03-12-2006, 06:14 AM
<b>பூவனமே பொன்மலரே
மறந்தாயா என்னை?
புருவமதில் என் உருவமதில்
இருக்கின்றாய் பெண்ணே!
சிறு கவியாய் பெரும் கனவாய்
சிதைக்கின்றாய் என்னை -போ
வழி விடவா வரம் தரவா?
வாடுதடி நெஞ்சு!
காதலனாய் உன்
கால் கொலுசாய்
இருந்தேனே ஒரு பொழுது
காலமெலாம் போனதடி
என் கண்களை இனி
சுட்டு தள்ளு!
இருப்பேன் டா உனக்காய்
இருப்பேன் டா என்றாயப்பொழுது
இருக்கேன்மா இருக்கேன்மா
நீதான் எங்கே இப்பொழுது?
சிறுமலரே -பனிமழையே
செண்பகமே - நான்
பாவமா இல்லையா சொல்லு?
உன் பார்வையதால்
இந்த பாவியெனை- அன்று
ஏன் கொன்றாய் சொல்லு!
கேளடியோ-மயிலழகே என்
வாசலதை மண்மூடி
போனாச்சு -ஏனடியோ
வண்ண கோலம்
இனி அது எதுக்கு சொல்லு! :wink:</b>
மறந்தாயா என்னை?
புருவமதில் என் உருவமதில்
இருக்கின்றாய் பெண்ணே!
சிறு கவியாய் பெரும் கனவாய்
சிதைக்கின்றாய் என்னை -போ
வழி விடவா வரம் தரவா?
வாடுதடி நெஞ்சு!
காதலனாய் உன்
கால் கொலுசாய்
இருந்தேனே ஒரு பொழுது
காலமெலாம் போனதடி
என் கண்களை இனி
சுட்டு தள்ளு!
இருப்பேன் டா உனக்காய்
இருப்பேன் டா என்றாயப்பொழுது
இருக்கேன்மா இருக்கேன்மா
நீதான் எங்கே இப்பொழுது?
சிறுமலரே -பனிமழையே
செண்பகமே - நான்
பாவமா இல்லையா சொல்லு?
உன் பார்வையதால்
இந்த பாவியெனை- அன்று
ஏன் கொன்றாய் சொல்லு!
கேளடியோ-மயிலழகே என்
வாசலதை மண்மூடி
போனாச்சு -ஏனடியோ
வண்ண கோலம்
இனி அது எதுக்கு சொல்லு! :wink:</b>
-!
!
!

