Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்
#1
<b>அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்நுட்பம் புதிய சாதனை!</b>

<b>* `நாசா', `பென்ரகன்' நிறுவனங்களும் முக்கிய விடயமென அங்கீகரிப்பு

* யாழ்.மருத்துவ பீட விரிவுரையாளர் ச.சிவானந்தனின் கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா பெரும் வரவேற்பு</b>

உலகில் அவ்வப்போது தனது கைவரிசையை காட்டி வல்லாதிக்க அரசுகளை கூட கிலி கொள்ளச் செய்துவரும் `அந்திரக்ஸ்' (Anthrax) உயிர்கொல்லி குறித்த கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு ஈழத்தமிழர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

<img src='http://img203.imageshack.us/img203/8291/p10tr.jpg' border='0' alt='user posted image'>

உயிரியல் சார் பயங்கரவாதத்தின் (Biological terrorism) ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படும் இந்த `அந்திரக்ஸ்' எம் கண்களுக்கு புலப்படாமலேயே எம்மை நெருங்கி பலியெடுக்கக் கூடிய நாசகார பொருளாகும்.

பழிதீர்ப்பதற்காக எதிரிகளை நோக்கி பொதிகளூடாக அல்லது தபால் மூலமாக பெரும்பாலும் அனுப்பப்படும் இது, பல நாடுகளிலும் பீதியை கிளப்பி வருகின்றது. தூதரகங்கள், பாதுகாப்பு மையங்களென முக்கிய அலுவலகங்கள் இதன் பீதியால் அடிக்கடி இழுத்து மூடப்படுகின்றன.

2001 இல் அமெரிக்காவில் `அந்திரக்ஸ்' தாக்குதல் இடம்பெற்றது. இலங்கையில் கூட `அந்திரக்ஸ்' அச்சத்தால் அலுவலகங்கள் மூடப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நோர்வே தூதரகம் `அந்திரக்ஸ்' பீதியால் சில நாட்கள் மூடப்பட்டன. இவ்வாறு `அந்திரக்ஸ்'ஸின் அடாவடித்தனங்கள் பலவுள்ளன.

<b>அது என்ன அந்திரக்ஸ்?</b>

பஸிலஸ் அந்திரக்சிஸ் (Bacillus anthracis) எனும் பக்ரியாவால் ஏற்படுகின்ற, தொற்றக் கூடிய நோயே `அந்திரக்ஸ்'. வளியில் பரவக்கூடிய இவ்வகை பக்ரீறியா உயிர்களை குடிக்கவல்லது என்பதால் பயங்கரவாதிகளால் நாசகார ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது.

வேறு பொருட்களுடன் இக் கிருமியையும் பொதியாக்கி தமது இலக்குகளை நோக்கி அனுப்பி அங்கு அழிவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைக்காக இது பயன்படுத்தப்படுகின்றது.

கடிதங்கள், பொதிகளூடாக உயர் அதிகாரிகளின் முகவரிகளுக்கு இதை அனுப்புவதன் மூலம் தொலைவிலிருந்தே அவர்களை கொல்லக்கூடிய சதித் திட்டத்துக்கும் இந்த கொடிய பக்றீரியா உதவுகின்றது.

அஞ்சல் அலுவலகங்கள், விமான நிலையங்கள், அரசியல் தளங்கள் என முக்கிய இடங்களுக்கு இது அனுப்பப்பட்டிருக்கின்றது. இதேவேளை, கடிதங்கள்/பொதிகளில் தூள் போன்ற பொருளை கண்டதும் `அந்திரக்ஸ்' வந்துவிட்டதென கிலிகொண்டு ஓடிய சந்தர்ப்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, இதை உடனடியாக எப்படி இனங்கண்டு கொள்வதென்பது சவாலாகவே இருந்து வந்துள்ளது.

இந்த உயிர்கொல்லி "ஆயுதத்தை" எதிர்கொள்ள அரசாங்கங்களின் பாதுகாப்புப் பிரிவுகள் இருவேறு முதற்கட்ட திட்டங்களை கொண்டிருக்கின்றன. முதலாவது, மேலும் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் இடம் பெறுவதை முறியடிப்பது. மற்றையது `அந்திரக்ஸ்'ஸின் அச்சறுத்தலால் ஏற்படும் விளைவுகளை குறைத்தல் - இதற்கு உரிய நேரத்தில் சரியான தகவல்களை வழங்கி பொது மக்களுக்கு உண்மை நிலையை புரியவைத்தலே முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது, எம்மை நெருங்கிவந்த பொருள் `அந்திரக்ஸ்' கிருமியா? அல்லது வேறெதுவுமா? என்பதை உடனடியாக கண்டறியக்கூடிய தேவையே அரசாங்கங்களால் உணரப்பட்டுள்ளது. ஏனெனில், பல இடங்களில் `அந்திரக்ஸ்' புரளிகள் ஏற்பட்டு அலுவலகங்கள் மூடப்பட்ட சம்பவங்களே அதிகம்.

`அந்திரக்ஸ்' கிருமியா? என்பதை அறிவதற்காக ஏற்கனவே தொழில்நுட்பமுள்ளது. ஆனால், அது மிகவும் சிக்கலானது. வேறு பொருட்களில் கலந்திருக்கும் `அந்திரக்ஸ்' கிருமியை பிரித்தறிவதற்கு புளோரொசன்ஸ்ஸுடன் வெப்பம்/ கழிஒலியை பயன்படுத்துதல் அல்லது ஈர இரசாயன முறையை பயன்படுத்துதல் தொழில் நுட்பமே இதுவரை காலமும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

இத் தொழில்நுட்பத்தை சிறந்ததொன்றாக நிபுணர்கள் கருதவில்லை. ஏனெனில், இச் சோதனைக்கு அதிகளவு நேரம் தேவைப்படுகிறது. அதீத பணம் செலவளிக்கப்படுகின்றது. அத்துடன், இச் சோதனை முறையும் சிக்கலானது.

ஆகவே, ஓர் புதிய தொழில்நுட்பமொன்றை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகள் செற்பட்டு வருகின்றனர். இவர்களை முந்திக் கொண்ட `அந்திரக்ஸ் கண்டுபிடித்தல்' தொழில்நுட்பமொன்றை கண்டுபிடித்து புதிய சாதனை படைத்துள்ளார் தமிழரொருவர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட விரிவுரையாளர் சரசானந்தராசா சிவானந்தன் தான் இப் புதிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்.

நியூஸிலாந்தின் கன்ரபறி பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கற்கையை மேற்கொண்டு வரும் சிவானந்தனின் இப் புதிய கண்டுபிடிப்பை அமெரிக்க பாதுகாப்புத்துறை நிறுவனமான `பென்ரகன்' மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `நாசா' போன்றவை முக்கியமானதொன்றாக வரவேற்று ஆவணப்படுத்தியுள்ளன.

<b>கன்ரபறி பல்கலையின் அறிக்கை</b>

கன்ரபறி பல்கலைக்கழக பேராசிரியர் லூ றெய்னிஸ்ஸின் மேற்பார்வையில் சிவானந்தன் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் `அந்திரக்ஸ்' உயிர்கொல்லி பக்ரீறியாவை மாத்திரமன்றி, பல்வேறு வகையான பக்ரீறியாக்களை குறித்த மாதிரியிலிருந்து விரைவாக பிரித்தறிந்து இனங்காண முடியுமெனவும் சாதாரண கலங்களிலிருந்து புற்றுநோய்க் கலங்களை வேறுபடுத்தி பார்க்கக் கூடிய திறன் இப் புதிய தொழில் நுட்பம் மூலம் கிடைத்திருப்பதாகவும் கன்ரபறி பல்கலைக்கழத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

கழியூதாக் கதிர்வீச்சை பயன்படுத்தி புளோரொசன்ஸ் (FluoreScence) எனப்படும் முறை மூலம் இக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்திலும் பார்க்க இது மிக எளிதானதென தெரிவிக்கும் அவ்வறிக்கை, இவ் புதிய கண்டுபிடிப்பு நம்பகமான மற்றும் வினைத்திறனான தொழில்நுட்பமாக இருக்கும் என்பது ஆய்வு கூடத்தில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கை சிவானந்தனின் கண்டுபிடிப்பு குறித்து மேலும் குறிப்பிடுகையில்;

இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்ட `அந்திரக்ஸ்' பிரித்தறியும் தொழில் நுட்பம் சிக்கலானது. ஆனால், இப் புதிய கண்டு பிடிப்பு மூலம் பல நன்மைகள் எமக்கு கிடைக்கும்.

முதற்கட்ட நன்மைகளாக நான்கை குறிப்பிடலாம். பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை மிக மிக இலகுவானது. விரைவாக குறிப்பிட்ட பொருளில் `அந்திரக்ஸ்' உள்ளதா?, இல்லையா? என்பதை அறிந்து விட முடியும். இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்குமான செலவு மிகக் குறைவு. இந்த தொழிநுட்ப சாதனத்தை எளிதில் தூக்கிச் செல்ல முடியும். இவையே அந்த 4 முதற்கட்ட நன்மைகளாகும்.

எமது பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் பீட ஆய்வு கூடத்தில் இத் தொழில்நுட்பத்தின் தரம் குறித்த சோதனைகள் நடைபெற்றன. இதன் போது புதிய கண்டுபிடிப்பு நம்பகமானதாகவும் வினைத்திறனுடையதாயிருக்குமெனவும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

`அந்திரக்ஸ்' உயிர் கொல்லி பக்ரீறியா எம்மை நெருங்கியுள்ளதா? என்பதை அறிவதற்கான உத்தியே உலகில் `அந்திரக்ஸ்' க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய இடத்திலுள்ளது. உதாரணமாக, பொதியொன்றில் வந்த தூள் போன்ற பொருளில் `அந்திரக்ஸ்' கிருமி உள்ளதா என்பதை உடனடியாக அறிந்து கொள்வதற்கான தொழில்நுட்பமே வேண்டியிருந்தது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப் புதிய தொழில்நுட்பம் முக்கியத்துவம் மிக்கது. மாதிரியில் அந்திரக்ஸ் உள்ளதா?, இல்லையா? என்றால் "ஆம்" அல்லது "இல்லை" என்ற விடையை இத் தொழில் நுட்பம் உடனடியாக தந்துவிடுகின்றது. இதுதான் இதன் முக்கியத்துக்கு பிரதான காரணம். `அந்திரக்ஸ்' புரளியால் அடிக்கடி அலுவலகங்கள் மூடப்படுவதை இது தடுக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது

நன்றி தினக்குரல்...http://www.thinakural.com/New%20web%20site.../Article-13.htm
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில் - by Danklas - 03-12-2006, 01:44 PM
[No subject] - by Danklas - 03-12-2006, 01:50 PM
[No subject] - by KULAKADDAN - 03-14-2006, 07:54 PM
[No subject] - by AJeevan - 03-14-2006, 08:29 PM
[No subject] - by sagevan - 03-14-2006, 08:40 PM
[No subject] - by Aravinthan - 03-14-2006, 11:34 PM
[No subject] - by tamilini - 03-15-2006, 06:38 PM
[No subject] - by Rasikai - 03-16-2006, 01:45 AM
[No subject] - by irumpumaNi - 03-21-2006, 11:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)