03-12-2006, 11:40 PM
<b>யாழ். புதிய துணைவேந்தர் கவனத்திற்கு. </b>
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் இரத்தினஜீவன் கூல் அவர்களை சிறிலங்காவின் ஜனாதிபதி நியமித்திருப்பதானது முற்று முழுதான சுயலாப அரசியல் ஆதாயங்களை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட நியமனமாகும். யாழ் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது துணைவேந்தராக பேராசிரியர் மோகனதாஸ் பதவி வகித்தார். ஒரு உபவேந்தரின் பதவிக்காலம் மூன்று வருடங்களாதலால் இன்றுடன் மோகனதாஸ் அவர்கள் ஓய்வு பெறுகின்றார்.
ஆறாவது உபவேந்தரை நியமிக்குமாறு நடைபெற்ற வாக்கெடுப்பில் பேராசிரியர்களான ஆர். குமாரவடிவேல், எஸ்.கந்தசாமி,இரத்தினஜீவன் கூல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
[b] இவர்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர். குமாரவடிவேல் அவர்களை நியமிக்குமாறு பரிந்துரைத்திருந்தது. ஆனால் அப்பரிந்துரை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு பேராசிரியர் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் ஊழியர்களிடையேயும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நியமனத்தை இரத்துச் செய்யுமாறு வன்மையாகக் கண்டித்துள்ளன.
[b] யாழ்பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் உணர்வுகளுக்கும் தேசிய விடுதலை நோக்கிய போராட்டத்திற்கு மாணவர் சமூகம் நடத்துகின்ற அளப்பெரிய பங்களிப்புகளுக்கு ஆதரவு நல்கின்ற களநிலைமைகளை யதார்த்தமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு துணைவேந்தர் அவசியமானது எனவும் அதற்கான அம்சங்களை பேராசிரியர் ஒப்பீட்டு ரீதியில் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச் சாட்டு யாழ். பல்கலைக்கழக சமூகத்தினால் முன்வைக்கப்படுகின்றது
உண்மையில் இக்கூற்று யதார்த்தமானது ஈழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களப் பேரினவாத அடக்குமுறை அரசபயங்கரவாத அநியாயங்கள், சிங்களப் படைகளின் கொடூரங்கள் பாலியல் வன்புணர்வுகள் எனப் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது அதனை எதிர்த்து அகிம்சை வழியில் தமது உணர்வுகள் ரீதியாக சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதில் யாழ். பல்கலைக்கழகம் காத்திரமான பங்களிப்பை ஆற்றி வருகின்றது.
யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக இடம்பெற்ற பொங்குதமிழ் எழுச்சி, பொங்குதமிழ் பிரகடனங்கள் என்பன உலகளாவிய ரீதியில் சிறிலங்கா அரசிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர் சமூகம் மாத்திரமன்றி ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தின் உணர்வு ரீதியான போராட்டங்களாகவே அவை வெளிப்பட்டன.
அண்மைக்காலமாக சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கள் பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கெடுபிடிகள் அதிகரித்த காலகட்டத்தில் யாழ்.பல்கலை க்கழக சமூகத்தின் அகிம்சை வழிப்போராட்டங்களின் கனதியாயிருந்தன.
யாழ் புங்குடுதீவு மாணவி மீதான கடற்படை காமுகர்களின் கொடூர செயலைக் கூட கண்டித்திருந்ததுடன் அகிம்சைவழிப்போராட்டங்களில் ஈடு பட்ட வேளை பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் மீது சிங்களப் படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடாத்தி பெரும் களேபரத்தைக் கூட ஏற்படுத்தியிருந்தனர்.
அது மாத்திரமன்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட குடாநாட்டின் கல்வி நடவடிக்கைகள், கல்வி சமூகத்தின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான இராணுவக் கெடுபிடி, அச்சுறுத்தல்கள் என்பன தற்போது தொடர்கதையாகிச் செல்கின்ற நிலையில் யாழ்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்கள் தமது தேசிய விடுதலைக்கான குரல்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தாத வகையில் தான் இந்த உபவேந்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் யாழ். பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போரா ட்டங்களுக்கு உந்து சக்தியாக செயற்படக்கூடிய தேசிய உணர்வுமிக்க ஒரு உபவேந்தரே யாழ். பல்கலைக்கழகத்துக்கு அவசியமானது. எனவே அதற்கான வழியைப் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டு இருக்கும் கூல் அவர்கள் விட்டுக் கொடுக்கும் வகையில் பதவியை இராஜினாமாச் செய்வது சிறந்த பண்பாக அமையும். அதைத் தவிர்த்து மாணவர்கள் மற் றும் ஊழியர்களின் மனநலன்களுக்கு மாறான ஒருவராக நிருவாகத்தைப் பொறுப்பேற்று நடத்த முனைந்தால் ஒரு போதும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சமூகம் ஒத்துழைப்பு வழங்காது என்பது உறுதி. .
<i>எடுத்தது ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பில் இருந்து.</i>

<b>
?
?</b>-
?
?</b>-