03-12-2006, 09:35 PM
Birundan Wrote:ஞாயிறு 12-03-2006 17:59 மணி தமிழீழம் [நிருபர் செந்தமிழ்]
ரட்ணஜீவன் கூல் பதவியேற்பாரானால் மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் - கலைப்பீடம் எச்சரிக்கை
இந்தக்கலைப்பீடத்தை factory என்றுதான் விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள் அழைப்பார்கள். இவர்கள் பல்கலைகழகம் வருவதே ஒரு பொழுதுபோக்கிற்குத்தான். ஆராயச்சி கண்டுபிடிப்பு என்றால் எதுவுமே தெரியாது.
[quote=narathar]நான் முன்னரே கூறியபடி எமக்கோ அல்லது யாழ்ப் பல்கலைக் கழகத்திற்கோ விடிவைத் தருவது எமது தேசிய விடுதலயே அன்றி வேறொன்றும் அல்ல.இதன் பாற்பட்டு போராடும் முன்னணி சக்தியாக உள்ள யாழ் மாணவர்களை நிர்வாகதினூடாக தனிமைப் படுத்துவது, போராட்டத்தின் உக்கிரத்தை மழுங்கடிக்கும் வகையான நடவடிக்கைகளை பல்கலைக் கழகத்திற்குள் மேற் கொள்வது,பல்கலைக் கழ்கத்தை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிடியை பல்கலைக் கழக மாணவர் மத்தில் வலுப்படுத்துவது போன்ற இன்னொரன்ன நோக்குடனயே இந்த நியமனம் இடம்பெறுகிறது.கூல் வந்தால் ,அரசாங்கத்தின் காசு வரும் தான் ,பல்கலைக் கழகம் அபிவிருத்தி செய்யப் படும் தான் இதற்காக நாம் கொடுக்கும் விலை எமது தேசிய விடுதலைப் போரட்டாமாகத் தான் இருக்கும்.இதற்காகவா ஆயிரம் ,ஆயிரம் மாவீரர் தம் இன்னுயிரை ஈந்தனர்?
நீர் சாம்பல் மேட்டிலென்றாலும் தமிழீழம் கிடைத்தால் சரி என்று நினைப்பவர். நான் தமிழீழம் உலகிலேயே ஒரு சிறந்த, வளர்ச்சிபெற்ற நாடாக வரவேண்டும் என்ற அவாவினால் கருத்துக் கூறுபவன். என்னைப்பொறுத்தவரை தலைவர் தமிழீழத்தைப் பெற்றுத்தருவார் என்ற அசையாத நம்பிக்கை உண்டு. ஆனால் அந்த ஈழம் சிறந்த முறையில் உருவாக்க நிறையப்பேரின் ஒத்துழைப்புத் தேவை. அவர்களில் ஒருவர் ஹூலாக இருந்தால் நன்றாக இருக்குமென்பதுதான் எனது எண்ணம்.
narathar Wrote:அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பொங்கு தமிழ்
இங்கே பொங்கு தமிழ்பற்றி நான் ஒருதரம்கூட பிரஸ்தாபிக்கவில்லை. எங்கிருந்து உமக்கு இந்த பொங்குதமிழ் பற்றிய எண்ணம் வந்தது என்று தெரியவில்லை.
[quote=narathar] கூல் ஐயாவுக்கும் ,உம் போன்ற அறிவிலிகளுக்கும் நல்ல பாடம் வெகு விரைவில் புகட்டப்படும்.
சரிதான். தேசவிடுதலையில் உண்மையான அவாக்கொண்டவர்கள் நாம். எமது கருத்து உங்களுக்கு ஒத்துவராவிட்டால் விட்டுவிடுங்கள். அதற்காக எம்மை தேசவிரோதிகளாக சித்தரிக்க முற்படாதீர்கள். அது எம்மனதை வேண்டுமென்றே புண்படுத்துவதற்கு ஒப்பானது.
எனது ஒரே கவலை ஒரு last name பிரச்சனைக்காக ஒரு கல்விமானை வீணே புறந்தள்ளக்கூடாதென்பதுதான். உங்களிடம் அவர் தேசத்துக்கு விரோதமானவர் என்பதற்குரிய சரியான ஆதாரங்கள் இருக்கிறதா?(புத்தகம் எழுதினார், வெளியிட்டார், இந்து மதத்தை நையாண்டி செய்தார் என்பதெல்லாம் சரியான ஆதாரமாகாது). அப்படி ஆதாரம் இருக்குமானால் அவரைப்புறந்தள்ளுவதில் உங்களுக்கு துணைநிற்க நாங்களும் தயாராயிருக்கிறோம். அதைவிடுத்து உங்களின் "புடோல்" நியாயத்துகாக ஒரு கல்விமானைப் புறந்தள்ள நாங்கள் தயாராயில்லை.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

