03-12-2006, 11:06 PM
kurukaalapoovan Wrote:இங்கு இந்து மதத்திற்கு எதிரா ரட்ணஜீவன் எழுதியதால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்ற அனாவசியமான கீழ்த்தரமான எதிர்ப்பிரச்சாரத்தை தவிர்த்தால் நல்லம்.
நல்ல ஆலோசனை குறுக்காலபோவான். நாரதர் போன்றவர்கள் இனிமேலும் கீழே மேற்கோள் காட்டியிருப்பது போன்ற கீழ்த்தரமான தவறுகளை செய்யக்கூடாது.
narathar Wrote:ரட்ணா ஜீவன் ஹீலின் ஆய்வு.
"THE EXILE RETURNED'-A Self Portrail of Tamil Vellahlas of Jaffna என்ற அந்த பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹீலின் புத்தகத்தை வாசிக்கும் போது ஒரு ஆபாச சஞ்சிகையை வாசிக்கும் எண்ணம்தான் தோன்றுகின்றது. ....
.....
தமிழர் பாரம்பரியத்தையும், சைவசமயத்தையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்குக் கேவலப்படுத்தியிருக்கிறது இந்த நூல். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது மதத்தில் பற்று இருக்கு வேண்டும் தான். ஆனால், அதற்காக இன்னொரு மதத்தைக் கேவலப்படுத்திக் கிண்டலடித்துத் தான் தன்து மதப்பற்றைக் காட்ட நினைப்பது வரவேற்கப்படக் கூடிய தொன்றல்ல.
.............
.............
இரட்ணஜீவன் ஹூல் எழுதிய புத்தகம் அவரது தலைப்பு படி "திரும்பி செல்லும் வெளியேறியோர். ஒரு தமிழ் வெள்ளாளனின் சுயசரிதை." அவரைப்பற்றியதும் அவரது சமுகத்தை பற்றியதும். அவரது மூதாதையர் இந்துக்களாக இருந்தவர்கள். அவர்களைப்பற்றியும் அவர்களும் தானும் வாழும் சமுதாயம் பற்றியும் அவர் எழுதினார். அதை இங்கு ஹூல் இந்து சமயத்துக்கு எதிரானவர் என்றும் ஆகவே அவர் யாழ் பல்கலைக்கழகத்துக்கு பொருத்தமற்றவர் என்றும் காட்ட முயன்றவர் நாரதர்.
கிறிஸ்தவர்கள் பற்றி இந்துக்கள் என்றுமே எழுதியதில்லையா? அல்லது கிறிஸ்தவத்தில் உள்ள நகைப்புக்கிடமான ஆபாசமான விடயங்கள் பற்றி இந்துக்கள எழுதியதில்லையா? இது கருத்து சுதந்திரம். பேராசிரியருக்கு தான் தன்னைப்பற்றியும் தனது சமுதாயம் பற்றியும் எழுத உரிமை உண்டு. அந்த கருத்துக்கள் தவறானால் மறுத்து எழுதும் உரிமை எவருக்கும் உண்டு. அதை விடுத்து கீழ்த்தரமாக அனாவசியமாக அவர் இந்துக்களை பற்றி எழுதியதால் யாழ் பல்கலைக்கழகத்துக்கு பொருத்தமில்லாதவர் என்று சமய மேலாண்மை அல்லது ஆதிக்கத்தை காட்ட நினைப்பது மத துவேசமாகும்.
இவ்வாறான, இந்து மதத்திற்கு எதிரா ரட்ணஜீவன் எழுதியதால் எதிர்ப்பு என்ற அனாவசியமான கீழ்த்தரமான பிரச்சாரத்தை தவிர்த்தால் நல்லம்.
''
'' [.423]
'' [.423]

