Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும்
#3
புலவர் குழந்தை (01-07-1906 - 22-09-1972)



"தென் திசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன்இ - என்றன் சிந்தையெலாம் தோள்களெல்லாம் பூரிக்குது அடடா!"
புதைக்கப்பட்ட இராவணத் தமிழ் மாவீரத்தைஇ தமிழர்கள் இனம் கண்டு கொண்டால்இ தமிழர் ஏற்றம் பெறுவர் என்ற எண்ணத்திலேதான்இ தன்னுடைய சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிப்பதாகஇ சொற்களிலே முறுக்கேற்றி முழக்கமிட்டார்இ புரட்சிக் கவிஞர்.


மாற்றானின் மனைவியை விரும்பியவன் எனப் பொய்க் கவிதை புனைந்துஇ இராவணனுடைய உற்றார் உறவினர்களையே அவனுக்கு எதிராகப் போராடுபவர்களாக முன் நிறுத்தியது ஆரியப் பார்ப்பனீயம். "ஆரிய மாயை"க்கு ஆட்பட்டுஇ நாட்டைக் கெடுக்கும் ஊற்றைச் சடலங்களுக்கு ஊக்கமளித்து வரும் தீய சக்தியாய்இ கோடரிக் காம்பாய்த் தமிழினத்தை ஆரியத்துக்கு அடிமையாக்கத் தமது தமிழ்க் கவித் திறனைக் கருவியாகக் கொண்டார்இ கம்பர்.
1946ஆம் ஆண்டுஇ செந்தமிழ்க் குழந்தை செப்பினான் அறிவுல கொப்பு மாறே" என்று புரட்சிக்கவிஞர் வழங்கிய சிறப்புப் பாயிரத்தோடுஇ இராவண காவியம் வெளி வந்தது. கம்பனின் இராமாயணத்தை இராவண காவியமாக மாற்றியமைத்ததின் மூலம் செந்தமிழ்ப் பெருமக்களின் சிந்தனைத் தீயை நெய்யூற்றி வளர்த்திட்டார். புலவர் குழந்தை அவர்கள். தமிழகத்தில்இ கம்பருக்குப் பின்இ எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின் வெளிவந்த இராவண காவியம் தேனாற்று வெள்ளம்! கற்கண்டுக் கட்டி!

ஐந்து கண்டங்கள் - 57 பாடல்கள் - 3100 பாடல்கள் உள்ளடக்கம் கொண்ட இராவண காவியம் "தமிழ்" "தமிழ்" என்றே முழங்குகின்றது! இக் காவியம் இயற்றத் துணிவைத் தந்தது யார்?
புலவர் குழந்தை கூறுகிறார்:

"கம்பர் திருநாளும் பெருநாளும்இ கம்பர் மாநாடும்இ கம்பராமாயணக் கருத்தரங்கும்இ பாட்டரங்கும்இ பட்டிமன்றமும்இ விரிவுரையும்இ விளக்கவுரையும் நடத்தப் பெறும் அத்தகு சூழ்நிலையில்இ "இராவண காவியம்" என்னும் பெயரில் ஒரு பெருங்காவியம் செய்யும் அத்தகு உணர்ச்சியினையும்இ உள்ளத் துணிவினையும் எனக்கு உண்டாக்கியவர் தன்மான இயக்கத் தந்தை பெரியார் அவர்களே!ஔ
1948இல் காங்கிரஸ் ஆட்சியில் இப்பெருங்காவியத்திற்கு அளித்த பரிசு என்ன?

ஆம்! இராவண காவியம் எனும் இயல் நூலுக்கு விதிக்கப்பட்ட "தடை"தான்! தி.மு.க. ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது 17.05.1971இல் இத் தடை நீக்கப்பட்டது. தமிழர் இன ஏற்றமே ஊற்றெடுத்துப் பொங்கும் "இராவண காவியம்" இயற்றிய புலவர் குழந்தை பற்றி நாம் அறிய வேண்டாமா?
புலவர் குழந்தை அவர்களின் சொந்த ஊர்இ கொங்கு நாட்டுக் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓலவலசு என்னும் சிற்றூராகும். "ஓலவலசுப் பண்ணையக்காரர்" எனும் பழங்குடியில் முத்துச்சாமிக்கும் சின்னம்மையாருக்கும் 1.7.1906 அன்று ஒரே மகனாக பிறந்தார்.

இவர் பள்ளியில் படித்ததுஇ எட்டு மாதங்களே. பத்து வயது சிறுவனாக இருக்கும்போதேஇ ஒரு பாட்டைப் பிறர் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையின் புதுப்பாட்டினைப் பாடிடும் திறனை இயற்கையாகப் பெற்றிருந்தார். தொடக்கக் காலத்தில் அம்மன் மீது பக்தி கொண்டுஇ "கன்னியம்மன் சிந்து"இ "வீரக் குமாரசாமி"இ "காவடிச் சிந்து" முதலான நூல்களை 1925 வரை எழுதிக் கொண்டிருந்தார். இவர் ஊரின் சுற்றுப்புறங்களில் தமிழ்ப் புலவர் எவருமில்லாத நிலையில்இ தாமாகவே முயன்றுஇ கற்றுஇ தமிழில் புலமைப் பெற்றார். மேலும்இ தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.
தான் படித்துஇ பட்டம் பெற்றது மட்டுமன்றிஇ தம் ஊரிலுள்ள இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அந்த இளைஞர்களைக் கொண்டுஇ வயதில் பெரியோர்களுக்குக் கையெழுத்துப் போடப் பழக்கினார். இவ்வாறு தான் பிறந்த ஊரின் தற்குறித்தனத்தைப் போக்கினார். 1925இல் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துஇ பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். "பெரியார் சீடர்"இ "கருப்புச் சட்டைக்காரர்" என்று ஊரால் கூறுமளவுக்குக் கட்சிப்பற்றுள்ளவராக இருந்தார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். 1938-1948 ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போர்களில் இவர் பங்களிப்பு உண்டு. பாடல்கள் இயற்றியும்இ சொற் பெருக்காற்றியும் செயலாற்றினார்.

஑தமிழ்நாடு தமிழர்க்கே!ஒ என்ற இயக்கத்தின் எழுச்சியின் போதுஇ ஑தமிழ்நாடு தமிழருக்கேஒ என்ற அச்சுக் கட்டைகள் செய்து கொடுத்துஇ ஒரு துணி வியாபாரி மூலம் வேட்டிஇ துண்டுஇ சேலைக் கரைகளில் அச்சிட்டுத் தமிழ்நாடு முழுவதும்இ பரப்பிய பெருமை புலவர் குழந்தைக்கே உண்டு. 1946 முதல் 1950 வரை ஓவேளாண்ஔ எனும் மாத இதழை நடத்தினார். விதவை மணம்இ கலப்பு மணம்இ சீர்திருத்த மணம் முதலிய செய்யும் அளவுக்கு வேளாள இனத்தாரிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். நூற்றுக்கணக்கான விதவை மணங்களையும் நடத்தி வைத்துள்ளார்.
1931இல் மாவீரன் பகத் சிங் உள்ளிட்ட விடுதலை வீரர்களைஇ ஆங்கிலேயே ஆட்சியினர் தூக்கிலிட்டுக் கொன்ற போதுஇ அவர்தம் கொள்கைப் பற்றினை உணர்ச்சி மிக்கப் பாடல்களாக இயற்றினார். அப்பாடல்கள் "புலவர் குழந்தை பாடல்" என்னும் நூலில் உள்ளன.
தமிழ்ச் செய்யுள் மரபு சிதையாமல் இருக்க வேண்டும் என்ற நன்னோக்கு இவரிடமிருந்தது. "கொங்கிளங்கோ" என்ற புனை பெயரும் இவருக்கு உண்டு. பவானி நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் முப்பதெட்டு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். புலவர் குழந்தையின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார் ஆவார். இவர்கட்கு சமத்துவம்இ சமரசம் என்னும் இரு பெண் மக்கள் பிறந்தனர்.

புலவர் குழந்தை அவர்கள் குறள் ஒழுக்கத்தைஇ ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதைப் பெரியதாகக் கொண்டவர். ஒழுக்கமிக்கவர். இவர் ஒரு புரட்சிப் புலவராக இருந்திட்டாலும்இ அமைதியும் அடக்கமும் கொண்டவராகஇ ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையையே அமைத்துக் கொண்டார். ஈரோட்டில் ஓவிடுதலைஔ ஆசிரியராக அண்ணா பணியாற்றிய போதுஇ புலவர் குழந்தை அவர்களைப் ஑புலவர்ஒ என்றே அழைப்பார்.

தமிழ்இ தமிழினம்இ தமிழ்நாடு என்பனவற்றை முந்நாடியாகத் கொண்டஇ தமிழ்ப் பெருங்காவியமாம் "இராவண காவியஒத்தை அளித்த புலவர் குழந்தை 22.9.1972இல் மறைந்தார்.
அவர் மறைந்தாலும் இராவண காவியமாய் அவர் புகழ் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்.


¿ýÈ¢ - ¦ºõÀÕò¾¢


ÌÈ¢ôÒ - Òò¾ý þô§À¡Ð þó¾ ¾¸Åø ÁðΧÁ ¯ûÇÐஇ §Áľ¢¸ ¾¸Åø Å¢¨ÃÅ¢ø ¾Õ¸¢§Èý . ¿ýÈ¢
!




-
Reply


Messages In This Thread
[No subject] - by putthan - 03-11-2006, 02:57 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-12-2006, 10:22 AM
[No subject] - by stalin - 03-12-2006, 07:44 PM
[No subject] - by தூயவன் - 03-13-2006, 04:01 AM
[No subject] - by Luckyluke - 03-13-2006, 07:37 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-13-2006, 09:18 AM
[No subject] - by Luckyluke - 03-13-2006, 10:49 AM
[No subject] - by Thala - 03-13-2006, 10:57 AM
[No subject] - by Luckyluke - 03-13-2006, 11:34 AM
[No subject] - by Thala - 03-13-2006, 11:45 AM
[No subject] - by Luckyluke - 03-13-2006, 12:34 PM
[No subject] - by sinnakuddy - 03-13-2006, 01:11 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-13-2006, 04:34 PM
[No subject] - by Thala - 03-13-2006, 09:35 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-14-2006, 03:58 PM
[No subject] - by sinnakuddy - 03-14-2006, 08:24 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-18-2006, 02:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)