03-12-2006, 12:18 PM
பட்டி மன்றம் என்கின்ற வடிவம் ஒரு போட்டியாக பல்வேறு கருத்துக்களை வெளிக் கொணர்வதற்காகவும்,அது ஒரு போட்டியாக இருந்தால் விறு,விறுப்பாக இருக்கும் என்பதாலும், அதை ஒரு போட்டியாக்க இறுதியில் தீர்ப்பு என்றும், அதை வழங்க நடுவர்கள் என்றும் ஒரு கட்டுமானத்தில் ,வடிவத்தில் நடத்தப் படுகிறது.ஆனால் நடைமுறையில் எந்த விடயமுமே இவ்வாறு கறுப்பு ,வெள்ளயாக இருப்பதில்லை.
அகவே இங்கே தீர்ப்பு என்பது பட்டி மன்றத்துடன் முடிந்து போக வேண்டிய ஒன்று.இங்கு முக்கியத்துவம் பெற வேண்டியது கருத்தாளர் சொன்ன கருத்துக்களும்,அங்கே சொல்லப் பட்ட விடயங்களும்,தர்க்க ரீதியான கருத்தாடலுமே.இதை விடுத்து தீர்ப்பு எமக்கு சாதகமில்லை, நடுவர்கள் பிழை விட்டு விட்டனர் என்று புலம்புவது சிறு பிள்ளைத் தனமானது.இங்கே எவருமே வெற்றி பெறவில்லை.இங்கே வெற்றி பெற்றது யாழ்க் களமே,இங்கே அது சிந்தனையைத் தூண்டும் களமாக,ஆரோக்கியமான கருத்தாடல்கள் நடை பெறும் களமாக அது வெற்றி பெற்றுள்ளது.பலர் தாம் முன்னர் சிந்திக்காத ,அறியாத விடயங்களை இதன் பயனாக அறிந்து கொண்டனர்,அதுவே இங்கே யாழ்க் களத்தின் வெற்றியாகக் கணிக்கப் பட வேண்டும்.
அம்பயர் அவுட் குடுத்த பின், நான் மைதானத்தை விட்டு வெளியேற மாட்டேன் ,அந்த அவுட் அம்பயருக்கே பொருந்தும் என்று அடம்பிடிப்பது,சிறுவர்கள் ஆட்டக் களங்களில் செய்யும் செயல்,இங்கே நாம் எவரும் சிறுவர்கள் அல்ல , அம்பயர் பிழை விட்டிருக்கலாம், அது வேறு விடயம், ஆனால் விதிமுறை ,களம் என்று வரும் போது,இப்படியான விசயங்கள் நடை பெறக் கூடும்.அதற்காக சிறு பிள்ளைத் தனமாக அடம் பிடிப்பது,ஒருவரின் முதிர்ச்சியின்மையையே பிரதிபலிக்கிறது. இதை ஒரு பெரிய விடயமாக எடுத்து ,பேசுவது , நடுவர்களாக செயற்பட்டவர்களுக்கு சலிப்பையும், மன உளைச்சலையுமே தரும். இதை விடுத்து அடுத்த பட்டி மன்றத்தில் எமது கரிசனையைச் செலுத்துவது சாலச் சிறந்தது.