03-12-2006, 04:47 PM
poonkudiyal Wrote:மதிப்பிற்குரியவர்களே வணக்கம்!
தங்களின் ஆதங்கங்கள் எமக்கு புரிகின்றது. நீங்கள் ஒருசாரர் ரட்ணஜீவன் கூலின் நியமனத்திற்காக குரல் கொடுக்கின்றீர்கள். ஆனால் மற்றையவர்கள் தடுக்கின்றார்கள். ஏன்? அவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன? சிந்தித்தோமா?
இவ்விடயத்தை இணையவலையில் ஏற்றிய தமிழ் மகனின் (மகான்) கருத்தென்ன? ஆழ நாம் நோக்கினோமா? அவர் சொல்ல வரும் விடயம் யாதென பார்த்தோமா? அவர் எழுதுவதற்கெல்லாம் நாமும் பதில் எழுதியும் அவர் இன்னும் மேற்தட்டு (படிப்பை) நிலையிலிருந்து இறங்காமல் வீம்பிற்காக வாதம் செய்வதை அவரின் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக கருதுகின்றேன். மேற்படி தமிழ்மக(h)ன் கூலின் மாணவன் என்பது மட்டும் எனக்கு தெரிகின்றது. குருவிற்காக மதிப்பளிக்கும் அவர் பாங்கு மெச்சத்தக்கது.
மன்னிக்கவும். நான் ஒரு நாள்கூட அவரது மாணவராக இருந்ததில்லை. இன்னும் ஏன் நான் அவரை ஒரேயொரு முறைதான் சந்தித்திருக்கிறேன்.
poonkudiyal Wrote:அதற்காக பசுவிற்கு கொம்பு ஏன் தலையில் இருக்கின்றது. முதுகில் இருந்தால் என்ன? என வாதம் பண்ணுவதும் சரியில்லை. குடும்பத்தில் கணவனோ அன்றி மனைவியே சரியில்லை என்று கண்டால் பேசித்தீர்க்கப்பார்ப்போம். அன்றி பிரிந்து வாழப்பார்ப்போம். அதைப்போன்றே யாழ் மாணவர் சமுதாயமும் தற்போது வேண்டிநிற்கின்றது. திரு. கூலவர்களுக்கு இதுவரைக்கும் யாழ் மண்ணின்மேல் இல்லாத பற்று இப்போ வரக்காரணம் என்ன? தான் பிறந்த மண்பற்று இல்லையென சொல்ல வரவில்லை. யாழ் மாணவர்களின் கல்வித்தகமைபற்றிய ஆர்வம் இல்லாதது ஏன்? பேராதனையில் சேரமுடிந்த அவருக்கு ஏன் பிறமாவட்டங்களில் சேர முடியவில்லையா? அல்லது பிற மாவட்டங்களில் வேலை செய்ய முடியவில்லையா?
ஆமாம் முடியவில்லை. காரணம் இலங்கையில் பொறியியல் பீடம் பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களில் மட்டுமே இருக்கிறது.
poonkudiyal Wrote:எத்தனை கோடிகளை துறந்து இலங்கை வந்திருந்தாலும் தாயகத்திற்கு எதிராக இப்பொதும் கருத்துடையவராக இருப்பின் அவரின் சேவை தேவையில்லை. அவர் எப்படி படித்து முன்னுக்கு வந்தாரோ அதேபோன்று தமிழ் மாணவர் சமுதாயமும் முன்னுக்கு வரும். நான் நினைக்கின்றேன் 1999ம் ஆண்டு யாழ் இந்துக்கல்லு}ரியில் பயின்ற மாணவன் இளங்குமரன் என்பவர் கூல்போன்றே கணிதத்துறையில் பயின்று இதுவரை எடுக்கமுடியாத அளவிற்கு 397 புள்ளிகள் பெற்று இலங்கை ரீதியில் முதன்மை பெற்றிருக்கின்றார். இவர் தற்சமயம் அவுஸ்ரேலியாவில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கின்றார். இவரை அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் தங்களுடன் வேலைசெய்வதற்கு ஒப்பந்தம் செய்வதாகவும் அதற்கு ஒத்துழைக்கும் வண்ணமும் கேட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது. இதை எழுதுவதன் காரணம் மேற்படி கூலைவிட திறமையானவர்கள் எம்தமிழ்ச்சமூகத்தில் நிரம்பவே இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு எதிராக சிங்களத்தின் பொறியில் கூல்போன்றோர் மட்டுமன்றி கனடாவில் புூலோகசிங்கம் போன்றோரும் இருக்கின்றார்கள்.
இருக்கிறார்கள், நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதில் எத்தனைபேர் மேற்கத்திய எசமான்களுக்கு சேவை செய்வதை விடுத்து தனது மக்களுக்கு சேவை செய்வதே மேல் என்று நினக்கிறார்கள்? நீங்கள் தரும் மேற்படி உதாரணமே அதற்குச் சான்று. நாசாவுக்கு போய் அமெரிக்கன் இன்னும் உலகில் வலுப்பெற உதவுவார்கள்.
poonkudiyal Wrote:ஆகவே மேற்படி கூலுக்கு வக்காலத்து வாங்கி அவரிடம் கூலான வார்த்தை கேட்பதைவிடுத்து 'நிதர்சனத்திற்கு' வாருங்கள். கூலை வேண்டாமென்பவர்கள் அவர்வந்து விரிவுரை செய்தால் அது மண்டையில் ஏறுமா? மேற்படி விடயம் தெரிந்தும் திரு கூல் அங்கேதான் செல்வேன் என்றால் அவர்தம் மண்டையில் (அவர் மண்டையெல்லாம் கூழ்) என்னதான் இருக்கும். ஆகவே கூலும் சரி, அவரின் விசிறிகளும் சரி, அவர்களை ஆட்டுவிக்கும் சீலங்கா மன்னிச்சிருங்கோ சிறீலங்காவும் சரி தாம் செய்ய நினைத்தது (பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் மாறியகதை)போய் அதன் எதிர்விளைவாக ஏதாவது பயங்கரத்தில் மாட்டி முழிக்கப்போகின்றார்கள். காரணம் யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பு கூல் தமது வளாகத்திற்குள் நுழைவதை பார்க்கின்றோம் என சவால் விட்ட நிலையை மீண்டும் ஞாபகப்படுத்துவதற்காகவே அவ்வாறு எழுதியிருக்கின்றேன்.
புூங்குடியாள்
வாழவிடு அன்றி வழிவிடு
அது சரிதான் நான் ஏற்கனவே சொன்னது போல இந்த முட்டாப்பயலுகளுக்கு இதெல்லாம் எங்கே விளங்கப்போகுது. போராட்ட வரலாற்றில் எத்தனையோ அறிவுஜீவிகளை விரட்டியடித்தோம் அதில் இவரும் ஒருவராக இருந்துவிட்டுப் போகிறார். இந்தக்குழப்பத்தினால் ஹூல் தனது இராஜினாமாவைச் சமர்ப்பிப்பாரானால் நட்டம் அவருக்கல்ல, யாழ். பல்கலைக்கழகத்துக்குத்தான்.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

