03-12-2006, 05:08 PM
ஞாயிறு 12-03-2006 17:59 மணி தமிழீழம் [நிருபர் செந்தமிழ்]
ரட்ணஜீவன் கூல் பதவியேற்பாரானால் மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் - கலைப்பீடம் எச்சரிக்கை.
மாணவர்களின் மன உணர்வுகளை கவனத்தில் எடுக்காது பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி ஏற்பாரேயானால் பெரியளவிலான மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.புருசோத்தமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்சமூகத்துக்கும், தமிழ் மாணவர்களுக்கும் துரோகம் இழைத்த பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் எமது பல்கலைகழகத்தின் துணைவேந்தராக வருவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய விரோதியான ரட்ணஜீவன் கூலை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிப்பதன் மூலம் தமிழ் மாணவர்களது கல்வியையும் தேசிய உணர்வுகளையும் மழுங்கடிக்க முயல்கிறார். இதனை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் புருசோத்தமன.
பல்கலைக்கழக சமூகத்தினதும் மாணவர்களினதும் மனஉணர்வுகளுக்கு மதிப்பளிக்காது பேராசிரியர் கூல் ஜனாதிபதியின் விருப்பப்படி துணைவேந்தர் ஆசனத்தில் அமர முற்படுவாரேயானால் அவருக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் குதிப்பதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.
நன்றி>புதினம்

.
.
.