03-12-2006, 06:43 PM
ThamilMahan Wrote:இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.
மேற்குறிப்பிட்ட உமது புலம்பலில் இருந்து தெரிவது, நீர் ஈழத்தில் இருந்து வெகு தூரத்தில் தனிமையில் இருந்து ஈழத்தைப் பற்றிய கற்பனை உலகில் இருப்பது.கூலின் பின் புலம் பற்றியோ யாழ் பல்கலைக் கழகத்திற்கு அவர் அனுப்பபடுவதன் அரசியல் சதி பற்றியோ எதுவித அறிவோ இன்றி மற்றவரை முட்டாள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ,ஒரு அடிமுட்டாள் என்று.
நான் முன்னரே கூறியபடி எமக்கோ அல்லது யாழ்ப் பல்கலைக் கழகத்திற்கோ விடிவைத் தருவது எமது தேசிய விடுதலயே அன்றி வேறொன்றும் அல்ல.இதன் பாற்பட்டு போராடும் முன்னணி சக்தியாக உள்ள யாழ் மாணவர்களை நிர்வாகதினூடாக தனிமைப் படுத்துவது, போராட்டத்தின் உக்கிரத்தை மழுங்கடிக்கும் வகையான நடவடிக்கைகளை பல்கலைக் கழகத்திற்குள் மேற் கொள்வது,பல்கலைக் கழ்கத்தை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிடியை பல்கலைக் கழக மாணவர் மத்தில் வலுப்படுத்துவது போன்ற இன்னொரன்ன நோக்குடனயே இந்த நியமனம் இடம்பெறுகிறது.கூல் வந்தால் ,அரசாங்கத்தின் காசு வரும் தான் ,பல்கலைக் கழகம் அபிவிருத்தி செய்யப் படும் தான் இதற்காக நாம் கொடுக்கும் விலை எமது தேசிய விடுதலைப் போரட்டாமாகத் தான் இருக்கும்.இதற்காகவா ஆயிரம் ,ஆயிரம் மாவீரர் தம் இன்னுயிரை ஈந்தனர்?
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பொங்கு தமிழ் போராட்டத்தை எள்ளி நகையாடியதன் மூலம் , நீர் உம்மை வெகுவாக அடயாளம் காட்டி உள்ளீர். இதற்கு மேலும் உம் போன்றவரின் கருத்துக்கு பதிற் கருத்து எழுத வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
கூல் ஐயாவுக்கும் ,உம் போன்ற அறிவிலிகளுக்கும் நல்ல பாடம் வெகு விரைவில் புகட்டப்படும்.

