Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்ன நினைக்கிறிங்க?
#6
மருத்துவ பரிசோதனையில் மிலொசவிச் உடல்

மறைந்த முன்னாள் யுகொஸ்லாவியத் தலைவர் ஸ்லொபதான் மிலொசெவிச் அவர்களின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுகொள்ள அவரது உடல் மீது பிரேத பரிசோதனைகள் நெதர்லாந்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

த ஹேக் போர்க்குற்ற நீதிமன்றச் சிறையில் நேற்று சனிக்கிழமை இரவு இறந்து கிடந்த அவருக்கு வயது 64.

அவர் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அவருடைய வழக்கறிஞர் மிலொசெவிச் அவர்கள் இறப்பதற்கு இருநாள் முன்னதாக த ஹேக் இலுள்ள ரஷ்ய தூதரகத்துக்கு எழுதிய கடித்தின் நகலை வெளியிட்டு, அதில் தன்னை நஞ்சூட்டிக் கொல்ல முயற்சிகள் நடப்பதாக அவர் ஏழுதியுள்ளதாகக் கூறினார்.

த ஹேக் நீதிமன்ற அரசு தரப்புத் தலைமை வழக்கறிஞரான கார்லா டெல் பொந்தே அவர்கள் இந்தக் குற்றச்சாட்டு வெறும் வதந்தி மட்டுமே என்று முன்னர் தெரிவித்திருந்தார்.

இருந்தாலும் மிலொசொவிச் ஆதரவாளரும் பெல்கிரேட் பத்திரிகைகள் பலவும் அவரை த ஹேக் போர்க் குற்ற நீதி மன்றமே கொன்றது என்று கூறுகின்றனர்.

அவருக்கு போதுமான அளவு மருத்துவ கண்காணிப்பு வசதி வழங்க த ஹேக் போர்க்குற்ற நீதிமன்றம் தவறிவிட்டது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மிலொசொவிச் பிரேத பரிசோதனையை மூத்த சேர்பிய வைத்திய நிபுணர் குழு ஒன்று பார்வையிடுகின்றது.

BBC Thamiloosai
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 03-12-2006, 04:33 PM
[No subject] - by SUNDHAL - 03-12-2006, 04:46 PM
[No subject] - by நர்மதா - 03-12-2006, 04:53 PM
[No subject] - by Vaanampaadi - 03-12-2006, 09:24 PM
[No subject] - by Vaanampaadi - 03-12-2006, 09:37 PM
[No subject] - by Niththila - 03-13-2006, 11:42 AM
[No subject] - by தூயவன் - 03-13-2006, 02:02 PM
[No subject] - by Niththila - 03-13-2006, 02:06 PM
[No subject] - by தூயவன் - 03-13-2006, 02:21 PM
[No subject] - by SUNDHAL - 03-13-2006, 02:29 PM
[No subject] - by தூயவன் - 03-13-2006, 02:32 PM
[No subject] - by SUNDHAL - 03-13-2006, 02:43 PM
[No subject] - by Niththila - 03-13-2006, 02:52 PM
[No subject] - by kuruvikal - 03-13-2006, 03:28 PM
[No subject] - by SUNDHAL - 03-13-2006, 03:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)