் என்பது: கரீபியன் நாட்டில் சில நூறு பல்கலைகள் இருக்கின்றன. இவையாவும் பணத்தை வாங்கிக்கொண்டு கையில் டிகிரியை கொடுத்துவிடுகின்றன. இந்தப்பட்டத்தை பெற நீங்கள் ஒரு விரிவுரைக்கு செல்லவோ பரீட்சை எழுதவோ வேண்டியதில்லை).
மேற்கூறிய அனைத்தும் எனது அனுபவங்களினூடாக கண்ட உண்மைகள்.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

