03-12-2006, 10:26 AM
<b>பட்டி மன்றம் இனிதே நிறைவு பெற்று முடிவுகளும் வந்துவிட்டது. வெற்றி பெற்ற நன்மை அணியினருக்கும்,சளைக்காது தமது திறமையான வாதங்களை முன்வைத்த தீமை அணியினருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். </b>
<b>இங்கு நடைபெற்றது நட்புணர்வோடுகூடிய பட்டி மன்றம் எனும் பெயரிலான கருத்து பரிமாற்றமே. இதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்த்து உடனடியாக கூறமுடியாத பல விடயங்களை அவை நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கலாம், அறிந்து கொள்ளமுடிந்தது.</b>
அதற்கப்பால் பட்டி மன்றம் எனும் தலைப்பிட்டதனால் அதன் வரையறைக்குள் நின்று அனைவரும் வாதிட்டு சிறப்பாக கருத்துக்களை வைத்திருந்தார்கள்.
இதுவே பொதுவாக ஒரு தலைப்பில் கருத்து வையுங்கள் என்றால் அது கருத்து திசைதிருப்பல்களுக்குட்பட்டு வெறெங்கோ இழுக்கப்பட்டு தலைப்பு மூடப்பட்டு கூட இருக்கலாம்.
போட்டி என்று வந்துவிட்டால் ஒரு அணி வெல்வது இயற்கை. இது துடுப்பாட்ட ரெஸ்ட் போட்டி அல்ல வெற்றி தோல்வி இன்றி முடிந்தது என அறிவிக்க.
<b>நடுவர்கள் தமது தீர்ப்பை சரியாக சீர்தூக்கி பார்த்து வைத்துள்ளார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.</b>
<b>அதில் ஒரு சொற்பிரயோகத்தை வைத்து அவர் பக்க சார்பாக நடந்துவிட்டார் எனும் வகையில் குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறையாக படவில்லை</b>.
<b>அத்துடன் இன்று ஓரணியில் இருப்பவர்கள் நாளைய பொழுதுகளில் நடக்கும் பட்டி மன்றங்களில் வேறணியில் வாதம் புரியலாம். நடுவராக இருப்பவர் வாதிடுபவராகவும், வாதிட்டவர் நடுவராகவும் இருக்கலாம். உதாரணம் சோழியன் அண்ணா போல்.
இது அனைவரையும் பயிறுவிக்கும், திறமையையும் வெளிகொணர்ந்து வளர்க்கும் ஒரு பயிற்சிகளமே. அவருக்கு தகுதியில்லை, இவருக்கு தகுதி இருக்கிறது என்று சொல்லி ஒருவரை ஒருவர் தாக்கும் இடமல்ல.
[b]தலைமை பொறுப்பில் இருப்பதும், வாதியாக இருப்பதும் , நடுவராக இருப்பதும் , வெவ்வேறு பரிமாணங்களில் ஒவ்வோருவரையும் வளர்க்க, அனுபவங்களை பெற உதவும்.
எனவே ஒருவரை ஒருவர் சீண்டும், அல்லது குற்றம் சாட்டும் பாணிகளை விடுத்து முன்னோக்கி நகர்வோம்.</b>
நன்றி.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>