03-12-2006, 02:28 PM
RaMa Wrote:பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் நடுவர்கள் தமது பணியை நன்றே செய்திருக்கின்றார்கள். ஓரு இடத்தில் சறுக்கி விட்டார்கள் என்றால் அதை மன்னித்து விடலாமே....இந்த கருத்துக்கள் அடுத்த முறை நடுவர்களாக வருபவர்களுக்கு ஒரு பயத்தை தோற்றுவிக்கின்றது.
நடுவர்கள் வந்து இதில் தமது நிலைப்பாட்டை கூறினால் உறவுகள் விளங்கி கொள்வார்கள் என்பது எனது கருத்து.
நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் தீர்ப்பு பற்றி
நீதிபதிகள் பின்னர்
தமது நிலைபாடுகளை சொல்வதில்லை.
கொடுக்கப்பட்ட தீர்பை ஏற்பதோ அல்லது ஏற்காமல் விடுவதோ
அவரவர் பிரச்சனை.................
நானும் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொண்டிருக்கிறேன்.
வென்றும் இருக்கிறேன்.
தோற்றும் இருக்கிறேன்.
வெற்றியை விட தோல்விகள் அதிகம்..............
பின்னர் நடுவராகக் கூட இருந்திருக்கிறேன்.
இங்கு என்னவோ மனம் நோகும் படியான நிகழ்வுகளே தொடர்கின்றன.
யாரும் டேக் இட் ஈசி எனும் நிலையில் "இது ஒரு பொழுது போக்காய்............" எடுத்துக் கொள்ளாமை மனதுக்கு உறுத்தலாய் இருக்கிறது.
[b]இனி தயவு செய்து இப்படியான பட்டி மன்றத்தையோ அல்லது இது போன்ற ஒரு நிகழ்வையோ தொடர வேண்டாம்.
இது களத்துக்குள் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி கோஸ்டி பூசல்களை .................
வேதனைகளை உருவாக்கும்.
அதற்கான பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை.
நாம் என்றும் போல் இனிமையாக இருப்போம்.
நன்றி.
வணக்கம்..................

